எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம் – பேச்சில் தீர்வு கிட்டாவிடின் அரசு தலையிட்டு தீர்த்து வைக்கும்

26parliament.jpgதோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்க ளும் முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளன. அதில் தீர்வுகிட்டாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி. எம். ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் ஒரு போதும் நழுவிவிடவில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டக் கம்பனிகள் ஆகிய இரு தரப்பதையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இத்துறை வீழ்ச்சியடைந்துவிடும் என்பதை உணர்ந்தே அரசாங்கம் செயற்படுகின்றதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பி.யும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக எழுப்பிய பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் கோரி பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப்மைக்கல் பெரேரா எம்.பி. விசேட கவனயீர்ப்புப் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி, மனோ கணேசன் எம்.பி., அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி. எம். ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண நீண்டகாலமாக பேச்சுவார்த் தைக்ள நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்ச ங்கக் கூட்டமைப்புக்கும் முதலாளிமார் சம் மேளனத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இதற்கி டையில் நாம் இது பற்றி அழுத்தம் கொடு ப்பது முறையல்ல.

இப் பேச்சுவார்த்தை நிறைவில் தீர்வு எட்டப்படாதபட்சத்தில் அரசாங்கம் இதில் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களுக் குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க அர சாங்கம் தயாராகவுள்ளது.

எனினும் இதனை அரசியலாக்க வேண்டாம் இது ஒரு தேசிய வருமானம் சம்பந்தமான பிரச்சினை என் பதை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி கூறியதாவது:

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை வென்றெடுப்பதில் தொழிற் சங்கங்களுக்குள்ள உரிமையை வழங்குவது அவசியம். கூட்டுக்கமிட்டி பேச்சுவார்த்தை அல்லது சம்பள நிர்ணயசபை இரண்டின் மூலம்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றார்.

அரசு தலையிட வேண்டுமென நாம் கேட்க வில்லை. சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதில் தொழிற்சங்கங்களுக்கு உள்ள உரிமை கொடுக்கப்படவேண்டுமெனவும் பிரதியமைச்சர் கூறினார்.

காங்கிரஸில் சேர்ந்தார் ரோஜா

999-roja.jpgராசியில் லாதவர் என்ற பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் நடிகை ரோஜா. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா, சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி தொகுதிகளில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோற்றார். சொந்தக் கட்சியினரே தன்னைத் தோற்கடித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டரா.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்கிரசில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ராசியில்லாத அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஆந்திர காங்கிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்குமேல் சும்மா இருந்தால், ‘ஜோலியை முடித்துவிடுவார்கள்’ என பயந்த ரோஜா, நேற்று ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்ந்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி காங்கிரஸ் கட்சிதான் எனக்கு எல்லாமும். அந்தக் கட்சிக்காக உழைப்பேன்!” என்றார். 

பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுப்பு

Dr Kohonaஇலங் கையின் வெளியுறவுச் செயலர் கலாநிதி பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுத்திருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வெளியுறவுச் செயலரின் விசா விண்ணப்பம் போதிய கால அவகாசத்துடன் கையளித்திருக்கவில்லை எனக் காரணம் கூறி நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கலாநிதி பீற்றர் ஹேய்ஸை நேரில் அழைத்து விளக்கம் கோருவதற்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோரைப் பிரிந்த இரு குழந்தைகள் வவுனியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு

999children.jpgபெற் றோரைப் பிரிந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு குழந்தைகளை கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றம் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

தயாபரன் புகழரசி என்ற 4 வயது சிறுமியும், தயாபரன் சாகலரசி என்ற 2 வயது குழந்தையுமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

தமது சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது இரத்த உறவினர்கள் இருந்தால் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளர் கோரியுள்ளார்.

புல்மோட்டை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த இவர்களை இனங்கண்ட சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள், இவர்கள் தொடர்பாக கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதையடுத்தே நீதிமன்றம் இவர்கள் இருவரையும் வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தி்ற்கு அனுப்பி வைத்துள்ளது

இலங்கைக்கு இந்திய அணி செல்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

999.jpgஇலங் கையில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக, இந்திய கிரிக்கட் இலங்கை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு 512 சட்டத்தரணிகள் ஆதரவு கையொப்பங்களை இட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடையை விதிக்க சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிட்ப்பட்டிருந்த இந்திய கிரிக்கட் சபை, நேற்று தமது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தது.

அதில் தமது சபைக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்வதில்லை என்றும் தமது சபையை அரசாங்கம் அமைக்கவில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தது. எனவே இந்த மனுத்தாக்கல்  தொடர்பில் தமக்கு பதிலளிக்கமுடியாது என்றும் இந்திய கிரிக்கட் சபை குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை விதிக்க மறுத்துள்ளது

யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 ஊடாக காஸ் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு

2009_sep_04.jpgநீண்ட கால இடைவெளிக்கு பின்பு தரை வழி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விற்பனைக்கான முச்சக்கரவண்டிகளும் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்து நிலைமை வழமைக்கு வந்து கொண்டு இருப்பதினால் அனைத்து பொருட்களையும் கொழும்பு விலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு விற்பனை செய்ய வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஏ-9 வீதி வழியாக பொருட்களை ஏற்றிச் செல் லும் லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் புறப்பட்டு வருகின்றன.

அதேநேரம் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடை யிலான பயணிகள் இபோச பஸ் சேவை தினமும் 10 முதல் 15 வரையில் இரு வழி பயணத்தினை மேற்கொள்கின் றன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் திராட்சைப்பழங் கள் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐ. தே. கட்சி தலைவர் ரணில் தென் பகுதி மக்களின் நிரந்தர எதிரி

109009dalss.jpgஐ. தே. க. தலைவரின் கடந்த காலச் செயற்பாடுகள் காரணமாக அவர் தென் பகுதியின் எதிரியாகவே தென் பகுதி மக்களால் கருதப்படுகிறார். இதனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவர் மோசமான முறையில் நிராகரிக்கப்படுவாரென அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- 1988-89 காலப் பகுதியில் தென் பகுதி இளைஞர்கள் கூட்டாக கொல்லப் பட்ட சம்பவங்களுக்கும் பட்டலத்த வதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்க மீதே குற்றஞ் சுமத்தப்படுகிறது. அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் உமா ஓயா திட்டம் என்பவற்றை நிறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது 30 வருட அரசியல் வாழ்வில் அவர் எடுத்த முடிவுகள் காரணமாக, ரணில் விக்கிரமசிங்க தெற்கின் விரோதியாக கருதப்படுகிறார்.

1988-89 கால கூட்டுக் கொலைகள், பட்டலந்த வதை முகாம் என்பன காரணமாக பல்லாயிரம் தென் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த கால வடுக்களை தென் பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லை.

ஊவா தேர்தலில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறை முகம் மற்றும் விமான நிலையத்தையும் உமா ஓயா திட்டத்தையும் நிறுத்துவதாக கூறியதை தென் பகுதி மக்கள் மறக்க வில்லை. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

தென் பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலகில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். தென் பகுதி மக்களின் அபிமானத்துக்குரிய அவரை கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.

அவருக்கு பாதிப்பு ஏற்படுவதை தென் பகுதி மக்கள் விரும்பவில்லை. எனவே இந்தத் தேர்தலில் தென் பகுதி வரலாற்றில் ஒருபோதுமில்லாத பெரு வெற்றியை ஐ.ம.சு.மு. பெறும். ஐ.தே.க. வின் தலைமைத்துவம் காரண மாக பெருமளவு ஐ.தே.க. பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அணி அணியாக அரசுடன் இணைந்து வருகின்றனர்.

ரூ.5 இலட்சம் கள்ள நோட்டுக்களுடன் பெண்ணும் சகாக்களும் கைது

1000mony.jpgஐந்து இலட்சம் ரூபாய் கள்ள நோட்டிக்களுடன் பெண் ஒருவரை கெக்கிராவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இந்தப் பெண் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பா டுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-

கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தேனீர் அருந்தச் சென்ற பெண் ஒருவர் 2000/= ரூபாயை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக ஹோட்டல் உரிமை யாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து அதனை சோதனையிட்டுள்ள அதே சமயம் குறித்த பெண்ணையும் மடக்கிப் பிடித்து கெக்கிராவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து கெக்கிராவ, மலகடவல என்ற கிராமத்திலுள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (2000) இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் 227யும் (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 4 இலட்சத்து 54 ஆயிரம்) ஆயிரம் (1000/=) ரூபாய் கள்ள நோட்டுக்கள் 56 யும் (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 56 ஆயிரம்) மீட்டெடுத் துள்ளதுடன் கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட மை போத்தல்கள்–10, சிலின்டர்-6, வெள்ள நிறத்தாள்கள் மற்றும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றார்.

இந்தப் பெண் வழங்கிய மற்றுமொரு தகவலின் அடிப்படையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, போலி நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கணனி மற்றும் ஏனை உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 6 இலங்கையர் இந்தியாவில் கைது

_arrested.jpgசட்ட விரோதமான முறையில் பிரான்ஸுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச் சீட்டு மற்றும் போலி வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹைதராபாத் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையிலிருந்து தமிழகம் சென்று, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவர்கள் பிரான்ஸ் செல்ல வீசா பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா விசாரணை

100909rennie_shackleton_etc_aap.jpgகிழக்குத் திமோரில் இந்தோனேசிய சிறப்புப் படையினரால், 1975 ஆம் ஆண்டில், 5 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போர்க்குற்றப் புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஆஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்தை இந்தோனேசியப் படைகள் ஆக்கிரமிக்கவிருந்தது குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காக ஃபலிபோ நகரில் இந்த செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக 2007 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி கண்டுபிடித்தார்.

இந்தச்சம்பவம் திமோரிய போராளிகளுடனான சண்டையின் போது செய்தியாளர்கள் இடையில் அகப்பட்டதனால் இடம்பெற்றது என்று இந்தோனேசியா எப்போதும் மறுத்து வந்தது. அத்துடன் இந்த விடயம் முடிந்துபோன ஒன்று என்றும் இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.