அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

‘யாழ்தேவி’ புகையிரத சேவை 6 முதல் தாண்டிக்குளம் வரை – ஓமந்தை ரயில் நிலைய மீள்கட்டுமான பணிகளும் இன்று ஆரம்பம்

sri-lankan-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை இருபது வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக எதிர்வரும் 06ஆம் திகதி சனிக்கிழமை தாண்டிக்குளம் வரை பயணம் செய்யவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அன்றைய தினமே ஓமந்தை ரயில்வே நிலையத்தின் மீள்கட்டுமானப் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அவர் கூறினார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை நடத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். அதன் ஆரம்ப கட்டமாக, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போகும்போது முதன் முதலாக வரும் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரை எதிர்வரும் 06ஆம் திகதி யாழ்தேவி பயணம் செய்யவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்படும் யாழ்தேவியில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் தாண்டிக்குளம் வரை சென்று மீண்டும் கொழும்பு திரும்பவுள்ளனர். சேதமாக்கப்பட்ட ஓமந்தை ரயில் நிலையத்தின் கட்டுமாணப்பணிகளும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அமைச்சின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சர் தொடங்கொடவின் பூதவுடல் இன்று பாராளுமன்றில்

dodangoda.jpgகாலஞ் சென்ற நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலிக்காக இன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரையில் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அமைச்சர் சனிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து அவரது பூதவுடல் நேற்று (31) மாலை 3.30 மணி முதல் இன்று காலை 9 மணிவரை கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

பாராளுமன்றத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சரது பூதவுடல் பொதுமக்கள் சகிதம் வாகன பவனியுடன் அவரது சொந்த ஊரான காலி கராப்பிட்டியவுக்கு எடுத்துச் செல்லப்படும். இதேவேளை, அமரசிறி தொடங்கொடவின் மரணத்தையடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற வெற்றிடத்துக்கு தேர்தலில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சந்திம வீரக்கொடி புதிய பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறவுள்ளார்.

‘பிக்பென்’ கோபுரத்திற்கு வயது 150

bigben_ap_.jpgலண்டன் மாநகரத்தின் மிகப் பிரபலமான ஓர் அடையாளச் சின்னம் இன்று தனது 150வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கடிகாரங்களுள் ஒன்றாக அறியப்படும் ‘பிக்பென்’ கோபுரம் ஒன்றரை நூற்றாண்டுகாலமாக மக்களுக்கு நேரம் காட்டிவருகிறது.

சரியாச் சொல்ல வேண்டுமென்றால் ‘பிக்பென்’ என்பது அந்த கடிகாரத்தோடு சேர்ந்துள்ள பெரிய மணியைத்தான். ஆனால் காலப்போக்கில் அந்த கடிகாரத்துக்கும் அந்தக் கோபுரத்துக்கும் அந்தப் பெயர் ஏற்பட்டுவிட்டது.

இந்த மணிக்கோபுரம் லண்டன் மாநகரத்தின் மிக முக்கியச் சின்னமாக பிரபலம் அடைந்துவிட்டது. லண்டனுக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோபுரதின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

பிக்பென் கடிகாரம் ஓட ஆரம்பித்தது 1859ஆம் ஆண்டும் மே மாதம் 31ஆம் தேதி.

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட அடையாள அட்டை

manig.jpgஇடம் பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி செயலகமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து அடையாள அட்டைக்குரியவரின் விரல் அடையாளங்களுடன் கூடிய அடையாளஅட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றம் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யு எல் எம் ஹால்தீன் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள 10 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வினியோகிக்கப்படவுள்ளது. இவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முகாம்களில் 2 இலட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் போதும், மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கும், இந்த அடையாள அட்டை மிகவும் உபயோகப்படும் என குறிப்பிட்டுள்ளார்

இடம் பெயர்ந்தோரை தங்கவைக்க ஆறாவது நிவாரணக் கிராமம் – 2500 பேரை தங்கவைக்க முதற்கட்ட ஏற்பாடு

rizad_baduradeen1.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை தங்கவைப்பதற்கென வவுனியாவில் ஆறாவது நிவாரணக் கிராமம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

வலயம் -5 என்ற பெயரிலான இந்த நிவாரணக் கிராமத்தில் முதற் கட்டமாக 2500 பேர் தங்க வைக்கப்படவுள்ளனர்.

வலயம்-5 நிவாரணக் கிராமம் அமைப்பதற்கான ஆரம்பப்பணிகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று ஆரம்பித்து வைத்தார். குறித்த நிவாரணக் கிராமத்தை சுத்திகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்கென ஏற்கனவே ஐந்து கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இதன்படி, அருணாசலம் நிவாரணக் கிராமத்தில் (வலயம்- 3) 40,599 பேரும், பொன்னம்பலம் ராமநாதன் நிவாரணக் கிராமத்தில் (வலயம்- 2) 80,548 பேரும், ஆனந்தகுமாரசுவாமி (வலயம்- 1) நிவாரணக் கிராமத்தில் 14,962 பேரும் கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் (மெனிக் பாம்) 21,655 பேரும் வலயம் 4இல் 28,919 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இவர்களுக்கான சகல வசதிகளும் அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபவம் – 3ஆம் திகதி காலிமுகத்திடலில்

last-mulli.jpgபுலி களுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக் கொண்ட வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவமொன்று எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்படவிருக்கிறது.

இந்த வைபவத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், இந்த வைபவத்தில் முப்படைகளின் தளபதியும், இலங்கை ஜனாதிபதியு மான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதன்போது, முப்படையினரின் அணி வகுப்பு இடம் பெறுவதுடன், யுத்தகளத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகச நிகழ்வுகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டு ள்ளது.

இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணுவ கடற்படை, விமானப் படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது கள முனையிலிருந்து செயற்பட்ட படை வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நிகழ்வில் விசேட கெளரவிப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்

fonseka-000.jpgவட மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடமாகணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அந்த மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சமாக உள்ள இராணுவத்தை முன்று இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு

karunanidhi.jpgதமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்

rizad_baduradeen1.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 250,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நீர் வினியோகத் திட்டம் ஒன்று இன்று (31.05.2009) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார். 400 மில்லியன் ரூபா செலவில் யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த நிவாரண சேவைகள் அமைச்சும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை

rohithaogollagama.bmpவிடு தலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.