அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனவரியில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் : ஜனாதிபதியின் உறுதி குறித்து பன் கீ மூன் மகிழ்ச்சி

ban-ki-moon.jpgவவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பது தமக்கு மகிழ்வைத் தருவதாக ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெர்வித்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் – வோல்டர் கெலின் சந்திப்பு

210909walter-kalin.jpgஇடம் பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விசேடப் பிரதிநிதி வோல்டர் கெலின் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் தொடர்பாகக் வோல்டர் கெலின் கேட்டறிந்து கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஐக்கிய நாடுகள் சபை, இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்து வரும் உதவிகளுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.எதிர்காலத்திலும் இவைபோன்ற உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அமைச்சர், வோல்டர் கெலினிடம் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த விசேட பிரதிநிதி வோல்டர் கெலின், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் எப்பொழுதும் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்-

24-moammar-gadhafi.jpgகாஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது. பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை  நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல. பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

இதுவரை 40 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியமர்வு -அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

anura_priyadarshana_yapa.jpgபயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுள் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல்,  ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை அவசரமாக மீள்குடியமர்த்துமாறு ஐ.தே.க. தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் கூறி வருவதை ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். அவர்கள் கூறுவதைப் போல இடம்பெயர்ந்த மக்களை எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி அவரசாமாகக் குடியேற்றி அம்மக்களை மற்றுமொரு சிரமத்தினுள் ஆழ்த்த அரசாங்கம் தயாரில்லை.

வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணி பூர்த்தியானதும் அம்மக்களுக்குத் தேவையான சகல வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு விரைவில் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் ரணில் உட்பட எதிர்க்கட்சியினருக்கு எந்தப் பொறுப்புணர்வும் கிடையாது. ஆனால் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு அந்தப் பொறுப்பு உண்டு. நாம் அதனை கடமையுணர்வுடன் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

இதுவரை மன்னார்,  யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க் கட்சிகளின் சிறு கூட்டம் கூட்டமைபப்பா அல்லது முன்னணியா? – தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேள்வி

240909anura_priyadarsana_yapa.jpgஎதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு சிறு கூட்டமாக உள்ளதை கூட்டமைப்பு என்று அழைப்பதா அல்லது முன்னணி என்று அழைப்பதா என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கேள்வி எழுப்பினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  அவர் தொடர்ந்து கூறுகையில்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சில எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு சிறு அமைப்பாக உருவாகி உள்ளது.  இதனை கூட்டமைப்பு என்றும் கூற முடியாது அதேநேரம் அதனை முன்னணி என்றும் அழைக்க முடியாது. அந்த அளவுக்கு அதற்கு அரசியல் வலுவான நிலை இல்லை. இணைந்துள்ள ஒவ்வொருவரும் மக்களின் ஆதரவில்லாத தனி நபர்களே. இவர்களின் இந்த ஒன்று கூடலுக்கு கூட்டமைப்பு என்றோ முன்னணி என்றோ கூறாமல் வேறு ஒரு சொல்லையே பெயராக இடவேண்டும்.

வலுவான சொல்லை பெயராக இடும் அளவிற்கு அவர்களின் ஒன்று கூடல் பலம்வாய்ந்த நிலையில் இல்லை.

எந்தக் கூட்டமைப்போ அல்லது முன்னணியோ வந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயங்காது.  எந்த சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய வலுவான நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. 80 வீத  வாக்குப் பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கம் எந்தக் கூட்டமைப்பு வந்தாலும் தயங்காது முகம் கொடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

malaysia.jpgமலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது.  28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா  உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.

2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

கலாமுக்கு மீரட் பல்கலையின் கெளரவ டாக்டர் பட்டம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மீரட்டில் உள்ள செளத்ரி சரன்சிங் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கே.காக் கூறுகையில், கூறுகையில், பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழா நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படும் என்றார்.

ஜீ.எஸ்.பி. சலுகை – விசாரணைகளில் இலங்கை பங்குபற்றாது: தூதுவர்களினூடாகவே தகவல் பரிமாற்றம்

240909gl.jpgஇலங்கைக்கு கிடைக்கும் ஜீ.எஸ்.பி.சலு கையை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கான நோக்குடன் விண்ணப்பங்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபி விருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதற்கென எமது நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் தலையிடவும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித் தார். வாய்மொழிமூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றின் போது ஜீ.எஸ்.பி. சலுகை பற்றியும் கேள்வியொன்றை எழுப்பினார்.

ஜீ.எஸ்.பி. சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பாக பிரசல்ஸில் உள்ள எமது தூதுவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுமாறு அவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இராஜ தந்திர மட்டத்தில் இந்தச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை பெறுவது தொடர்பான விசாரணைகளில் இலங்கை பங்குபற்றாது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தேவையான தகவல்களை தூதுவர்களினூடாக அரசாங்கம் வழங்கும் என்று கூறினார்.

ஏ-9 வீதியினூடாக 10 இலட்சம் பாடநூல்கள் தரைவழியாக நேற்று அனுப்பி வைப்பு

240909book.jpgஏ-9  வீதியினூடாக 10 இலட்சம் இலவசப் பாட நூல்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் பத்தர முல்லையில் உள்ள கல்வி அமைச்சில் நேற்று நடந்தது.

கடந்த காலங்களில் கப்பல் மூலம் கடல் மார்க்கமாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இம்முறை ஏ-9 வீதியினூடாக தரைமார்க்கமாக 108 மில்லியன் செலவில் 14 லொறிகளில் 10 இலட்சம் புத்தகங்கள் யாழ்ப்பாணம் மேலதிக கல்விப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடல்மார்க்கமாக 3 மில்லியன் செலவிலேயே புத்தக விநியோகம் இடம்பெற்றது. ஆனால், இம்முறை தரைமார்க்கமாக 1.3 மில்லியன் செலவிலேயே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணத்துக்கு மொத்தமாக 12 இலட்சம் புத்தகங்கள் தேவைப்படும் நிலையில் மிகுதி இரண்டு இலட்சம் புத்தகங்கள் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தேவையான 30 மில்லியன் புத்தகங்களில் இதுவரை 12 மில்லியன் புத்தகங்கள் மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 18 மில்லியன் புத்தகங்கள் 30.11.2009 இற்குள் விநியோகிக்கப்படுமென பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு உள்ளிட்ட முழு இலங்கையிலுமுள்ள 42 இலட்சம் மாணவ மாணவிகளுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய இலவச பாடநூல்களை ஒரே நாளில், அதாவது டிசம்பர் 07 ஆம் திகதி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதி அமைச்சர்சச்சி தானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- இவ்வாண்டுக்கான புத்தகங்கள் மீள் பதிப்பு செய்யு முன்னர், பாடநிபுணத்துவ மிக்க ஆசிரியர் குழுவினால் தேவையான திருத்தங்கள் கவனமாக செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்புடனும் திருத்தங்களுடனும் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை மாணவர்களுக்கு தேவையான 306 வகையிலான 30 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் இப்புத்தகங்களுக்கான மொத்த செலவு சுமார் 3000 மில்லியன் ஆகும்.

03.09.2009 தொடங்கப்பட்ட விநியோக நடவடிக்கைகள் 3011.2009 வரை ஏறக்குறைய மூன்று மாத காலப் பகுதிக்கு இடம்பெறும். இவ்வாறு அனுப்பப்படும் புத்தகங்கள் நாடு முழுவதிலுமுள்ள மத்திய நிலையங்களூடாக விநியோகிக்கப்படும்.

தேசிய பாடசாலைகள் மற்றும் மாணவர் தொகை இரண்டாயிரத்துக்கு மேல் காணப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாக கல்வி அமைச்சினால் நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

கமத்தொழில் அபி. அமைச்சின் ரூ 68 1/2 கோடி குறைநிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு

190909paddy.jpgவிவசாயிகள் தொடர்பான புதிய வரை விலக்கணத்தை உள்ளடக்கியதும், நெற் செய்கையில் ஈடுபட்டு வரும் குத்தகைக்கார விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலான கமநலச் சேவைகள் சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு அறுபத்து எட்டு கோடியே 53 லட்சம் 93, 938 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்புப் பிரேரணை யொன்றை சமர்ப்பித்து பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் சிறப்புரிமைகளை, பாதுகாக்கவும், அவர்களுக்கு உரித்துடையவற்றை பாதுகாக்கவும் புதிய கமநல சேவைகள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சட்டவாக்கம் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலம் விரைவில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும்.

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக எமது அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் தொடர்பாக கொண்டுவரப்படும் இச்சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும். இக்கடமையிலிருந்து விடுபடவும் கூடாது.

வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும். அந்த அளவுக்கு விவசாயத்துறை ஊக்குவிக்கப்பட்டு தன்னிறைவும் காணப்படும். 1976ஆம் ஆண்டிலிருந்து கடந்த காலங்களில் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு தொகை கமநல சேவைகள் அமைச்சுக்கு கோரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.