எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சக்வித்தியை பிடிக்க உதவியோருக்கு இன்று பணப்பரிசில்

sakvithi.jpgநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சக்வித்தி ரணசிங்க மறைந்திருந்த இடம் தொடர்பாக தகவல் வழங்கிய சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் பணப்பரிசில்கள் வழங்கவுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் உட்பட சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை பொலிஸ் மா அதிபரினால் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

கண்டியில் – பரீட்சை எழுத வந்த மாணவி கட்டப்பட்ட நிலையில் மீட்பு

கண்டியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவியொருவர் நேற்று க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வந்திருந்த போது, பாடசாலை வகுப்பறையொன்றில் வாயும் கைகளும் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்க ப்பட்டார். குறிப்பிட்ட மாணவி பரீட்சை மண்டபத்தில் காணப்படாத நிலையில் பரீட்சை அதிகாரிகள் அவரைப் பற்றி மற்றைய மாணவிகளிடம் விசாரித்துள்ளனர்.

அந்த மாணவி பரீட்சையில் தோற்றுவதற்காக பாடசாலைக்கு வந்ததை கண்டதாக சில மாணவியர் பரீட்சை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் நடத்திய போது, குறிப்பிட்ட மாணவி வாயில் பழந்துணி அடைக்கப்பட்டு கைகள் பிணைக்கப்பட்டு, நாற்காலி ஒன்று டன் சேர்த்து வெறுமையாக இருந்த வகுப்பறையொன்றில் இருந்ததை அதிகாரி கள் கண்ணுற்றுள்ளனர். பரீட்சை தொடங்கி அரை மணி நேரத்துக்கு பின்னரே இந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் பரீட்சை ஆணையாளரின் அங்கீகாரத்துடன் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்ற அதி காரிகள் அனுமதி வழங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் இந்த மாணவி பாடசாலை அதிபர் ஒருவரின் மகள் என்றும் நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்கின்றன.

குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

Police_Logoயாழ். குடா நாட்டில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போது பல குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 66 பேர் சிக்கியுள்ளதாக யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இவ்வாறான அதிரடி நடவடிக்கையின் போது, நூற்றுக்கும்  மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை வைத்திருந்தமை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், ஆகியார் இவர்களில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட அதிரடி நடவடிக்கைகள் யாழ்.குடாநாட்டிலும் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் குற்றச்செயல்களை பெருமளவில் தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் வடபகுதி நடனக் கலைஞர்களுக்கு சென்னையில் குறுங்கால நடனப் பயிற்சி.

வடமாகாணத்திலுள்ள இளம் நடனக் கலைஞர்களுக்கு தென்னிந்தியாவில் குறுங்கால நடனப் பயிற்சி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பயிற்சி சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்கள் நடைபெறும் எனவும், இதற்காக 1.6 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கொண்டுள்ளார். வடக்கில் வளர்ந்து வரும் நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், நடன நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யவும் இப்பயிற்சி நடைபெறுவள்ளதாகவும், இதற்கென 16 ஆண், பெண் நடனக்கலைஞர்கள் வடக்கிலிருந்த தெரிவு செய்யப்பட்டுள்ளதாவும், விரைவில் அவர்கள் சென்னைக்குப் பயணமாகவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம்பெண் வடமராட்சியில் மயங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை மீட்கப்பட்ட இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணின் கூக்குரல் கேட்டதாகவும் பயம் காரணமாக எவரும் அப்பகுதிக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் இப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் எதற்காக துன்னாலைப் பகுதிக்குச் சென்றார்? அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? என்பன குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு யாழ். படைத்தலைமையிடம் யாழ். அரச அதிபர் கோரிக்கை!

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள விவசாயக் காணிகளில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி cவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரதான தொழிலாகவும், குடாநாட்டு பொருளதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்வது விவசாயம் ஆகும்.  போரின் காரணமாக மிக நீண்டகாலமாக யாழ்.குடாநாட்டில் விவசாயம் நலிவுற்றுள்ளது. தற்போது போர் முடிவுற்ற நிலையிலும் பல விவசாயக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கியிருக்கின்றன.

உயர்பாதுகாப்பு வலயத்தில் தங்களின் ஊர்களை இழந்தவர்கள் இன்னமும் அகதிகளாகவே அவல வாழ்க்கை வாழ்கின்றனர். போரின் பின் ஏனைய இடங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையிலும் குறித்த மக்கள் மட்டுமே இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். இந்த மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் வயற்காணிகளில் மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அத்துடன் குடாநாட்டில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து விரைவில் நிறைவேற்றுவதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி ஹத்துருசிங்கா உறுதியளித்துள்ளார் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேர்வினின் அலுவலகம் மூடப்பட்டது

mervyn.jpgமுன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகம் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் பலி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இரு போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பின் தடுக்க சென்ற சக கைதியொருவர் காயமுற்ற நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

245 கிலோமீற்றர் நடக்க வேண்டும்

ஐ.நா. மனித உரிமைகள் சபையை நோக்கிய மனித நேயப் பயணத்தில் சிவந்தன் ஜெனீவாவை அடைய இன்னும் 245 கிலோமீற்றர் நடக்க வேண்டும். ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி அவர் 19 ஆவது நாளாக இன்று நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

நிதிச்செயலாளர் பதவிக்கு முரளி ரகுநாதன்

mano.jpgஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் பதவிக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் நியமிக்கப்பட்டார். இவரது பெயரை கட்சித் தலைவர் மனோ கணேஷன் முன்மொழிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் வழிமொழிந்தார்.