தாம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்தும் மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் கனரக ஆயுதங்களுடன் நடமாடி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது தொடர்பில் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு மனவுறுத்தல்கள் எதுவும் கிடையாது என இந்தியாவின் ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதென இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தைப் பாராட்டும் வகையில் தீட்டப்பட்டிருந்த ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதநேயத்துக்கான மோதல் தவிர்ப்பு வலயம் எனும் கருதுகோலையாவது அங்கீகரிக்க மறுப்பது, அவர்கள் தங்களை எந்த மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்கின்றார்களோ அம்மக்களின் உயிர்கள் மற்றும் நலன்கள் என்பன தமது இந்தப் போலி விடுதலைப் போராட்டத்தில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.
புலிகளின் பிடியிலிருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்த தமிழ் மக்களின் தொகை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இப்புள்ளி விபரம் தமிழ் மக்கள் அவர்களின் சுய விருப்பத்தின்பேரில் தம்மோடு இருப்பதாக புலிகள் கூறிவரும் பொய்ப் பிரச்சாரத்தின் யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது.
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் சிவிலியன்களை எந்தவித தடைகளுமின்றி தப்பிவர அனுமதிக்குமாறு புலிகளை நிர்ப்பந்திப்பதுமே தற்போதுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குரிய ஒரே தீர்வாகும் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
thevi
புலிக்கு மட்டுமல்ல புலன் பெயர்ந்தவர்களுக்கும் கிடையாது.
thurai
கப்பலோட்டிய தமிழர், கடலை வென்றதமிழர், வன்னிக்கு வணங்காமண் கப்பல் விட்ட தமிழர், எல்லாம் வாய்ப்பேச்சில்தான்.
கப்பல் தாழும்போது கப்பலின் கப்ற்ரன் முதலில் பிரயாணிகளைக் காப்பதே வழக்கம். ஈழத்தமிழரில் கப்பல் விட்ட பரம்பரையில் வந்த எங்கள் தலைவரோ, மக்கள் அனைவரையும் தாழவிட்டு அவ்ர்களின் முதுகில் ஏறி நின்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இவரைக் காக்க உலகமெங்கும் தங்கள் உயிரைக் கொடுக்க சாகும் வரை உண்ணாவிரதம் வேறு.
துரை