சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

srilanka-cri.jpg“பாகிஸ் தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. மூன்று நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 150 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது கன்னி டெஸ்ட் செஞ்சரியைப் பெற்றார். பவாட் அலாம் பெற்ற ஓட்டங்கள் 168

ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய 7 விக்கட்டுக்களையும் 26 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து இழந்தது.

இலங்கை அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசிய நுவன் குலசேகர மொத்தமாக 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இவரைத் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸ{க்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வர்ணபுர 54 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பவாட் அலாம், நுவன் குலசேகர தெரிவானர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

பங்ளாதேஷூக்கு வெளிநாட்டில் கிட்டிய முதல் டெஸ்ட் வெற்றி!

cricket.jpgகிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட,  3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து  களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள்

pakisthan-cri.jpg“இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 170 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 171 ஓட்டங்கள் பெற வேண்டும்

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பவாட் அலாம் கன்னிச்சதம்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது முதல் போட்டியில் கன்னிச்சதம் குவித்துள்ளார்.

அவர் ஆட்டமிழக்கமால் 102 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் யூனிஸ்கான் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 28 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று ஆட்டம் முடியும் வரை துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் குமார் சங்கக்கார 87 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும், சமரவீர 21 ஓட்டங்களையும், டில்சான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்து வீச்சில் உமர்குல் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் சஹிட் அஜ்மல் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். அப்துர்ரவூப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதேவேளை இலங்கை அணி சார்பாக ஹேரத் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

அவுஸ்திரேலிய “ருவென்ரி20′ போட்டியில் மெண்டிஸ், முரளி விளையாடுகின்றனர்

cricket.jpgஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ், உள்ளூர் “ருவென்ரி20′ போட்டியில் விளையாட தெற்கு அவுஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் விளையாடவுள்ளார்.  அவுஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உள்ளூர் “ருவென்ரி20′ போட்டிகளில் ஒவ்வொரு அணி சார்பிலும் இரண்டு சர்வதேச வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். இம்முறை தெற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் விளையாட அஜந்த மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மெண்டிஸின் முகாமையாளர் ரொஷான் அபேசிங்க கூறுகையில்;  “சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “ருவென்ரி20′ உலகக் கிண்ணத் தொடரில் மெண்டிஸ் சிறப்பாகப் பந்துவீசி அணியின் வெற்றிக்குக் கை கொடுத்தார். தவிர, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இவர் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினார். இவரது வருகையால் அணியின் இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இவர் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடாததால் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் சிறந்த பயிற்சியாக அமையும்’ என்றார்.

இதேபோல், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் மேற்கிந்தியாவின் டுவைன் பிராவோ இருவரும் விக்டோரியா அணி சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வீரர் லசித் மாலிங்கா மற்றும் மேற்கிந்தியாவின் கிறிஸ் கெய்ல் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத் தொடரில் பங்கேற்க மேலும் சில சர்வதேச வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ப்ஸ் மற்றுமொரு உலக சாதனை

pelps.jpgஅமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் 100 மீற்றர் பட்டபிளை நீச்சல் போட்டியிலும் உலக சாதனை படைத்தார். இந்தியானா போல்ஸில் நடைபெற்றுவரும் அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே பெல்ப்ஸ் இந்த உலக சாதனையை படைத்தார். இதன்போது அவர் 100 மீற்றர் படர்பிளை போட்டியை 50.22 வினாடிகளில் முடித்தார்.

முன்னதாக தனது சக நாட்டு வீரரான இயன் கிரொக்கர் நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 மீற்றர் பட்டபிளை போட்டியை 50.40 வினாடிகளில் முடித்ததே சாதனையாக இருந்தது.

இதன்படி பொல்ப்ஸ் தனிநபர் பிரிவில் படைத்த உலக சாதனைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முன்னர் அவர் 200 மீற்றர் பிரீஸ்டைல், 200 மீற்றர் பட்டபிளை, 200 மற்றுர் 400 மீற்றர் மெட்ளே நீச்சல் போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சானியா திருமணம் – நிச்சயதார்த்தம் முடிந்ததும் தந்தை தகவல்

saniya222.jpgஐதராபாத் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு 2 ஆண்டுகள் கழித்து திருமணம் நடைபெறும் என்று அவரது தந்தை தெரிவித்து உள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், அவருடன் சிறுவயது முதலே பழகிய அவரது குடும்ப நண்பரும், தொழிலதிபருமான சோரப் மிர்சாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொண்ட பின்னர், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 10 கிலோ கேக்கை வெட்டி மகிழ்ந்தனர். அந்த கேக்கில் சானியா- சோரப் ஜோடியின் பெயர் எழுதப்பட்டு வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருந்தது. அழகுபதுமையாக ஜொலித்த சானியா, டைமண்ட்டுகள் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான ‘காக்ரா சோலி’ என்ற விலை உயர்ந்த ஆடையை அணிந்து இருந்தார். பிரபல டிசைனர் ஷாந்தனு- நிகில் வடிவமைத்திருந்த இந்த ஆடையின் மதிப்பு 20 இலட்சம் இந்திய நாணய ரூபா ஆகும். இதனை நிச்சயதார்த்த பரிசாக மணமகன் சோரப் மிர்சா வழங்கினார்.

நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தாலும், திருமண திகதி பற்றி உடனடியாக எந்த முடிவும் செய்யப்படவில்லை. இது பற்றி சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், ‘சானியாவுக்கு முஸ்லிம் முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. அவர் தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவார். அவர் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய விரும்புவதாக என்னிடம் கூறியிருக்கிறார். எனவே அவரது ஆசைப்படி 2 ஆண்டுகள் கழித்தே திருமணம் நடத்த முடிவு செய்து உள்ளோம். அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்க உள்ளார்’ என்றார்.

சோரப் மிர்சா எம்.பி.ஏ. படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரது படிப்பு முடியவும் 2 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே 2011ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி 74 ஓட்டங்கள் முன்னிலையில் – 36 ஓவர்களில் பாகிஸ்தான் 10/90

srilanka-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களில் முன்னணியில் உள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதன் இன்னிங்சில் 36 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 90 ஓட்ட ங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. ஐந்து நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்

குஹரம் மன்சூர் 03
பவாட் அலிம் 16
யூனுஸ் கான் 00
மொஹமட் யூசுப் 10
மிஸ்பஹா உல் ஹக் 00
சுஐப் மலிக் (ஆ.இ) 39
கம்ரன் அக்மல் 09
அப்துர் ரவூப் 00
உமர் குர் 01
மொஹமட் அஹமர் 02
சஹீட் அஜ்மல் 00
உதிரிகள் 10
மொத்தம் 90

பந்து வீச்சு:
குலசேகர 9-3-21-4,
துஷார 8-3-23-2,
மென்டிஸ் 10-3-20-3,
மெத்திவ்ஸ் 3-0-15-1,
ஹேரத் 6- 3-5-0

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்

வர்ணபுர 11
பரணவித்தாரன 26
சங்கக்கார (ஆ.இ) 81
ஜயவர்தன 19
சமரவீர (ஆ.இ) 13
உதிரிகள் 14
மொத்தம் 164

பந்துவீச்சு:
உமர்குல் 10-1-28-1,
மொஹமட் அஹமர் 9-2-30-0,
அப்துல் ரவூப் 8-1-31-0,
சஹீட் அஜ்மல் 15-1- 45-2,
யூனூஸ்கான் 06-1-21-0.

இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து முத்தரப்பு போட்டி விபரம்

srilanka-cri.jpgஇந்தியா,  நியூஸிலாந்து, இலங்கை அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் தின அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10 ஆம் திகதி இந்தியா தன் முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. செப்டம்பர் 12 ஆம் திகதி இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன.

இதன் பிறகு இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்த 4 போட்டிகளும் பிரேமதாச விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும்.

ஒரு-பால் உறவு குற்றமாகாது என்ற தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

gayrightcelectration.gifஇந்தியா வில் பரஸ்பர சம்மதத்துடன் ஒரு பால் உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு்ள்ளது.

இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஒரு பால் உறவினரின் உரிமைகளுக்குப் போராடும் நாஸ் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுரேஷ் குமார் கெளஷல் என்ற ஜோதிடர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.