VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன்

Jaffna_Map1. 

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும் சர்வதேச வலைப்பின்னல் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. 2007 ஓகஸ்ட்டில் வெளியான Jane’s Intelligence Review, என்ற புலனாய்வுச் சஞ்சிகை விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானத்தை 200 – 300 மில்லியன் டொலர்கள் என மதிப்பிட்டு உள்ளது. அதன்படி  Revolutionary Armed Forces of Colombia (FARC),  என்ற கொலம்பியாவைச் சேர்ந்த ஆயுதக் குழுவிற்கு அடுத்தபடியாக எல்ரிரிஈ செல்வந்த இயக்கம் என்ற நிலையில் இருந்தது. சர்வதேச கப்பல் வர்த்தகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வரை எல்ரிரிஈ உடைய வியாபாரம் பல்வகைப்பட்டது என்று Jane’s Intelligence Review தெரிவிக்கின்றது.

குறிப்பாக ரிஆர்ஓ மற்றும் எல்ரிரிஈ இன் முன்னிலை அமைப்புகளினூடாக நிதி திரட்டல்கள் இடம்பெற்றுள்ளது. இக்குற்றச்சாட்டை எல்ரிரிஈ மறுத்தே வந்தள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு மனமுவந்து நிதியை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு அழிவையும் நிதிதிரட்டுவதற்கான உபாயமாகவே எல்ரிரிஈ பயன்படுத்தி வந்தது. சுனாமி – சுனாமி நிதி, வெள்ளம் – கண்ணீர் வெள்ளம், வன்னி அவலம் – வணங்கா மண் என்று நிதி திரட்டலில் எல்ரிரிஈ க்கு நிகராக யாரும் இருக்கவில்லை. தங்களுடைய ஒட்டு மொத்த தலைமையே அழிந்த போதும் அதை வைத்தும் இன்னமும் நிதி சேகரிக்கப்படுகிறது. வன்னி முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்க நிதி சேர்க்கின்றனராம்.

மாவீரர் நிகழ்வில் கார்த்திகைப் பூ விற்றல் முதல் ஊர்வலங்களில் புலிக்கொடி, தமிழீழ பச், ரீசேட் என ஒரு வர்த்தக நிறுவனமாகவே அவர்கள் செயற்பட்டனர். இவ்விடயங்களில் எல்ரிரிஈ இன் வர்த்தக தொழில் தேர்ச்சி குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு வந்திருந்த இந்தியப் பொருளியலாளரும் இராஜதந்திரியுமான கிருஸ்ணனுடன் ஹரோ நகரசபை அறையொன்றில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் எல்ரிரிஈ இன் பொருளாதாரம் பற்றிக் குறிப்பட்ட கிருஸ்ணன், வரியை எப்படி அறவிடுவது என்று எல்ரிரிஈ இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு ‘இந்தியாவில் வாழ்பவர்களையே வரி செலுத்த வைக்க முடியவில்லை. ஆனால் ஈழத் தமிழன் ஒருவன் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவனுடைய வருமானத்தையும் அவன் செலுத்த வேண்டிய வரியையும் கணித்து வைத்து வரியை அறவிடும் அளவுக்கு நிர்வாகத் திறனுடைய அமைப்பு எல்ரிரிஈ’ என்று கிருஸ்ணன் விபரித்து இருந்தார்.

எல்ரிரிஈ வரி அறவிடுவதிலும் வியாபாரத்தைப் பெருக்கி வருமானத்தை பெருக்குவதிலும் காட்டிய ஆர்வத்தை அரசியலில் காட்டவில்லை. அரசியல் வங்குரோத்து ஒட்டுமொத்த அமைப்பையும் ஒரே நாளில் அழித்தொழிக்க வழிகோலியது. அன்று அழிந்தொழிந்தது புலிகளின் தலைமை மட்டுமல்ல புலிகளின் ஆவணங்களும் தான்.

200 – 300 மில்லியன் வருமானத்தை ஈட்டும் அமைப்பினுடைய வர்த்தகப் பெறுமதி – அவ்வமைப்பின் அசையும் அசையாச் சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்படுகிறது. எல்ரிரிஈ தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்ததால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச நிதி விடயங்கள் நீண்ட காலமாக கே பி இன் கட்டுப்பாட்டில் இருந்த போதும் சமாதான காலத்தில் பொட்டம்மானின் உளவுத்துறையால் கே பி ஓரம்கட்டப்பட்டு கஸ்ரோவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கே பி அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து தற்காலிகமாக ஓய்வுபெற்றார்.
 
எல்ரிரிஈ இன் சர்வதேச நியமனங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். வன்னியில் இருந்து ஐரோப்பாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்கள் – கஸ்ரோவுக்கு நெருக்கமானவர்கள் – பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நிதி மற்றும் அனைத்து விடயங்களையும் பெறுப்பேற்றனர். ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவின் பொறுப்பிற்கு வந்தது.

இப்புதிய நபர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டிய ஒருவர் அன்று கூறுகையில், ‘வன்னியில் துவக்கைப் போட்டுவிட்டு அப்படியே இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று அவர்களின் இயல்பை விபரித்தார்.

புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட கஸ்ரோ செப்ரம்பர் 11க்குப் பின்னான சூழலைப் புரிந்துகொள்ளாமல் புதியவர்களை வைத்து மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவுகள் தோற்றப் போய் மிகப்பெரும் நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியது.

2006ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரசின் புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையும் நெருக்குவாரத்தை வழங்கியது. 2009 முற்பகுதியில் கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ச்சியடைய மறைந்த எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக மீண்டும் கே பி யை நியமித்தார். ஆயினும் நிதி விடயங்கள் அவற்றின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கஸ்ரோவிற்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இந்நிலையில் மே 18ல் எல்ரிரிஈ இன் ஒட்டுமொத்த தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்களின் கைகளில் உள்ளது.

2.

தற்போது எல்ரிரிஈ இன் சர்வதேச வலைப்பின்னல் பாரிய அதிகார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்த அதிகாரப் போட்டிக்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல. புலிகளின் தலைவர் உயிருடன் நலமாக இருக்கின்றார் என்று சொல்லும் எல்ரிரிஈ பொறுப்பாளர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது மிக நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் அதன் 200 – 300 மில்லியன் டொலர் வருமானத்தையும் தற்போது வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புதிய தலைமையிடம் – கே பி இடம் எல்ரிரிஈ இன் சொத்துக்களையும் வருமானத்தையும் கையளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்குத் தயாரில்லை. அதனாலேயே இவர்கள் தமிழக அரசியல் வாதிகளைத் தூண்டிவிட்டு கே பி க்கு எதிராக அறிக்கைவிடத் தயங்கவில்லை. அதனால் சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள கடைசிவரை முரண்டு பிடிக்கின்றார்கள்.

மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவர் உயிருடன் இருக்கும்போதே சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே பி மட்டுமே பிரபாகரன் உயிரிழந்ததை அறிவித்து உள்ளார். முன்னர் கே பி யின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை வெளியிட்ட எல்ரிரிஈ சர்வதேச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுகொண்டு அஞ்சலி செய்துள்ளார். அதே போன்று வழுதி என்கின்ற புலிகளின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளதுடன் கே பி இன் கரங்களைப் பலப்படுத்தும்படி கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் அல்லர்.

ஆனால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன் – நோர்வே, ரிஆர்ஓ தலைவர் ரெஜி – லண்டன், ஒவ்வவொரு நாடுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் எவருமே இதுவரை உயிரிழந்த தலைவருக்கோ முக்கிய போராளிகளுக்கோ அஞ்சலி செலுத்துவதற்கே முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் கே பி க்கு எதிரான அணி ஒன்றை அவர்கள் அமைத்துள்ளனர். பெரும்பாலும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்ட இவர்கள் வல்வெட்டித்துறையை – வடமராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பெரும்பாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அந்த குலக் குழுமமாகவே புலிகள் இயக்கம் இயங்க முற்பட்டுள்ளது.

கே பி யும் கே பியை எதிர்க்கின்ற அணியினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் கே பி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரல்ல. அவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். அதனால் வல்வெட்டித்துறை குலக் குழுமத்தினால் அவர் நிராகரிக்கபட்டு உள்ளார். தற்போது கே பி உடன் சமரசத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களையும் அதன் வருமானத்தையும் வல்வெட்டித்துறைக் குழுமமே நிர்வகிக்கின்றது. இதில் பல நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அவ்வளவு இலகுவில் அவற்றை விட்டுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளர்கள்
முகிலன் – நோர்வே
அப்துல்லா – சுவிஸ்
பிரியன் – டென்மார்க்
வாகீசன் – ஜேர்மன் (மற்றும் ஐவர் அந்தந்த மாநிலங்களுக்கு பொறுப்பாக உள்ளனர்.)
மேத்தா – பிரான்ஸ்
தனம் – பிரித்தானியா
தமிழ் – கனடா
நெடியவன் – சர்வதேசப் பொறுப்பாளர்.
ரெஜி – சர்வதேச நிதிப் பொறுப்பாளர். (ரிஆர்ஓ ஊடாகவே புலிகள் அமைப்பின் நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றது.)

இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது முற்றாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது எழுந்தமானமான ஒரு நிகழ்வு அல்ல. இது புலிகளின் குலக் குழு மனோநிலையின் வெளிப்பாடே. புலிகள் அரசியல் ரீதியில் முதிர்ச்சி அடையாமையினால் இந்தக் குலக் குழு மனோநிலையில் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. வல்வெட்டித்துறை – வடமராட்சியில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் புலிகள் இயக்கம் குலக் குழுவுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொண்டது. புலிகள் இன்று தங்கள் குலத் தலைவனைப் பறிகொடுத்துவிட்டு அவரது பெயரை மட்டும் வைத்து அசையும் அசையாச் சொத்துக்களைப் பரிபாலனம் செய்ய முற்படுகின்றனர். அவர்களது அகராதியில் தமிழ் மக்கள் அசையும் சொத்துக்கள் என்ற வரையறைக்குள் வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3.

கே பி – வல்வெட்டித்துறை (வடமராட்சி) அணிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலை பலவீனப்டுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வே பிரபாகரன் உயிருடன் இருக்கம் போதே சில மாதங்களுக்கு முன்னதாகவே கே பி சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் ஏற்கனவே சர்வதேசரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக கே பி இருப்பது அவருக்கு சாதகமாக உள்ள விடயங்கள். ஆனால் மறைந்த தலைவர் வே பிரபாகரனுடன் இறுதி வரையும் இலங்கையில் உள்ள போராளிகளுடன் இன்னமும் உறவுகளைக் கொண்டிருந்த போதும் புலம்பெயர்ந்த நாடுகளில் எந்த ஒரு நாட்டிலும் கே பி க்கு ஒரு ஆதரவுத்தளம் இல்லை. புலி ஆதரவு ஊடகங்களிலும் புலி ஆதரவு அமைப்புகளிலும் கூட அவருக்கு கட்டுப்பாடு இல்லை. காரணம் அவையனைத்தும் அந்தந்த நாடுகளின் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. அதனாலேயே தனக்கென ஒரு இணையத் தளத்தை அவர் உருவாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற் கூட கே பி க்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் பொறுப்பாளரான ஜெயா என்ற ஜெயச்சந்திரன் சர்வதேச இணைப்பாளர் பொறுப்பு தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்து இருந்தவர்.

கேபிக்கு எதிரான அணி பலமாக இருந்த போதும் தலைமைத்துவ ஆளுமையுடன் ஒரு குலத் தலைவனை முன்னிறுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அவ்வாறு ஒருவரை முன்னிறுத்தம் போதும் அவர்கள் சாதாரண புலி ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு பொய் மூட்டைகளை கொட்டி உள்ளதால் அதற்கான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும். மேலும் இவர்களில் பலர் கடுமையான புலிப் போக்கையும் கொண்டுள்ளனர். இவர்களால் தற்போதுள்ள அரசியல் சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக அமையும்.

மாறாக கே பி புலிகளின் சில கடும்போக்குகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். யூன் 14ல் அவர் தேசம்நெற்றுடனான உரையாடலிலும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார். அந்த உரையாடலில் ஏகபிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தமிழ் அரசியல் அமைப்புகளுடனும் அவர் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

ஆயினும் புலிகள் மீதான விமர்சனம் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை அவர் முன்வைத்தால் பெரும்பான்மையான புலிகளிடம் இருந்து அவர் அன்னியப்படும் நிலையேற்படும். அதனால் அவ்விடயங்களில் அவர் அடக்கியே வாசிப்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனாலும் விவாதங்கள் உரையாடல்கள் எதுவும் இன்றி நாடுகடந்த தமிழீழ அரசுக்கான செயற்குழு நியமிக்கப்பட்டமை மற்றும் அவை தொடர்பான விடயங்கள் அவரால் உடனடியான ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் உள்ளதனை வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விவாதம் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றது. இலங்கை அரசு அரசியல் ரீதியான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன் வைக்காமல் தொடர்ந்தும் வன்னி மக்களை முட்கம்பிகளுக்குள் தடுத்த வைத்திருப்பது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இந்நிலையில் வல்வெட்டித்துறை (வடமராட்சி) குலக் குழு மனோ நிலைக்குள் இருந்து கொண்டு பரந்தபட்ட தமிழ் மக்களை பரிபாலனம் செய்ய முற்படுவது வேடிக்கையானது.

கடந்த காலம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கும் கனவை தமிழ் மக்களைப் பரிபாலனம் செய்யும் கனவை புலம்பெயர்ந்து வாழும் புலிகளும் புலிகளது ஆதரவு அமைப்புகளும் கைவிட வேண்டும். மக்களை ஒருமுறை ஏமாற்றிவிட்டிர்கள் என்பதற்காக எப்போதும் ஏமாறுவார்கள் என முடிவு கட்டிவிடக் கூடாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

122 Comments

 • tax
  tax

  ஜெயபாலன் எழுந்தமானமாக குலக்குழுக்கட்டுரையை எழுதிவிட்டீர்கள் எனநினைக்கிறேன். 2003 இல் அல்லது 2004 இல் வல்வெட்டித்துறை சார்ந்த சிலர் சர்வதேச வல்வை ஒன்றியம் என்பதை உருவாக்க முற்பட்டபோது அதனை மிக கடுமையாக பிரபாகரன் எதிர்த்து அந்த அமைப்புகட்டும் பணியைநிறுத்தியவர். தான் வல்வெட்டித்துறையான் என்பதை வைத்து வல்வெட்டித்துறையார் பிழைக்க முற்படுவதாக பிரபா சீறி விழுந்ததாக அறியக்கிடைத்தது. இதன்பின்னர் அந்த அமைப்புக்கட்டும் வேலைநிறுத்தப்பட்டது. இதேவேளை வல்வெட்டித்துறை என்ற அமைப்பினரிடையே பல்வேறு ஒழுங்கை ரீதியாகவும், ஊர் ரீதியாகவும், கோயில் ரீதியாகவும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. கேபி,பேபி இருவரும் கேகேஎஸ் சேர்ந்தவர்களாக புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்திலிருந்து முன்னணியில் இருந்தாலும் வல்வெட்டித்துறை பின்னணி மயிலிட்டி, தையிட்டியை சேர்ந்தவர்களுக்கு உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். அதேநேரம் இந்த இடங்களில் இருந்து தான் பிரபாகரனால் ஆரம்பத்தில் போராளிகளை அணி திரட்டமுடிந்ததால் அவர்கள் சினியோரிட்டிபடி புலிகளின் முன்னிலைக்கு வந்தனர்.ஆகவே இந்த புறநிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஜயர், உமா, ராகவன், புலேந்தி, செல்லக்கிளி, சந்தோசம், ராதா இவர்கள் எவரும் வல்வெட்டிதுறை அல்லவே?
  னெடியவன் – சித்தன்கேணி
  அப்துல்லா – கொக்குவில்
  மேத்தா – சாவகச்சேரி
  ரெஜி – வெற்றீலைகேணி

  Reply
 • Kovalam
  Kovalam

  நெடியவன் சித்தங்கேனி …….. திருமணம் முடித்தது வல்வெட்டி துறை.

  அப்துல்லா கொக்குவில் புகுந்தது வடமறாட்சி ……….

  மேத்தா சாவகச்சேரியில் இருந்தது ஆனால் பூர்வீகம் வடமறாட்சி …….

  ரெஜி வெற்றிலைகேனி ……..

  Reply
 • Waco
  Waco

  Please add.

  Mohankumar- Australia

  Reply
 • thurai
  thurai

  வி.வி.ரி என்றால் கடத்தலிற்குப் பெயர் போன இடம். எல்.ரி.ரி.இ. என்றால் கடத்தல்,கொலை,பயமுறுத்தலிற்குப் பெயர் போன அமைப்பு. இந்த இரண்டிற்கும் ஓரளவு ஒற்றுமையுண்டு.

  தமிழரின் உருமை, விடுதலை பற்ரியும்,நாட்டுப் பற்றுபற்ரியும் யார் பேசத் தகுதியுடையவ்ர்கள் என்பதை புலத்தில் வாழும் தமிழர் அனேகர் அறிந்தவர்களில்லை. இதனாலெயே எல்.ரி.ரி.இ என்னும் தமிழர்களிற்கு இணலும், பழமும் தராமல் விருட்சமாய் தமிழ்ரின் பொருளாதாரத்தை, இலங்கையிலும், புலத்திலும் விழுங்கி வாழ்ந்தார்கள்.

  துரை

  Reply
 • Veera Kathi Pillai Udayar
  Veera Kathi Pillai Udayar

  Puli Padai (LTTE) no longer an asset to Tamils But a Liability!

  · Puli Padai (LTTE – Tigers) should be dismantled Completely, because they are no longer an asset to Tamils, but a liability and a new organisation should be formed, learning from the mistake of LTTE, in the event of Sri Lankan Government refusing to grant rights to Tamils.
  · Though Talaivar (Pirabaharan) and his boys made lot of blunders, Tamil people whole heartily supported them, as they were fighting and won several battle, specially Elephant Pass battle and Katunayaka Airport attack.
  · Tigers were having a de facto state and managing it in a Totalitarian Dictatorship manner and Tamil people tolerated this because Tamil people believed one day we will get Eelam and we can run a Democratic Government and if puligal (LTTE) refused to give Democracy after establishing Eelam, Tamil people would have revolt against them.
  · Pirabaharan is puligal (Tigers) and Puligal (Tigers) is Pirabaharan and he maintained a one-man rule during the existence of Puli Padai (LTTE)
  · He made several mistakes and led us to the present position. First mistake is killing individuals. First Killing as admitted by him is that of Duraiappa. Duraiappa was a Young Mayor of Jaffna, Lawyer and defeated GG Ponnambalam at Jaffna Electorate. He was very popular among the poor people of Jaffna electorate and helped Jaffna Town people a lot. During 1970 Parliamentary Election Amirthalingam, Sivasithamparam and GG Ponnampalam lost the election. GG Ponnampalam gave up politics and abandoned Tamils and look after his wealth accumulated by him.
  · Amirthalingam and Sivasithamparam wanted to win the next election at any cost. S.J.V Selvanayagam After telling the Tamils that he is the leader who could safeguard Tamils, at the end he said, only God has to save Tamils and he could not do any thing, Tamils wasted their time with him.
  · Yogeshwaran wanted to contest Jaffna seat, but Duraiappa was a stumbling block. The Trio Amir, Siva and Yogeshwaran spread slanders about Duraiappa and branded him as Police informant and instigated Young boys to kill him, Young and immature Prabahana and Amir’s eldest son plot to kill Duraiappa and Pirabaharan carried out the murder.
  · Amirthalingam became Leader of Opposition and told Tamil people that he will get Eelam, other wise his body will come to eelam, covered by Raising Son Flag of TULF. But he ended up getting DDC- District Development Council and cheated Tamils.Jaffna Library was burned by UNP during DDC election
  · Pirabaharn and Umamaheswaran had a gunfight in Chennai and were in Madras jail. They were released on bail pending the Criminal case hearing. Pirabaharan jumped the bail and came to Jaffna and organized the Thinnaveli attack.
  · JR and UNP organized 1983 riots and Promoted Pirabaharan as Tamil leader and Indra Gandhi gave Training and Arms.
  · After the unfortunate death of Indra Gandhi, Rajiv Gandhi came to power and Pirabaharan was about to lose Vadamarachi Operation and Rajiv Gandi Saved him by intervening and send Indian Army and signed the Indo Sri Lanka agreement.
  · After the Indian Army leaving Sri Lanka with the joined action of LTTE and Premadasa, Pirabhan Killed Arirthalingam, Premadasa and Rajiv Gandhi. These are major mistakes on the one-man ruler.
  · LTTE chased out Muslims from Jaffna and Karuna and Karikalam led this Muslim eviction because some Muslim thugs and home guards attacked Tamils in Batticaloa. Karuna and LTTE killed Muslims civilians in Mosque.
  · Puli Padai (LTTE) also forcibly evicted half a million Tamils from Jaffna Peninsula and herded them into Vanni after the defeat of LTTE in Jaffna during 1995.
  · LTTE killed Premadasa and helped Chandrika to come to power and Chandrika is equally bad as Premadasa. Chandrika captured Jaffna and started war against LTTE and ended up in lousing Vanni and Elaphatpass.
  · LTTE forced thirteen EROS MPs to resign at gunpoint after 1989 election and allowed Douglus Devananda to become a minister.
  · Instead of fighting one enemy at a time, Pirabaharan fought ten enemies at a time and he only wanted money and Children of Tamils and never seek or listen their advice
  · Whether we like it or not Mahinda will be the leader for very many years and he will be the next one-man ruler of whole of Sri Lanka. No more Democracy for Singhalese, Tamils and Muslims.
  · LTTE used Tamils as human shield during the 2009 Vanni War and prevented Tamils leaving war zone at gun point (Taliban did not do this in Swat Valley in 2009) and gave a chance to Singhalese Army to Killed several innocent Tamils and several are wounded and disabled. LTTE said that they are the sole representative of Tamil and sole protectors of Tamils and now say that only god can save Tamils. Tamils have wasted 30 years with LTTE for nothing
  · It will be a good tactics for Tamils to work with Mahinda to release 300,000 Tamils and Thousands of Tiger Boys and Girls trapped because of Pirabaharan’s and Puli Padai’s –(LTTE) mistakes.
  · Tamils should join Sri Lankan Army and Police in large numbers, the Diaspora Tamils Boys and Girls should join UK, USA, Australia, Canada, NATO, Indian and European Army. WITH OUT A TAMIL ARMY, TAMILS HAVE NOTHING.
  · Educated and Diaspora Tamils and Tamils living in Sri Lanka should get involved Sri Lankan National Political Parties, sixty years of experience shows regional parties getting involved in Parliamentary Politics are of no use and detrimental to Tamils other wise Karuna, Pillaiyan and Douglus will be our Tamil Leaders. Regional Parties may get involved in Local and Provincial Politics.

  Reply
 • yoganathan
  yoganathan

  சாதாரண புலி ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு பொய் மூட்டைகளை கொட்டி உள்ளதால் அதற்கான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும். மேலும் இவர்களில் பலர் கடுமையான புலிப் போக்கையும் கொண்டுள்ளனர். இவர்களால் தற்போதுள்ள அரசியல் சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக அமையும்// காரணம் இந்தப் பலிகளின் கடந்தகால முழு கொலைகளுக்கும் இவர்களே பொறுப்பானவர்கள் பலிகள் பிரபாகரன் அழிந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் யார் புலிக்கொடி புலி பெயரடன் வரகிறார்களோ அவர்கள் அந்த கொலைகளக்கு பொறுப்படையவர்கள் – நல்லது இந்த கொடிகள் பெயர்களடன் யார்சரி முன்னால வராமல் விடுவது அதாவது பிரபாகரனின் புதைகழிக்குள்ளேயே இந்த கொடிகளையும் பெயரையும் போட்டுவிடுவது – சிந்தித்து செயற்ப்படுக.

  Reply
 • lion
  lion

  னெடியவன் – சித்தன்கேணி
  அப்துல்லா – கொக்குவில்
  மேத்தா – சாவகச்சேரி
  ரெஜி – வெற்றீலைகேணி

  நீங்கள் இவர்கள் வந்து குடியேறிய இடங்களை சொல்லுகிறீர்கள் இவர்களத பூர்வீகம் வல்வெட்டித்தறையே தான்.

  Reply
 • nallurkantha
  nallurkantha

  Very interesting. VVT element not only associated with VVT people. It is the mentality of the Jaffna Tamils generally(I am from Jaffna Town). VVT is basically the capital city of smuggling kingdom. Those days oin 60s and 70 s any new face could not enter VVT. They would have been assulted or killed as agents coming for smuggling secrets. How can you expect a real leader from that environment. (I am not speaking about caste). At the same time VVT people were considered egual to Vellalar because of their money power. I understand there are still hindu temples not open for our lower case tamil brothers and sisters. There are temples inside VVT. It is a damn disgrace that these smugglers temporaily led the Tamil people.
  One word to Thamby Jayabalan-Dont just critizize the government. Rehabilitating 300 000 people is a massive task. Be patient. New era has dawned.
  Readers, sorry, I dont know how to do Tamil typing.

  Reply
 • ulafu
  ulafu

  …….நெடியவன் திருமணம் முடித்தது தொண்டமானற்றில் கஸ்ரோவின் நெருங்கிய உறவினர் மகளை.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  தமிழில் எழுத பிரைச்சினையுள்ளவர்கள் கீழே நான் இணைக்கும் இணைப்பிற்குச் சென்று தமிழை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள் அவை தாமாக தமிழாக உருமாறும். உதாரணமாக நீங்கள் Amma என எழுதினால் அம்மா என வரும். பின் நீங்கள் அவற்றை பிரதியெடுத்து இங்கே இணைக்கலாம்.

  இணைப்பு: http://www.google.co.in/transliterate/indic/Tamil

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  நான் “கலைஞர் கருணாநிதியையும்” நேரில் சந்தித்திருக்கிறேன், பிரபாகரனையும் நேரில் சந்தித்திருக்கிறேன், “காஸ்ட்ரோவையும்” நேரில் சந்தித்திருக்கிறேன், இம்மூவர் இல்லங்களிலும் ஆரம்பக் காலங்களில், படுத்துறங்கி, அரசியல் பணியாற்றியிருக்கிறேன். ஆரம்பக் காலங்களில்….”NOT BAD”, ஆனால், இவர்கள் “கழுதை தேய்ந்து கட்டெரும்பானது” எதனால்??, மிகப்பெரிய அரசியல் இயக்கங்களை “தங்கள் குடும்பத்தினுள்ளும்”, “ஊரவன்” உள்ளும் “சுருங்கியது” எதனால் என்று யாராவது சிந்தித்து பார்த்தீர்கள்??. அவர்கள் உண்மை சொன்ன போது யாரும் நம்பத் தயாரில்லை, “இனிப்பான பொய்” சொன்னபோது, நம்பினீர்கள், “ஜால்ராவையும்” கையிலெடுத்தீர்கள். அடிப்படையிலேயே “தமிழர் அரசியல்” என்று ஒன்று இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது!!.விளைவு….அனுபவிக்கிறீர்கள்!!….

  Reply
 • watch
  watch

  What an Intelligent Research.
  You would all get PHd in Puliyesam, if cleaverely sumbit your Thesis to the correct People.

  Reply
 • சுமங்களா
  சுமங்களா

  அப்போ புலியெல்லாம் சாதியாலை தேசியம் வளக்குதே ?

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  இந்த கட்டுரையில் குலக் குழுமம் என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. அதில் சில மயக்கங்கள் தோன்ற வாய்ப்புகள் இருக்கின்றது. குலக் குழுமம் – குலமரபுச் சமூகம் என்பது Tribal Society என்பதை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்களத்தில் குலம் என்னும் சொல் சாதியை குறிக்க பயன்படுத்தப்படுவதுண்டு. பிரேமதாசா காலத்தில் தமிழிலும் இதே சொல்லை தமிழ் பத்திரிகையாளர்கள் சாதியை குறிக்க பயன்படுத்தினார்கள். (அவர் குலபேதம் கூடாது, என்று சிங்களத்தில் பேசுவதை தமிழ் பத்திரிகையாளர்கள் சாதிபேதம் என்ற பதத்தை பயன்படுத்தாது குலபேதம் என்றே குறிப்பட்டு வந்தார்கள்) அத்தோடு “குலத் தொழில்” என்னும் சொற்றொடரில் குலம் என்பது சாதியையே குறிக்கிறது. எனவே இங்கு குறிப்பிடப்படும் குலமரபுச் சமூகம் என்பது Tribal Society யை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

  இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது, எமது சமூகமானது தனது வர்க்க, சாதிய, பால், பிரதேச, மத வேறுபாடுகளைக் கடந்து ஒரு தேசமாக தன்னை கட்டமைக்க போராடிக் கொண்டிருந்த போது, அதன் தலைமையானது – அதாவது விடுதலைப் புலிகளின் தலைமையானது – குலமரபுச் சமூக மனோபாவத்தை கடந்துவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. வரலாற்றில் பின்னொரு பகுதியில் இந்த உண்மை துலாபரமாக தெரியவரும். பழிக்குப் பழி; வாங்குவது, குறிப்பிட்ட சமூக பின்னணியை கொண்டவர்களை மாத்திரம் நம்புவது போன்றவை குலமரபு சமூகத்தின் பண்பே அன்றி தேசியத்தின் பண்பல்ல.

  Reply
 • Ram
  Ram

  வணக்கம் ஜெயபாலன்,
  நல்ல கட்டுரை, புலிகள் விடும் விட்ட பிழைகளை எழுதியுள்ளீர்கள் என வாசிக்க வந்தால், யாழ்பாணத்து உயர்குல திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறீர்கள்.

  ஒரு தடவை ஐயா ஆனந்தசங்கரியை சந்திக்கநேர்ந்த போது கேட்டேன், ஏன் நீங்கள் மட்டும் புலிகளுடன் ஒட்டாமல் உடைந்தனீர்கள்? என்று உடன் வந்த பதிலோ, உவன் பிரபாகரன் ………..(குலப்பெயர்). உவனுக்கு கீழ்நான் இருக்கிறதோ?

  நான் இதுவரைநினைத்தேன், புலிகளின் அராஜகபோக்குக்கு எதிராகவே நீங்கள் எல்லோரும் சேர்ந்துள்ளீர்கள் என்று. அது தவறு. உங்கள் கூட்டுக்கள் யாழ் உயர் குல கூட்டு.

  உங்கள் கூத்துக்கு ஏன் கே.பியரையும் கூட இழுக்கிறீர்கள்? அவரை விடுங்கள்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  …புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற் கூட ….

  ஜெயபாலன்,
  எப்போது செயற்பட்டார்கள்? புலிகள் அறிவித்தனரா? இல்லை தாங்களே அறிவித்தனரா?

  ‘ அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல’ என உங்களை வசை பாடியபோது உங்கள் பக்கம் நின்றது தவறோ என இப்போது நினைக்கின்றேன்.

  Reply
 • Poddu
  Poddu

  ரக்ஸ்,
  ஜயர் உமா ராகவன் புலேந்தி செல்லக்கிளி சந்தோசம் ராதா இவர்கள் எல்லாம் ஆர் என்று கேட்டிருக்கிறியல். இதில எல்லாரைப் பற்றியும் எனக்குத் தெரியாது ஆனா ஐயர் உமா நித்தியானந்தன் ராகவன் நிர்மலா… என்ற பட்டியல் புலிகளோடு இருக்கேலாமல் போனதற்கும் ஒரு காரணம் இருக்க எல்லோ வேணும். சில வேளை அவையும் விவிரி என்றா விலகாம இருத்திருப்பினம் என்று நினைக்கிறன்.

  இதில செல்லக்கிளி ராதா இருவரும் உட்படுகொலை செய்யப்பட்டதாக ஒரு கதையுண்டு. இவை எதனைக் காட்டுகின்றது.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  சாந்தன் //”புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற்” எப்போது செயற்பட்டார்கள்? புலிகள் அறிவித்தனரா? இல்லை தாங்களே அறிவித்தனரா?//
  பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்த கதையைத் தான் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். வன்ஸ் மோர் சொல்ல வேணுமா?

  //‘ அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல’ என உங்களை வசை பாடியபோது உங்கள் பக்கம் நின்றது தவறோ என இப்போது நினைக்கின்றேன்.//
  சாந்தன் தயவு செய்து யாருடைய பக்கமும் நிற்காதீர்கள். சரியான பக்கத்தில் மட்டும் சரியான விடயத்திற்காக நில்லுங்கள்.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  ராம் வடக்கு கிழக்கு பிரிக்கப்படும் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிலர் அதில் உடபடாவிட்டாலும் மெளனமாகவே இருந்தனர். இந்த மெளனம் சம்மதமல்ல. தாங்கள் கிழக்கின் துரோகிகளாக்கப்பட்டு விடுவோம் என்ற பயம்.

  அதே போன்று தலித் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அதுபற்றிய விவாதத்தில் கலந்தகொள்ளப் பலர் பயந்தனர் காரணம் தாங்கள் சாதிய ஒடுக்குமுறையாளர்களாக ஆக்கப்பட்டுவிடுவோம் என்று.

  உங்களுடைய விமர்சனம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கட்டுரைக்கு எதிரான வாதத்தை வைத்திருந்தால் உங்களுடைய ஆக்கம் எனக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

  எம்மிடம் உள்ள மிகப்பெரும் பிரச்சினை உண்மைகளை ஆராய்வதற்கு தயங்குவது. அதனை முற்றாக மறுப்பது.

  கருணா என்ன காரணத்திற்காக வெளியெறி இருந்தாலும் பிரதேச வாதம் ஒரு முக்கிய பரச்சினை என்பதை புலிகளோ யாழ் தலைமைகளோ ஏற்றுக்கொள்ளவில்லை. நூனி நாக்கில் நாமெல்லோரும் தமிழர் என்று ஐக்கியம் பேசினோம்.

  புலிகள் தமிழ் தேசிய இனம் என்று பேச்சளவில் சொல்லிக் கொண்டாலும் தங்கள் கட்டமைப்பில் பலதரப்பட்ட தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்திருக்கவில்லை. அரசியல் விவாதங்களுக்கும் இடமளிக்கவில்லை.

  இறுதியாக நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீழ்ந்த வாக்குகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகளிடம் இருந்த கிடைக்கப்பெற்ற வாக்குகளே. அதால் தான் டக்ளஸ் தேவானந்தவின் போஸ்ரருக்கு கள்ளு முட்டி கட்டப்பட்டது. (இரு தரப்பு கள்ள வாக்குகளை நீக்கிப் பார்த்தாலும் கணிசமான மக்கள் புலிகளுக்கும் டக்ளஸ் இற்கும் வாக்களித்து இருந்தனர்.)

  ஆகவே நடைமுறைப் பிரச்சினைகள் பற்றி திறந்த விவாதத்தை நடத்த வேண்டும். அதைவிடுத்து அவ்வாறு ஒரு பிரச்சினை இல்லை என்று வாதிட முற்படுவது பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவாது.

  Reply
 • Thirumalaivasan
  Thirumalaivasan

  வல்வெட்டித்துறை கடத்தல் ……… என்ற சிறுகுழும அரசியலுக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தள்ள மிகக் கஷ்டப்பட்டு எழுதியிருக்கும் ஜெயபாலனுக்கு இக்கட்டுரையின்மூலம் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டதைத் தவிர வேறெதனையும் சாதித்துவிட்டதாகக் கொள்ள முடியாது. கடத்தலுக்கும் அரசுகளுக்கும் வரலாற்றுக்காலமாகவே தொடர்புண்டு. லண்டனிலிருந்து 1வது எலிசபெத் மகாராணி கடல்கொள்ளையரையும் கடத்தல் காரரையும் தனது அரசுக்கு நிதிசேகரிப்பொராக வைத்திருந்ததை ஜெயபாலன் அறிந்திருக்க வேண்டும். இதுவரை அறியாவிட்டால் ஐல் ஒப் வைற் தீவை மகாராணி கடற்கொள்ளையருக்கே அன்பளிப்பாக வழங்கிய வரலாற்றை அத்தீவிலுள்ள மியுசியத்துக்குச் சென்று அறிந்துகொள்ளலாம். இன்று சோமாலிய கடற்கொள்ளையரின் கைமேலோங்கியிருப்பதற்கும் அரசகளின் ஆதரவே காரணம்.
  எனவெ கடத்தல் என்பது கீழ்த்தரமானது என்பதையோ>………… அரசியல் நடத்த அருகதையற்றவர்கள் என்பதையோ அல்லது வல்வெட்டித்துறையார் ஒதுக்கி அழிக்கப்படவேண்டியவர்கள் என்பதையோ முயன்று நிலைநிறுத்தும் முயற்சியை தயவுசெய்து உங்கள் சுயநலன்களுக்காக ஊதிப்பெருப்பிக்காத விடவும்.

  Reply
 • மாயா
  மாயா

  புலத்து புலித் தலைமைகள் கொழுத்துப் போனார்கள். ஈழத்துப் புலித் தலைமைகள் அழிந்து போனார்கள்.இவர்களை நம்பிய மக்கள் மட்டும் செத்துக் கொண்டே வாழ்கிறார்கள். இன்னும் ஒத்து ஊதுகிறவர்கள் இருப்பவர் வாழ்வுக்கும் உலையாகப் போகிறார்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  Thirumalaivasan,
  என்ன வருடா வருடம் சிறந்த கடத்தல்காரரை தெரிவு செய்து ஆஸ்கார் அவார்ட் போல ஒரு அவார்ட்டை பிரித்தானிய மகாராணியின் தலைமையில் விழா நடாத்தி வழங்கலாமென்கின்றீர்களா?? ஆக மொத்தத்தில் கற்காலத்தில் நடந்த சம்பவங்களை தற்போதைய கடத்தல்களுக்கு வக்காலத்து வாங்க உதாரணம் காட்டியுள்ளீர்கள். இதன் மூலம் இலங்கை மக்களை அந்த கற்காலத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை விடுதலைப்புலிகளையே சாரும் என்பதை நீங்கள் மறைமுகமாக ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  21ம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டு 18ம் நூற்றாண்டுக்குச் சென்று வரலாற்றைப் மியூசியத்தில் படித்து எப்போது தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொள்வது. கடற்கொள்ளையர்கள் தமிழ் தேசியத்தை கட்டி எழுப்பும் கனவு திருமலை வாசனுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவிலைலையோ?

  கட்டுரையில் எவ்விடத்திலும் திருமலைவாசன் குறிப்பிடும்படியான //அரசியல் நடத்த அருகதையற்றவர்கள் என்பதையோ அல்லது வல்வெட்டித்துறையார் ஒதுக்கி அழிக்கப்பட வேண்டியவர்கள்// கருத்துக்கள் முன்வைக்கபடவில்லை. இது திருமலைவாசன் எனது கட்டுரையை தனது எண்ணப்படி கடத்தி கொள்ளையடிக்க (கருத்துரிதியில்) எடுத்த முயற்சி.

  தமிழ் சமூகம் ஒரு பல்கலாச்சார பன்மைத்துவ சமூகம். அதன் அரசியல் கட்டமைபுகள் நடவடிக்கைகள் பல்கலாச்சார பன்மைத்துவ அரசியலைப் பிரதபலிக்க வேண்டும்.

  போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டோம் என்பதற்காக லண்டனில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முடியுமா?

  எனது கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்தவர்களை மட்டும் கொண்ட அரசியல் கட்டமைப்பபால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது.

  அதனால் அவ்வாறு செயற்பட முனையும் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவினால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்தக்களையும் அதன் வருமானத்தையுமே கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். இதுவே எனது கட்டுரையின் வாதம்.

  Reply
 • Nallai Man
  Nallai Man

  1984இல் டெலோவுக்குள்(TELO) எழுந்த `வடமராச்சி` ஆதிக்கம் 25 ஆண்டுகள் கழிந்து புலிகளுக்குள்(LTTE) ஏற்பட்டுள்ளது.

  Reply
 • chandran,raja
  chandran,raja

  திருமலைவாசன் கருத்துப்படி வல்வெட்டித்துறை கடத்தல்காரர் தமிழ்மக்களுக்குகாக கடத்தல் பண்ணியமாதிரியும் பிரித்தானியா மகாராணி தீவை அன்பளிப்பு செய்தது பிரித்தானியா மக்களுக்காகவும் போல்லிருக்கிறது. இப்படியான புரிந்துணர்வும் தவறான விளக்கங்களும் தான் ஈழத்தமிழ்மக்கள் இன்னமும் துன்பத்தில் உழளன்று கொன்டிருக்கிறார்கள். இப்படியான சிந்தனை அநேகமாக மனிததன்மையை தொலைத்துவிட்டு மோகத்தில் ஆழ்திருக்கக்கூடிய தமிழருக்கே வரக்கூடியது. இன்னும் கூடுதலாக யாழ்.தமிழ்மக்களையே சாரும். கடத்தல் கீழ்தரமானதுதான். அரசியல் வகைப்பட்டதுதல்ல. வல்வெட்டித்துறை மக்கள் அனைவரும் கடத்தல்காரர் அல்ல.

  வல்வெட்டித்துறையார் ஒதுக்கி அழிக்கப்பட வேண்டியவர் என்ற கருத்தை ஜெயபாலன் எங்கும் சொன்னதில்லை. “கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான்” என்றது போன்ற கருத்தை முன்வைக்க வேண்டாம். கருத்தை முன்வைக்க தெரியாதிருந்தால் இப்படி எழுதவேண்டாம்.

  Reply
 • thurai
  thurai

  //எனவெ கடத்தல் என்பது கீழ்த்தரமானது என்பதையோ>………… அரசியல் நடத்த அருகதையற்றவர்கள் என்பதையோ அல்லது வல்வெட்டித்துறையார் ஒதுக்கி அழிக்கப்படவேண்டியவர்கள் என்பதையோ முயன்று நிலைநிறுத்தும் முயற்சியை தயவுசெய்து உங்கள் சுயநலன்களுக்காக ஊதிப்பெருப்பிக்காத விடவும்.//

  வன்னிக்குள் தேங்காய் துருவ துருவலை செய்ய மரம் வெட்டியவரை நாலு கிழமை மறியலில் புலிகள் வைத்தார்கள். கோடிக்கணக்கில் கடத்தலும், மிரட்டலும் செய்து வாழ்ந்த, வாழும் புலிகளிற்கு உலகம் என்ன தண்டணை கொடுக்க வேண்டுமென புலிகளின் ஆதரவாளர்களைக் கேட்கிறேன்.

  துரை

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /பழிக்குப் பழி; வாங்குவது, குறிப்பிட்ட சமூக பின்னணியை கொண்டவர்களை மாத்திரம் நம்புவது போன்றவை குலமரபு சமூகத்தின் பண்பே அன்றி தேசியத்தின் பண்பல்ல./– திரு ஜெயபாலன், நீங்கள் தீர்வின் பக்கம் நிற்காமல், பிரச்சனையின் பக்கம் நிற்கிறீர்கள்.
  நான் கூறுகிறேன் “தமிழர்களுக்கே அரசியல் என்பது இல்லை (அது யாராக இருந்தாலும்)”. கண்டதை படித்தவன் பண்டிதனாவான், கண்டதைத் தின்றவன் (லாப நட்ட நோக்குடன் தனக்கு தேவையான போது, தன் சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு, தேவைப்படும் சொற்களை மட்டும், சோம்பல் முறித்தப்படி, அருகிலுள்ள இலண்டன் லைப்ரரியில் “தின்பவர்கள்”) “பன்றியாவான்”. சாதாரண உதாரணத்திற்கே வருவோம், மெத்தப் படித்த சினிமா விமர்சகர்களாலேயே எதிர்வு கூற முடியாத வெற்றியளித்த பல “தமிழக திரைப்படங்களை” தந்த பல இயக்குனர்கள், மக்கள் பிரச்சனைகளிலிருந்து தோன்றியவர்கள். நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன், “விடுதைப் புலிகள் என்பது இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய ஆசை அபிலாசைகளின் பரிணாம வளர்ச்சி என்பது”,இதில் எந்த “குலக் குழுமமும்” விடுபட இயலாது. “தேசியம்” என்று கூறுகிறீர்கள்!, இந்த தேசியம் என்பது “தமிழர்களின் சமூக இரத்த ஓட்டத்தில் இருந்திருந்தால்”, அந்த பரிணாம வள்ர்ச்சி என்பது “தேசியமாக பரிணமித்திருக்கும்”. இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக இந்த தறிப்பிடத்தில் வந்து நிற்பதற்கான இயங்கியலைதான் விரும்பியிருந்தார்கள் (தமிழக சினிமாவை வெற்றிப் பெற வைத்த இயங்கியலைப் போல்). ஆகையால், இந்த சமூக “இயங்கியலை(விருப்பத்தை)” மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்!.

  Reply
 • Poddu
  Poddu

  சாத்திரி தனது புளக்கில் இணைத்திருக்கிற கட்டுரையையும் ஒருக்கா படியுங்கோ. மேலே சொன்னதுக்கு இன்னும் வலுச்சேர்க்கினம் பாருங்கோ
  ——
  அனைவருடனும் கைகோர்க்கும் புலிகளின் அனைத்துலகச் செயலகமும்..அடம்பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்..

  புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான்.(ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கு அடு்த்தகணம் உயிர்வாழ்தலும்…உணவும் உடுதுணியுமே பெரிய பிரச்சனையென்பதால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாக இல்லையென்பதே உண்மை)

  இப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படியும் புலிகளின் அமைப்பில் எஞ்சியிருந்த மத்தியகுழு உறுப்பினரான பத்மநாதனின் அறிக்கை வெளியானது..அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.

  இந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு மக்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்களென்றால்..புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.

  புலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்..மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.

  இதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.

  நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு பொறுப்பாளர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்துள்ள நிலையில்.ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாக அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்கமுடியாதென்பதே..இவரது வாதமாகும்..இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிரஇ இனியாவது மக்களிடம் உண்மை நிலையை விளக்கி இனியாவது திறந்த மனதுடன் அரசியல்ரீதியான எந்த வேலைகளையும் செய்யத் தயாரில்லையென்பதே உண்மை.

  தற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்)சிறிரவி..சிவம்..ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

  இதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த மனிதப்படுகொலையில் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.

  அந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..அதிலொன்று..ஜெர்மனிய அரசின் சில அமைச்சர்கள் முக்கியமாக அபிவிருத்தி அமைச்சர்..இலங்கையரசின் சர்வாதிகாரப்போக்கினை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தது மட்டுமல்ல இலங்கையரசிற்கான நிதி உதவிகளை வளங்கப்போவதில்லையென அறிவித்திருந்ததும்… அனைவரும் அறிந்ததே.. அப்படி அறிக்கைகள் வெளியிட்ட ஜெர்மனிய அரசு அமைச்சர்களை சந்தித்து நன்றிகூறுவதோடு எமது போராட்டத்தின் நியாயங்களை அவகளிற்கும் புரியவைத்து மேலும் சில அழுத்தங்களை இலங்கையரசிற்கு கொடுப்பதுடன் இலங்கையரசு மீதான பொருளாதாரத் தடையினைக் கொண்டு வருவதற்காக ஜரோப்பிய கூட்டமைப்பில் விவாதங்களை முன்வைக்க வேண்டுகோள் விடுத் கூடிய நிலையில் சில ஜெர்மனிய தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் சந்திப்பதற்கான அனுமதிகளையும் பெற்றபின்னர்.. வாகீசனுடன் தொடர்புகொண்டு எமது தரப்பில் எமதுசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினால் எமது கருத்துக்களிற்கு மேலும் வலுவாக இருக்குமென்று கேட்கப்பட்டது.. அந்த முயற்சியில் நானும் ஈடுபட்டிருந்தேன்..

  ஆனால் இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த பதில்… தமிழீழம் என்பது எங்களைத்தவிர அது வேறை யார் எடுத்துத் தந்தாலும் அது எங்களிற்கு தேவையில்லை.. அது எங்களிற்கு தெரியும்..என்று, தொலைபேசி இணைப்பினைத் துண்டித்துவிட்டனர்.. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆனால் . இப்படியான அறிவுகெட்ட லூசுத்தனமானவர்களையெல்லாம்.. அனைத்துலக பொறுப்பில் புலிகள் அமைப்பின் தலைமை நியமித்து வைத்திருந்ததே எமது அழிவிற்கு காரணம்.. எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களிலும் இவர்களது வழிநடத்தலிலா நீங்கள் உங்கள் தாயகக்கனவுகளை சுமக்கப்போகின்றீர்கள்…முடிவெடுங்கள் நன்றி..

  Reply
 • ravana
  ravana

  “விடுதைப் புலிகள் என்பது இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய ஆசை அபிலாசைகளின் பரிணாம வளர்ச்சி. இதில் எந்த “குலக் குழுமமும்” விடுபட இயலாது என்ற டெமோக்கிரசியின் கருத்து கவனிப்பிற்கு எடுக்கப்பட வேண்டியது.

  பழிக்குப்பழி வாங்குவது. குறித்த தம் சமூகத்தினரை நம்புவது என்பவற்றை மட்டும் வைத்துக் கொண்டு குலமரபுச் சமூகமாக இனம்காட்டி புலிகள் அதற்குள்ளிருந்து வெளியே வரவில்லை என்று நிறுவ முயல்வது சப்பாத்துக்கு அளவாகக் காலை வெட்டும் முயற்சியே.

  இது ஆய்வோ அவதானிப்போ அல்ல. ஜெயபாலன் இன்னார் இன்னாரெல்லாம் வல்வெட்டித்துறை என்று பட்டியல் இட்ட போது அவர்களில் பலர் வல்வெட்டி அல்ல என்று குறிப்பிட்டதும் அங்கு பெண்ணெடுத்தவர் என்று இன்னொரு குறிப்பு வருகிறது. அங்கு பெண்ணெடுத்தவர். அங்கு பெண்குடுத்தவர். கடைசியில் இருவரும் வல்வெட்டி குலமரபுக்காரர் என்றும் நிறுவலாம்.

  ஒரு புறத்தில் இப்படி புலிகளை வல்வெட்டிக்குள் ஒடுக்க அல்லது ஒதுக்க வேண்டிய தேவை வரும் போது அவர்களின் குல அல்லது சாதி அடையாளங்கள் பிடிக்கப்படுகிறது. மறுபுறுத்தில் போராட்டத்தையே நிராகரிக்க வேண்டிய தேவை வரும் போது புலிகளின் யாழ்.வெள்ளாள மேலாதிக்கம் பற்றிப் பேசப்படுகிறது. எந்தெந்த அளவில் உங்களிடம் சப்பாத்து இருக்கிறதோ அவ்வப்போது அதற்கேற்ற மாதிரிக் காலை வெட்டுவதில் கைதேர்ந்தவர்கள் நீங்கள்.

  ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றதற்காகத் தான் புலிகள் பழி வாங்கப்பட்டதாக இந்திய அரசியல்வாதிகள் பலரும் பேசியுள்ளார்கள். அதுவும் குலமரபுப்படி தானா? அவர்கள் எந்தகுல மரபைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கலாமில்லையா?

  வெள்ளாளச்சிப் பெட்டையை இழுத்தக் கொண்டு ஓடிவிட்டான் என்பதற்காக அவனுடைய முழுக்குடும்பத்தையுமே பழிவாங்கிய ஆதிக்க மனோபாவத்தை எந்தக்குலக்குழும மரபை வைத்து புரிந்து கொள்வது.

  உங்கள் அத்திவாரமே ஆட்டம் காண்கிறதே.

  விளங்கச் சொல்வதாயின் பானையிலிருப்பது தான் அகப்பையில் வரும். தமிழ் சமூகத்தில் இருந்து தான் புலிகள் உருவானார்கள். புலிகளை எதிர்க்கும் அரசியல் ஆதரிக்கும் அரசியல் இரண்டும் சேர்ந்து தான் புலிகளை உருவாக்கியது. இதனை சற்று இந்தப்பிரச்சினைகளுக்கு வெளியில் நின்று பார்த்தால் மட்டும் தான் புரிந்து கொள்ளலாம். இந்த எரிந்த கட்சி எரியாத கட்சி கருத்தாடி இதனைப் புரிந்து கொள்ள முடியாது.

  தேசமோ அல்லது வேறு யாருமோ இப்போதைக்கு அதனைச் செய்யப் போவதில்லை. ஏனென்றால் தேசமும் யாழ்ப்பாண சமூகத்தின் விளைபொருளாகத் தானே இருக்கிறது. வீடு எரிந்து கொண்டிருக்க வேண்டும் அப்படி என்றால் தானே பிடுங்கிக் கொண்டிருக்கலாம்.

  Reply
 • thurai
  thurai

  //ஆனால் இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த பதில்…தமிழீழம் என்பது எங்களைத்தவிர அது வேறை யார் எடுத்துத் தந்தாலும் அது எங்களிற்கு தேவையில்லை.. அது எங்களிற்கு தெரியும்..என்று, தொலைபேசி இணைப்பினைத் துண்டித்துவிட்டனர்.. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..//

  தென்னம்பிள்ளைக்கு யார் நீர் ஊற்ரினாலும் பரவாயில்லை வளர்ந்தால் யாருக்கும் உதவும் என்பதே நல்லெண்ணம் கொண்டோரின் கருத்தாகும். யாரின் கழுத்திலுள்ள் தாலிக்கொடியை அறுப்பதென்றால் நான் மட்டும்தான் அறுக்கவேண்டும் என்பது துஸ்டரினதும், திருடர்களினதும் எண்ணமாகும்.

  தமிழீழம் என்பது புலிகளின் வருமானத்திற்கான கோசமே தவிர ஈழத்தமிழர்களின் நலன்களை கருத்திற்கொண்டு இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை.

  துரை

  Reply
 • palli
  palli

  என்ன கொடுமை இது எங்கேயும் இந்த குல குளப்பத்தை விட மாட்டீர்களா? ஏதோ குளப்பி விட்டு போய் குப்பற படுங்கோ புரியாத புண்ணாக்குகள் குத்திவெட்டி சாகட்டும்; வல்வெட்டி துறைக்கும் புலிக்கும் என்ன உடன்பாடு. ? புலி பொறுப்பாளர்களில் யார்? வல்வெட்டி?? ஆரம்பகாலத்தில் புளொட் அமைப்புதான் வல்வெட்டியை தனது கட்டுபாட்டில் வைத்திருந்தது; அதுக்கு பொறுப்பாக சதீஸ் என்பவர்(காக்காவின் வலதுகை என பேசப்பட்டவர்)அதைவிட ஓட்டி என எல்லா அமைப்பாலும் அன்பாக பேசபட்டவர் வல்லை பாண்டி இவரும் வல்வெட்டிதான்; அதன்பின் புளொட்டின் தள தளபதி என ராணுவமே அறிவித்த பார்த்தன் வல்வெட்டிதான்; அதன் பின் சங்கர் என்பவர் வடமராட்ச்சி பொறுப்பாளராக இருந்தவர்; ஆனால் இதுவரை பிரபாகரன் உட்பட புலியில் வல்வெட்டிதுறயில் இருந்து ஒரு திறமைசாலி சங்கரை தவிர யாரும் உண்டோ?

  புலியின் ஆரம்ப புலிகள் (புதிய புலி பின்பு வி;;;புலி) நாகராசா; ராகவன்; சலீம்; சீலன்; இறைகுமாரன்; உமாகுமாரன்; அருனா; சிறி; குமரப்பா; புலேந்திரன்; சிவா; மூர்த்தி; மாத்தையா; கிட்டு; யோகி; பொன்னர்; பொட்டர்; கடாபி; வேதா, இது ஆரம்ப பட்டியல் இன்னும் சிலர் யாருமே இதில் வல்வெட்டி கிடையாது; அடுத கட்டம் தமிழ்செல்வன்; பாணு ;சொர்ணம் பால்ராஸ்; இளம்வழுதி; ஊத்தைரவி; சூட்டி; கருணா இப்படி எந்த கட்டத்திலும் புலிக்கு வல்வெட்டிதுறை இடம் கொடுக்கவில்லை; இதில் டெலோ தாஸ் அவருடன் இருந்த 90வீதம் பெயர் வல்வெட்டிதான்; ஆக இந்த குலம் கோத்திரம் என்பதை கட்டிபிடித்து கொண்டு இருப்பவர்கள் அதை கொண்டுபோய் சாக்கில் கட்டி அடுத்த முறை வணங்கமண் கப்பல் போகும்போது ஏத்தி விடுங்கோ; அது உலகத்தில் உள்ள கடல் எல்லாம் அலையட்டும்;

  லண்டனில் இருப்பவர்களுக்கு தெரியும்; அரியாலைக்கும் வல்வெட்டி துறைக்கும் பின்லாடனுக்கும் புஸ்க்கும் உள்ள பகையைவிட பலமான பகை உண்டு; அதன் காரணமாய் அடிக்கடி லண்டனிலேயே களம் அமைத்து போர் செய்து இன்று போய் நாளை வா என நடந்த சம்பவம் பலர் அறிந்ததுதான்; ஆனால் அதே அரியாலை பொட்டர்; அதே வல்வெட்டி துறை பிரபா கூட்டணி கொடி கட்டி பறந்து இன்று குப்பற விழுந்த கதையும் அறிந்ததுதானே; ஆனால் ஒருகாலத்தில் சுழிபுரத்தில் அத்துமீறி புலிகள் நுழைந்து விட்டதாக சொல்லி 07பேரை கொன்ற சம்பவத்தையும் மறக்க முடியுமா?
  அங்கேயும் ஏதாவது குல கும்மியடிப்பு நடந்ததா?
  சிந்திக்க மறுக்கும் மனிதர் எங்கு இருந்தாலும் அங்கு சமுதாயத்துக்கு துக்கம்தான்;
  இதில் குலம் என்ன குரங்கென்ன; பிரபாவுக்கும் கருனாவுக்கும்?
  உமாவுக்கும் சந்ததிக்கும்?
  உமாவுக்கும் ராஜனுக்கும்?
  சிறியருக்கும் தாஸ்க்கும்?
  பத்மநாபாவுக்கும் டக்கிளசுக்கும்?
  பாலகுமார்க்கும் பிரபாவுக்கும்?
  சம்பந்தருக்கும் சங்கரிக்கும்?
  கருனாவுக்கும் பிள்ளையானுக்கும்?
  தேசத்துக்கும் தேனிக்கும்?
  தேனிக்கும் புதினத்துக்கும்?
  புதினத்துக்கும் நெருப்புக்கும்?
  நெருப்புக்கும் இலக்குக்கும்?
  இலக்கியத்துக்கும் பெண்ணியத்துக்கும்?
  பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும்?
  தலித்துயத்துக்கும் கமினிஸ்ட்டுக்கும்?
  ரிபிசி க்கும் ஜபிசி க்கும்.
  தீபத்துக்கும் டண்னுக்கும் ?
  டண்ணுக்கும் G T V க்கும்.
  தமிழ் ஒலிக்கும் தமிழ் அலைக்கும்.?
  இவ்வளவும் ஏன் பல்லிக்கும் மாற்று கடுப்பாளர்களுக்கும்? ஏன் கருத்து முரன்பாடோ அல்லது வாக்கு வாதமோ பிரிவோ அல்லது கைகலப்போ போட்டு தள்ளுதலோ வருகிறது குலத்தாலா? குளப்பதாலா? குரங்கு தனத்தாலா? அல்லது சிந்திக்க மறுப்பதாலா??
  பல்லி சொன்ன உதாரணங்கள் ஒரு வீதமே;
  99வீதம் அனைவரும் அறிந்ததுதான்;

  Reply
 • rohan
  rohan

  போட்டீரய்யா ஒரு போடு, பல்லியாரே!

  Reply
 • thakshan
  thakshan

  பல்லி சொல்வதில் உண்மையிருக்கு.

  Reply
 • மாயா
  மாயா

  அதிகம் இங்கே சுயநலவாதிகள். பொதுநலம் என்பது அவர்களது பிழைப்பு மாத்திரமே.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  இங்கே பல்லியினது கருத்தை கவனிப்பது முக்கியமானது. பிரபா தந்தையின் தொழில்காரணமாக கிழக்குப்பகுதியில் வாழ்ந்தவர். இதனால் அப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள வசதியாகவும் இருந்தது. பல்லி சொல்வது போல் ஆரம்பகாலத்தில் வல்லையைச் சேர்ந்த எவரும் புலிகளில் இருக்கவில்லை. புளொட்டில் வல்லையைச் சேர்ந்த சிலர் இருந்தாலும் புளொட்டின் ஆதிக்கத்துக்குள் வல்லை இருந்ததில்லை. எது எப்படி இருந்தாலும் மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப்போடுவதைத் தவிப்பது முக்கியம்.
  பல்லி ஆரம்பகாலப்புலிகள் என்று பலரைத் தவறவிட்டதுடன் பின்வந்து சேர்ந்தவர்களில் சிலரை ஆரம்பகால உறுப்பினராகப் போட்டிருக்கிறார். யோகியின் தம்பியாருக்குப் பின்னரோ யோகி புலிகளில் இணைந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் காலஇடைவெளியுண்டு

  Reply
 • navaneethan
  navaneethan

  குசும்போ/பல்லி ஆரம்பகாலப்புலிகள் என்று பலரைத் தவறவிட்டதுடன் பின்வந்து சேர்ந்தவர்களில் சிலரை ஆரம்பகால உறுப்பினராகப் போட்டிருக்கிறார்./
  இப்படி மொட்டையாக குசும்போ எழுதாமல் யார் யாரை பிழையாக எழுதியுள்ளார். சரியான தகவல் என்ன என்பதையும் முன்வைக்கலாம்தானே. சரியான விபரம் தெரிந்தால்தான் எல்லோர்க்கும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் இடையிலுள்ள தூரம் தெரியவரும்.

  Reply
 • மாயா
  மாயா

  இறந்த காலத்தை பேசி , நிகழ்கால கள்ளர்களை தப்ப விட்டு விடாதீர்கள்? அவர்களை சீனுக்குள் கொண்டு வந்து அம்பலப்படுத்துங்கள்.

  சுவிஸில் இப்போது ……….புலிகளின் தலைவராம். அவர் தன் மகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து அரசியல் படிக்க வைத்தாராம். காரணம் தமிழீழம் கிடைத்ததும் உலக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பதற்காக. இவரது மகள் TROவின் முக்கிய பங்கு வகிக்கிறாராம். இந்த படிப்புக்கு அதிக செலவாகுமே? யார் பணம்? எல்லாம் மக்கள் பணம்தான்? தம் மக்கள் வாழ திட்டம் போட்டவர்கள் இவர்கள்? இப்படி எத்தனையோ பேர் புலிகளின் பணத்தில் தம்மை வளர்த்துக் கொள்பவர்கள்?

  Reply
 • palli
  palli

  பல்லிக்கு இயக்க வரலாறு தெரியாது; (அப்படி ஏதும் இருக்கா என்ன)
  குசும்பு பேயருக்கு ஏற்ற குசும்புதனம்; பல்லிதான் சொல்லி விட்டேனே நான் சொல்லியது ஒருவீதம் தான்; மிகுதி எனக்கு தெரியாது; பல்லியும் 1980. 1981. 1982. 1983. கால பகுதியில் குசும்புபோல் விபரம் அறிந்த சிலர் பேசியதை ஒட்டு கேட்டதகவல்தான் இது ஆக அதில் சில சரி பிழை இருக்கலாம்; ஆனால் யோகியின் தம்பி பெயர் என்ன என்பதை சொல்லவும்; அத்துடன் அன்று புலியின் தலைகளைதான் அதுவும் வல்வெட்டி தவிர்ந்த சிலரை சொன்னேன்; இதில் யோகி புலியின் முக்கிய பிரமுகர் என்பது பல்லிக்கு யோகி திம்புவுக்கு போகும் போதுதான் தெரியும்; இதில் பொன்னர் என ஒரு பெயர் எழுதினேன்;அவர் யார். என்பதை குசும்பு சரி பார்க்கவும்; யார் அந்த புதியவர்கள்.,? யார் இந்த பளயவர்கள் என்பதை குசும்பு சொன்னால் பல்லி வேறு இடத்தில் ஏப்பம்விட உதவியாக இருக்கும்;

  தாஸ் வடமராட்ச்சி நாயகனாக இருந்த 1982.1983 காலபகுதிகளில் கூட புளொட் சதீஸ் என்பவரை கண்டால் தாஸ் மரியாதை கொடுக்க தவறியதில்லை; இதுக்கு காரணம் தாஸ்க்கு சதீஸ்சை கண்டால் பயம் அல்ல; அன்று சதீஸ்தான் வடமராட்ச்சி சிறப்பு பிரதநிதி; குசும்பு
  அன்றய இயக்க அங்கதவர் வீதாசாரம் இப்படி இருக்குமென பல்லி நினைக்கிறேன்.
  தவறாயின் திருத்தவும்;
  புளொட்;;;;;;60
  ரெலோ;;;;;;;15
  ஈ பி ஆர் எல் எவ் ;;08
  புலி ;;;;;;;;;07
  மிகுதி 10 ம் பலதும் பத்தும் அடங்கும்
  சரியான கனிப்பாக இருக்கும் என்பது பல்லியின் கருத்து;எது எப்படியோ உன்மைகள் வெளிவரட்டும்; அது உன்மையாகவே வரட்டும்;

  தேசம் நிர்வாகத்துக்கு ஆரம்பகால பின்னோட்டங்கள் எப்படி எடுத்து பார்ப்பது; ரதன் ;ரகு; அரிசந்திரன்; இவர்களுடையது; என்பதை முடிந்தால் தெரியபடுத்தவும்;

  Reply
 • மாயா
  மாயா

  1985களில் புளொட்டில் இராணுவ பயிற்சி பெற்ற இளைஞர்கள் தொகை (தமிழகம் : தஞ்சாவூர் – உரத்தநாடு – தேனீ )8000க்கு மேல். இளைஞிகள் 3000.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி! பொன்னம்மான்தான். யோகி கனகாலத்துக்கு பின்புதான் வந்து சேர்ந்தவர். பொன்னம்பான் எம் யாழ்இந்துக் கல்லூரியின் முன்னணி விளையாட்டு வீரர். வீபூதிப் பூச்சைக் கைவிட்டுவிட்டீர்கள் பல்லி. முக்கியமாக புளொட் எனப்பிரிந்து வந்துவர்களைக் கணக்கில் விட்டுவிட்டீர்களே. புதியபுலிகளுக்கும் பாணு தமிழ்செல்வன் காலத்துக்கிடையில் வந்து சேர்ந்துவர்கள் பலர். புதிய புலிகள் காலத்தில் பலர் இருக்கவில்லை. சத்தியநாதன் காலத்தில் வந்சேர்ந்தவர்தான் ராகவன். ஆரம்பகால உறுப்பினர்களில் ஒரு சிலர் மெளனமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கின்றனர். கட்டுவனுக்குள் தம்பியை வைத்துப் பாதுகாத்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் உள்ளார்கள். முக்கியமாக கனடாவில் கனேடிய உளவுத்துறையுடன் வேலைசெய்த அன்ரன் எனப்படும் ……( பெயர்குறிப்பிட விரும்பவில்லை) தான் புதிய புலிகளின் முக்கிய செயளாளராக இருந்தார். இரபர்ஸ்டாம்பில் புலிச்சின்னத்துடன் கையெப்பம் இடுபவர் அன்ரன். எல்லாரும் தம்பிக்கு ஆப்பு வைத்துவர்களாகவே உள்ளார்கள் வேதனைதான்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  தம்பி சிலதொடர்வுகளை தனியாக தானும் வைத்திருந்ததும் உண்டு; தான் மறைந்து நிண்டு கொண்டு மற்றவர்களூடாகவும் வைத்திருந்தது உண்டு. இறைகுமாரன் உமைபாலன் புலிகளில் பயிற்சி எடுத்தவர்கள் அல்ல. குறிப்பாக இணைப்பாளர்கள் எனலாம். வாயை மூடிக்கொள்ளிறேன். போதும் எல்லாம்போதும் வாயைக் கிளறாதீர்கள்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லியின் வேண்டுகோளுக்காக இதைமட்டும் குறிப்பிடுகிறேன். 1983ல் புலிகளில் சுமார் 12-18. புளொட் பிரிந்ததும் பார்த்தும் பார்க்காமலும் சேர்க்கத் தொடங்கினார்கள். 60ஐ விடக்கூடவே. ரெலோ ஈபிஆர்எல்எவ் பற்றிய அறிவும் தொடர்புகளும் எனக்கு இல்லை. சரியான கணக்குச சொல்வது மிகக்கடினமானது. காரணம் எல்லோரும் ஒரேயிடத்தில் சந்திப்பதில்லை. முக்கியமாக தம்பி புதியவர்களிடம் நேரே போகமாட்டார். பண்டிதர் மூலமாக வந்த தொடர்வுகள் அதிகம்.சரி வாயை மூடுவோம்

  Reply
 • palli
  palli

  குசும்பு பல்லி தங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்; பொன்னரின் தம்பிதான் யோகி தெரியாவிட்டால் தெரிந்து கொல்லுங்கள்; பல்லியின் கருத்து பிழைக்காது கணக்கு பிழைக்கலாம்; மேலும் குசும்பு சொன்ன அந்த கனடா வித்துவான் கட்டுவான் நாகராசாதான்; இவருக்கு என எந்த கதையும் கிடையாது; ஆனால் இவர்தான் ஊர்மிளாவை வைத்து உமாவையும் பிரபாவையும் பிரித்தவர்; செய்திகளை பார்த்தால் பல்லியும் பளயகாய் போல் உள்ளதா? இல்லை பலதையும் அறிந்து வைத்திருக்கிறேன்; தேசம் இடம் தந்ததால் எழுதுகிறேன்; இறை உமாகுமரன் பயிற்ச்சி எடுகவில்லை;அப்படியானால் அந்த காலத்தில் யார் பயிற்ச்சி எடுத்த வீரர்கள்; எல்லோருமே குத்துமதிப்பாய் சுட்டவர்கள்தான். பின்புதான் உமாவும் விஸ்சுவும் லெபனான் போனதாக பளய காய்கள் புலம்புவார்கள்; இதில் காக்கா தாஸ் கராட்டி தெரிந்தவர்கள்; பொன்னர் ராகவன் தொழில் நுட்ப்பம்(குண்டு) தெரிந்தவர்களாம்; குட்டிமணி மிக சிறந்த ஓட்டி ;மற்றபடி சொல்லிக்க என்னதான் இருக்கு; குசும்பு சில விடுதலை பெண்கள் அரைகுறை உடுப்பை போட்டு கொண்டு அடிக்கடி அதை இழுத்து விடுவது போல்(அனுபவமா என கேக்கபடாது) சரியான பின்னோட்டம் விடாமல் அடிக்கடி தாங்களும் அதை போல் சிரமபட வேண்டாமே; இருப்பினும் தெரிந்ததை எழுதுங்கள் நண்பர்கள் திருத்துவார்கள்;

  Reply
 • santhanam
  santhanam

  /பண்டிதர் மூலமாக வந்த தொடர்வுகள் அதிகம்//இதில் உண்மைகள் நிறைய உண்டு குசும்பு சரியான பதில் அல்பேட்டை விட்டு விட்டிர் களத்தில் கிட்டனின் அடயாளத்தின் முக்கியபங்காளி.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  /பல்லி, ‘… பொன்னரின் தம்பிதான் யோகி தெரியாவிட்டால் தெரிந்து கொல்லுங்கள்; பல்லியின் கருத்து பிழைக்காது கணக்கு பிழைக்கலாம்; …./

  பொன்னம்மானின் அண்ணர் தான் யோகி. பொன்னம்மானின் இயற்பெயர் யோகரட்னம் குகன். யோகியின் பெயர் யோகரட்னம் நரேன். இவர்கள் இருவரும் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள். இருவரும் கிரிக்கட் அணியின் தலைவர் பதவி வகித்தவர்கள். இருவரும் 14 வயதுக்குட்பட்ட அணியில் (3rd Eleven இல்) ஆரம்பித்து 1st Eleven வரை நன்றாக ஆடியவர்கள். இதில் நரேன் (யோகி)கல்லூரி நீங்கியபின்னர் கிரிக்கட் பயிற்சி வழங்கிகொண்டிருந்து விட்டு இங்கிலாந்து செல்ல குகன்(பொன்னம்மான்) இயக்கத்தில் சேர்ந்தார். பொன்னம்மான் கைதடி குண்டுவெடிப்பில் இறக்க யோகி இந்தியா வந்தார் என நினைக்கிறேன். இவர்களுக்கு ஒரு சகோதரி இருக்கிறார். கலிஃபோனியாவில் என நினைக்கிறேன். பொன்னம்மானைத்தேடி ஆமிக்காரார் வீட்டுக்கு வந்து சகோதரிக்கு அலுப்பு குடுக்கிறவங்கள்.

  ஊருக்கே பலன் சொல்லுமாம் பல்லி, ஆனால்….!
  கணக்கும் பிழைச்சு ’பலனும்’ பிழைச்சுட்டுதே!!!!

  Reply
 • rohan
  rohan

  //இறைகுமாரன் உமைபாலன் புலிகளில் பயிற்சி எடுத்தவர்கள் அல்ல. குறிப்பாக இணைப்பாளர்கள் எனலாம்.//

  இவர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகளாக அறியப்படவில்லை. இருவருமே தொழிற்படுவதில் வல்லவர்களாக அடையாளம் காணப்பட்ட போதும், இறைகுமாரன் அமைதியான – மற்றவர்களுடன் அதிகம் கலக்காத – சுபாவ்ம் உடையவராகவும் உமைகுமாரன் கலகலப்பான ஆளாகவும் இருந்தனர்.

  சுந்தரம் கொலையும் யாராவது ஒரு புலி சார்பு மனிதரைப் போடுவோம் என்ற புளொட்டின் நோக்கமும் இந்த இரு இளைஞர்களும் கொல்லப்பட்டு வயலில் வீசப்படக் காரணம் ஆயின. அது சரி – உணமையில் இறைகுமாரன் உமைகுமாரன் கொலைக்கு உத்தரவு தந்தவரும் அந்தக் கொலையை தலைமை தாங்கிச் செய்தவரும் யார் என்பது இங்கு யாருக்காவது தெரியுமா?

  Reply
 • rohan
  rohan

  //Waco ..Please add.
  Mohankumar- Australia//

  யார் இந்த மோகன்குமார்?

  அவுஸ்திரேலியாவில் சிட்னியும் மெல்போணும் தனிததனி அமைப்பாளர்களைக் கொண்டன என்பது எனக்குத் தெரிந்த செய்தி (சரிஎன்று நம்புகிறேன்). இரண்டு மாநகரங்களிலும் யாழ்நகரைச் சேர்ந்த இருவரே பொறுப்பாளர்களாக உள்ளனர் என்றும் அறிகிறேன்.

  Reply
 • மகுடி
  மகுடி

  கணக்கு வழக்கு பிழைச்சாலும் பரவாயில்லை. பலதும் வெளியே வருது. தொடர்ந்து கடிங்கோ. பேந்து ஆராவது, கூட்டிக் கழிச்சு சரியா ஒரு கட்டுரை எழுதுங்கோவன். ,இவர்கள் ப(பு)லிகளை விட வல்லாதி வல்லர்கள் ஏனைய இயக்கங்களில் இருந்ததை உறுதி செய்யுது.

  Reply
 • rony
  rony

  ஐயோடா, இலங்கையில் தமிழருக்குள் இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதை இப்போதுதான் புரியக்கூடியதாக இருக்கின்றது. தலையே சுற்றுகின்றது. இந்த லட்சணத்தில் தமிழனுக்கு தனிநாடா? எப்படி பூச்சுற்றியிருக்கிறார்கள் இவ்வளவு காலமும். நினைக்கவே மிகவேதனையாக உள்ளது. அப்படியென்றால் என்னைப்போன்றவர்கள் இவ்வளவு காலமும் செய்த பங்களிப்புகள், வாரி இறைத்த பணங்கள் எல்லாம் விழலுக்கிறைத்த நீரா? பணம்தானே பறவாயில்லை. அப்படியென்றால் வடக்குத்தமிழனின் கதி என்ன? கிழக்குத் தமிழர்கள் ஏதோ தப்பி விட்டார்கள் போலிருக்கு. அப்படியென்றால் எங்களின் கதி. கடவுளே நல்லகாலம் ராஜபக்ச ஐயா இப்படியொரு நல்லமுடிவு எடுத்தது. பிச்சை வேண்டாம் நாயைப்பிடி-தமிழீழமும் வேண்டாம். தமிழ் தலைமையும் வேண்டாம். ஒரு நாடு-இருஇனங்கள் ஒற்றுமையாக வாழ வழி—அதுவே போதுமடா சாமி. புரியவைத்தக்கு நன்றி…..

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //ஐயோடா, இலங்கையில் தமிழருக்குள் இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதை இப்போதுதான் புரியக்கூடியதாக இருக்கின்றது.- rohan //

  வெறுமனே புலி ஊடகங்களை மட்டுமே பார்த்து வந்தால் இந்த நிலைமை தான் ஏற்படுமென்று நாம் எப்போதோ சொல்லி விட்டோமே!!

  Reply
 • palli
  palli

  பல்லியின் புள்ளிக்கு இத்தனை கோலங்களா? இருப்பினும் சில தகவல்கழுடன் பல்லி தொடர்கிறேன்; அத்துடன் திருத்தங்களை வரவேற்பதுடன்
  ஏற்றும் கொள்கிறேன்;

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி! உங்கடை கணக்குப் பிழைச்சிட்டுது. பொன்னம்மான்; யோகிபற்றி சாந்தன் சொன்னதே முழு உண்மை. கட்டுவன் நாகராசாவை நான் குறிப்பிடவில்லை. ஊர்மிளா விசயத்தில் நாகராசா தான் முழுக்காரணம். ஆனால் கனடாக்காரர் அவரல்ல இயக்கப் பெயர் அன்ரன் இயற்பெயரைச் சொல்ல விரும்பலில்லை. காரணம் உயிருடன் இருப்பவரைக் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. தர்மமும் இல்லை. இங்கே எழுதுவதூடாக வாழ்க்கைச்சிக்கலை ஏற்படுத்துவது நியாயமா?

  றேகன்! நான் இறைகுமாரன் உமைபாலனுடன் மிக மிக நெருக்கமாகப்பழகியவன்.இவர்கள் இருவரும் என்மேல் மிக மிக அன்பு கொண்டவர்கள். அதுமட்டுமல்ல இறைகுமாரன் சரியாக 6 மணியளவில் என்னுடன் இருந்தார். இவ்விடையத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டிய காலம் கனிந்துள்ளது. இருப்பினும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். எவ்வளவை இங்கு எழுதலாம் என்பதைதான் யோசிக்கிறேன். ஒரு சில தகவலை மட்டும் தருகிறேன். இருவரும் பழகியவர்களுடன் நன்கு கதைப்பார்கள். இவர்களைப்போல் நல்லவர்களை என்வாழ்க்கையில் நான் இன்னும் சந்திக்கவில்லை. இறைகுமாரன் நான் சுந்தரம் கே கே ஸ் றோட்டிலுள்ள ஒருபகுதியில் அடிக்கடி சந்திப்போம். முரண்பாடுகள் எதுவும் கிடையாது. இது புளொட் பிரிந்து வந்தகாலம். சுந்தரம் சுடப்பட்டு ஒருசிலநாட்களில் இறைகுமாரன் உமைபாலன் சுடப்பட்டனர். ஆனால் இங்கு ஒரு சுவார்சியமான விடயத்தை எழுதவேண்டியுள்ளது. உமைபாலனை எனக்கு குடும்பரீதியாக 787 பஸ் ரூட் பகுதியில் பழக்கம். ஆனால் இறைகுமாரன் இளைஞர் பேரவையில் பழக்கம். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பழக்கம் என்பது எனக்கு அப்ப தெரியாது. இவர்களைப் பெறுத்தவரை வயதில் குறைந்தவனாக நான் இருந்தாலும் என்னை தம்மில் ஒருவராகவே என்னைப்பார்த்தார்கள். செயற்பட்டார்கள். தேசம் இடம்தந்தால் நிச்சயமாக சுந்தரம் இறைகுமாரன் உமைபாலன் போன்றோரின் மரணங்கள் மீழ்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவர்களின் அழிவைத்தான் எம்மினம் இன்று சந்தித்துள்ளது. மீதியை தேசம் இடம்தந்தால் சந்திப்போம்

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பொட்டு! மருதனாமட பெற்றோல் நிலையத்தில் புலிகளின் வாகனம் பெற்றோர் நிரப்பம் போது கூட செல்லக்கிளி பற்றிக்சாரத்துடன் உயிருடன்தான் இருந்தார். மீதியைக் கணக்குப்பார்க்கவும்.

  Reply
 • thurai
  thurai

  புலத்தில் வாழும் ஈழத்தமிழரின் மனங்கள், பேசும் பேச்சுக்கள், செயல்கள் மூன்றும் மூன்று திசைகளில். எடுத்த கருமங்கள் ஒருபோதும் உருப்படியாக முடியாது. ஏமாற்றுபவர்களே என்றும் ஜெயிப்பார்கள்.

  துரை

  Reply
 • Thaksan
  Thaksan

  இறைகுமாரன்> உமைகுமாரன் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களில் மிக முக்கியமானவர்கள் இறக்கவில்லை(சங்கிலியும் புலவரும் தவிர). அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் மூவர். அவர்கள் மூவரும் லண்டனில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் போராட்டத்தை விட்டு விலகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த இரட்டைக் கொலைக்கு அப்போதே உள் வீட்டில் விமர்சனமும் தண்டணை(?)யும் வழங்கப்பட்டதாக கேள்வி. சம்பவ தினத்தன்று சுந்தரம் சித்திரா அச்சகத்தில் குறித்த நேரத்தில் நிற்பார் என்பது இறைக்கு தெரியும் என்பதே கொலையாளிகளின் வாதமாக இருந்ததாம். என்னத்தை சொல்லி இனி என்னத்தை காணப்போறம்? (ஆமை பிடிப்போர் மல்லாத்துவர்..நாம சொன்னா பாவம்)

  Reply
 • chandran,raja
  chandran,raja

  துரை! இந்தக் கருத்தோடுதான் நானும் இருக்கிறேன். ஈழத்தமிழருக்கான அழிவை புலம்பெயர் தமிழரே ஏற்படுத்தி வைத்தார்கள். இனியும் ஏற்படுத்தி வைப்பார்கள். பழைய “தோம்பு” களை அலசிஆராய்கிறார்கள். இதில் தமிழ்மக்கள் என்ன பயனை அடையப் போகிறார்கள்? அதையாவது தெளிவு படுத்துவார்களா? தெளிவுபடுத்தும்போது தான் தலைக்கேறிய பித்தம் எனக்கு இறங்கும். தயவுசெய்து யாராவது உதவி செய்வார்களா?

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  ராவணா விடுதலைப் புலிகள் மட்டுமல்ல தமிழ் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய 70க்கள் அன்றைய சர்வதேச அரசியல் சூழல் மிக முக்கியமானது. தமிழ் மக்கள் முதலில் ஆயுதம் தூக்கியது சாதியப் பாகுபாட்டினால் தான்.

  //பழிக்குப்பழி வாங்குவது. குறித்த தம் சமூகத்தினரை நம்புவது என்பவற்றை மட்டும் வைத்துக் கொண்டு குலமரபுச் சமூகமாக இனம்காட்டி புலிகள் அதற்குள்ளிருந்து வெளியே வரவில்லை என்று நிறுவ முயல்வது சப்பாத்துக்கு அளவாகக் காலை வெட்டும் முயற்சியே.// ராவணா
  பழிக்குப்பழி வாங்குவது. குறித்த தம் சமூகத்தினரை நம்புவது போன்றவை குலக்குழுமத்தின் சில இயல்புகள். சப்பாத்துக்கு அளவாகக் காலைவெட்டும் முயற்சியல்ல.

  //ஒரு புறத்தில் இப்படி புலிகளை வல்வெட்டிக்குள் ஒடுக்க அல்லது ஒதுக்க வேண்டிய தேவை வரும் போது அவர்களின் குல அல்லது சாதி அடையாளங்கள் பிடிக்கப்படுகிறது. மறுபுறுத்தில் போராட்டத்தையே நிராகரிக்க வேண்டிய தேவை வரும் போது புலிகளின் யாழ்.வெள்ளாள மேலாதிக்கம் பற்றிப் பேசப்படுகிறது.// ராவணா

  புலிகள் குலக்குழுத் தன்மையைக் கொண்டிருந்த போதும் யாழ் சைவவேளாள கருத்தியலையே பிரதிநிதித்துவப்படுத்தினர். அவ்வாறு அல்லாமல் அவர்களால் நிலைத்து நின்றிருக்க முடியாது. அதே சமயம் யாழ் சைவவேளாள சமூகமும் பிரபாகரனையும் அவர் சார்ந்தவர்களையும் தத்தெடுத்துக் கொண்டது. சூரியத் தேவன் ஆக்கியது. முருகக் கடவுளாக்கியது.

  இந்தியாவில் பெளத்தம் தலைதூக்கிய போது இந்துத்துவம் அதனுடன் முரண்பட்டு சண்டையிட்டது. இறுதியில் புத்தரை கிருஸ்ணனின் அவதாரமாக உள்வாங்கியது. பிரபாகரனை யாழ் சைவவெள்ளாளம் தத்தெடுத்தது போல.

  பானையிலிருப்பது தான் அகப்பையில் வரும்.

  //தேசமும் யாழ்ப்பாண சமூகத்தின் விளைபொருளாகத் தானே இருக்கிறது.// ராவணா

  அப்படி இருந்தால் வரலாறு நிச்சயம் தேசத்தை அம்பலப்படுத்தியே செல்லும். ஈவிரக்கம் காட்டாது.

  த ஜெயபாலன்.

  Reply
 • palli
  palli

  சந்திரா பளய பிரச்சனையை ஆராய்வது எமது நோக்கமல்ல; ஆனால் பலர் புலி மட்டும்தான் தமிழரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதாக நினைப்பதை எப்படி ஏற்க்க முடியும்; அதனால் பல்லி சந்திரா கூட கால போக்கில் குற்றவாளி கூட்டில் நிற்க்கலாம்; அதுக்கான தரவுகள் தான் இது; லெனின் கஸ்ரோ மாதிரி சிலரது ஒரு பக்கத்தையே பார்த்த உங்களுக்கு அவர்களது மறுபக்கம் பார்க்கும் போது வருத்தமாகதான் இருக்கும்; புலி செய்தால் அது தவறு வேறு அமைப்பினர் செய்தால் அது சரித்திரம் என்பதில் என்றுமே பல்லிக்கு உடன்பாடு கிடையாது;

  Reply
 • palli
  palli

  குசும்பு நன்றி; பல்லி ஏற்க்கனவே சொல்லிவிட்டேன் பல்லியின் கணக்கு பிழைக்கலாம்; (உறவு முறை) ஆனால் கருத்து பிழைக்க வாய்ப்பில்லை; எனக்கு தாங்கள் சொல்லும் கனடா வாசியை தெரியாது; ஆனால் டைக்ற்றர் சிறியிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்கிறேன்; தங்களை போல் எமக்கு வேண்டியவர்களை காப்பாற்றும் எண்ணம் பல்லிக்கு இல்லை;

  தக்ச்சன் எனது கருத்து சரியோ தெரியவில்லை; நான் அறிந்தவரையில் இறை; உமா; கொலையில் சம்பந்த பட்டவர்கள் உயிருடன் இருப்பது உன்மைதான்; ஆனால் அதில் லண்டனில் பால மோட்டை சிவம்; இந்தியாவில் மொக்கு மூர்த்தி………………; கனடாவில் கிளினொச்சி சுதா இதில்…………….. ஆனால் அதுக்கு தலமை வகித்த பெருமை சுழிபுர நாயகன் சிவம்தான்; இதில் சந்ததிக்கோ அல்லது சங்கிலிக்கோ எதுவும் தொடர்பு என தெரியவில்லை; சந்ததியின் பிரிவுக்கு(புளொட்) கொலைகளும் ஒரு காரணம் என தீப்பொறி (அன்றய) படித்த நினைவு; அதேபோல் இறை உமா இருவரும் சுந்தரத்தின் கொலையில் னேரடியாக சம்பந்த பட்டவர்கள் என்பது பலர் சொல்லி கேள்வி; இவை அனைத்தும் தெரிந்த பெண்மணி ஒருவர் கனடாவில் ஒரு இனையதளம் நடத்துகிறார்; அவர் சில உன்மைகளை விரைவில் வெளியிட கூடும்; சுந்தரத்தின் கொலையில் கூட்டணி எப்படி சம்பந்தபட்டது என சில காலத்துக்கு முன்பு தேசத்தில் பின்னோட்டம் விட்டதை நினைவு படுத்துகிறேன்:

  மாயா தாங்கள் புளொட் பற்றி பல தகவல்களை தரலாமே; அங்கும் பல உள்கொலை நடந்ததாகதானே சொல்கிறார்கள்; உங்களது பின்னோட்டம் சிலதில் உங்களுக்கு அந்த அமைப்பு பற்றி பல தகவல்கள் தெரியுமா போல் உள்ளது;

  //ஊருக்கே பலன் சொல்லுமாம் பல்லி, ஆனால்….!
  கணக்கும் பிழைச்சு ’பலனும்’ பிழைச்சுட்டுதே!!!!//
  சாந்தன் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; பல்லியின் பலன் பலரது வெள்ளை வேட்டி கிழியுது பாருங்கோ; பல்லியின் பலனை தொடர்ந்து கவனியுங்கள்; எமது நோக்கமே உங்களை போல் விடயங்கள் தெரிந்தவர்களை உள்வாங்குவதுதானே; அந்த வகையில் பல்லியை ஏசினாலும் கோமாழியாக்கினாலும் பல உன்மைகளை பலர் சொல்லுவதால் பல்லிக்கு அது மகிழ்ச்சிதான்; ஆக பல்லி தனது பலன்களை தொடரதான் செய்யும்; அது பலிக்குமா?இல்லையா.? என்பது உங்கள் பலரது பின்னோட்டமே சொல்லட்டும்;

  Reply
 • chandran,raja
  chandran,raja

  தவறு என்றால் என்ன அர்த்தம் என்பது தெரியாத இடத்தில்… தமிழ்மக்களை இவ்வளவு காலமும் இம்சைபடுத்தியத்திற்கும் தமிழ்மக்களின் விடுதலை போராட்டத்தை திசைதிருப்பிச் சென்று இறுதியில் குழியில் தள்ளிவீழ்த்தி புதைக்குளிக்குள் வைத்து புதைத்து விட்டதிற்கும் புலிகளே முழுப் பொறுப்பு.
  புலிகளின் தரத்திற்கு மற்ற அமைப்புகளை கொண்டு வந்து ஈடுசெய்வதை தவிர்கவும்: விடுதலைப் போராட்டத்திற்காக மற்றைய அமைப்புகள் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்கள். இல்லாதவர்களை தொடர்சியான பேச்சுவார்தை மூலம் பேசி முன்நோக்கி போவதற்கான களநிலைமைகள் இங்கிருந்தன. அறிவுகுறைந்த ஆணவம்மிக்க வைக்கிரகுணம் கொண்ட புலித்தலைமையால் அதை ஜீரணிக்க முடியவில்லை. முடிவு ஆயுதப்போராட்டத்தையே அர்த்தமில்லாமல் பண்ணி மக்களையும் அரசியலையும் அலையவிட்டு தாமும் அழிந்து எம்மையும் மாற்றுப்பாதை தேடவைத்து விட்டது. புலியும் மாற்று இயக்கங்களும் ஒன்றல்ல.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  //தேசம் இடம்தந்தால் நிச்சயமாக சுந்தரம் இறைகுமாரன் உமைபாலன் போன்றோரின் மரணங்கள் மீழ்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவர்களின் அழிவைத்தான் எம்மினம் இன்று சந்தித்துள்ளது.- Kusumbo//

  தோழர் சுந்தரத்திலிருந்து தொடர்ந்த கொலைகளே இயக்க கொலை கலாச்சாரத்தை ஊக்குவித்தது. இவற்றின் உண்மைகளை எழுதுங்கள். இவை இப்போதுள்ளவர்களது கண்களை திறக்கும். யதார்த்தத்தை உணர வைக்கும். முன்னர் ஆளுக்கு ஆள் தமது நியாயத்தை மட்டுமே சொல்லி தம்மை நிரபராதியாக்கிக் கொண்டார்கள். இவை குறித்து தெரிந்தோர் இப்போதாவது உண்மைகளை பதிவாக்க வேண்டும். அவை இன்றைய இயக்கங்களை அல்லது அரசியல்வாதிகளை கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும். நமது இறப்புக்கு பின்னர் நமக்கும் இதுதான் நடக்கப் போகிறது என்பதை காட்டும்.

  நேர்மையற்றோர் அரசியலில் இல்லாமல் போய், மக்களுக்காக உண்மையான மனதோடு தொண்டு செய்வோர் மட்டும் ஒரு சிலராக எஞ்சினாலும் அது நமது நாட்டு மக்களின் சமாதானத்தையும் வாழ்வையும் அளிக்கும்.

  அனைத்து நண்பர்களும் தெரிந்ததை எழுதுங்கள். புலிகள் மட்டுமே தமிழருக்கு விமோசனம் அளிக்கக் கூடியவர்கள் என்ற மாயை விலக வேண்டும். அந்த பொறுப்பு அனைவர் கைகளிலும் உள்ளது.

  எனது கனடா வாழ் நண்பன் சாரங்கனோடு நேற்று பேசும் போது சொன்னவை மனதை வருடியது. ” முன்னர் இவர்கள் பேசியதில் நடைமுறைச் சாத்தியங்கள் கொஞ்சமாவது இருந்தது. இப்போது பேசுபவை நடைமுறை சாத்தியமே அற்றவை. காலத்தையும் மக்களையும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் செயலாக இருக்கிறது” என்றான். புலிகள் அதைத்தான் செய்கிறார்கள்.

  கடந்த காலத்தின் உண்மைகள் , இன்றைய தலைமுறை அறிய வேண்டிய மிக முக்கியமானவையாகும். தேசம் போன்ற இணையங்கள் அதை செய்ய வேண்டும். நமக்குள்ளும் நான் பெரிது. நீ பெரிது என்பதெல்லாம் அகல வேண்டும். கருத்தியலிலாவது மாற்றுக் கருத்தாளர்கள் ஒன்றுபட வேண்டும். அனைவரும் நல்லதை செய்ய முயல்கிறார்கள். அவை எழுத்துகளில் தெரிகிறது. அதை யதார்த்தத்திலும் கொண்டு வாருங்கள்.

  புலித் தலைமை செய்த / செய்யும் தவறுகளுக்கு அப்பாவி மக்கள் பொறுப்பல்ல. ஆயுதம் மக்களை சிந்திக்க விடாது மட்டுமல்ல, எதிர்த்து பேசவே முடியாது ஆக்கிவிட்டது. புலி ஊடகங்களுக்குள் மட்டும் கருத்துகளை பார்த்தோர் இப்போதுதான் மாற்று ஊடகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவர்களுக்கு உண்மைகள் தெரிய வேண்டும். யதார்த்தம் புரிய வேண்டும். காலம் அவர்களை மாற்றும். அந்தக் கடமை உண்மையான அனைவருக்கும் உண்டு.

  நன்றி.

  Reply
 • மாயா
  மாயா

  //Poddu on July 9, 2009 12:06 am சாத்திரி தனது புளக்கில் இணைத்திருக்கிற கட்டுரையையும் ஒருக்கா படியுங்கோ. மேலே சொன்னதுக்கு இன்னும் வலுச்சேர்க்கினம் பாருங்கோ//
  சாஸ்திரி போன்றோர் நேர்மையற்றவர்கள். இப்படியான சுயநலவாதிகளின் கட்டுரைகள் அவர்களைப் போலவே இருக்கும். இருந்தது. பச்சோந்திகளை நம்ப வேண்டாம். இவர் புளொட்டில் இருந்து வந்து புலத்தில் புலியாக ஆவேசமாக எழுதியவர். யாழ் களத்தில் இவரை அனைவருக்கும் தெரியும். அவருக்கு எழுத்து வல்லமை இருக்கலாம். சிலதை பொறுக்கி எடுத்திருக்கலாம். இவர் போல இவர் எழுத்துகளும் ஒதுக்கப்பட வேண்டியவை. இதுவே இப்படியானவர்களுக்கு நாம் செய்யும் தண்டனை. இவர் மற்றும் சேது போன்றவர்கள் மீண்டும் தன் சுபாவத்தை காட்டுவர். அவதானம்.

  Reply
 • nalan
  nalan

  சாந்தன் //எப்போது செயற்பட்டார்கள்? புலிகள் அறிவித்தனரா? இல்லை தாங்களே அறிவித்தனரா?/

  புலிகள் என்றுமே யாரையும் அறிவித்துச் செய்யும் போராட்ட இயக்கமல்ல என்பதை மறந்து விட்டீர்
  சாந்தன் நீங்கள் யாரை காப்பாற்ற முயலுகிறீர்கள் (பயங்கரவாத இயக்கத்தை)என்பதை மறந்து விட்டீரோ அல்லது அது தான் நோக்கமோ அல்லத கள்ள கடத்தல் காரர்களாலும் மக்கள் போராட்டத்திற்கு பங்களிப்பு மூலம் புரட்ச்சி வெடிக்கும் என்றா….

  //‘அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல’ என உங்களை வசை பாடியபோது உங்கள் பக்கம் நின்றது தவறோ என இப்போது நினைக்கின்றேன்//
  சாந்தன் இந்த முயற்ச்சி சில நால பேர் தங்களின் சில கடந்தகால இயக்க துர்நாற்றங்கள் வெளிவர தேசம் இடம் அழித்துவிடும் என்பதாலும் தமது சுய பெயர்தேடும் செயல்களுக்கு பங்கம் வந்துவிடும் என்பதாலும் 73 பேரை துணைக்கு இழுத்து விட்டார்கள் அதில் நானும் ஒருவன் இன்று வரை அந்த கையெழுத்துப் போட போன் எடுத்த அந்த நபர் இதுவரையில் வேறு எந்த பொது விடயம் காரணமாகவோ அல்லது அரசியல் சந்திப்பு காரணமாகவோ என்னிடம் பேசவில்லை இது பற்றி முழு விமர்சனம் ஒன்று தேசத்திடம் கொடுத்துள்ளோன் ஜெயபாலன் பிரசுரிக்கவில்லை.

  இந்த 73 பெரில் உள்ள முக்கிய முன்னாள் புலி உறுப்பினர்கள் நபர்கள் சுந்தரம் கொலையின் நியாயப்படுத்தி நோட்டிடீஸ் அடித்தவர்கள் – எல்லாம் வெளிவரும்.

  Reply
 • palli
  palli

  //புலிகளின் தரத்திற்கு மற்ற அமைப்புகளை கொண்டு வந்து ஈடுசெய்வதை தவிர்கவும்: விடுதலைப் போராட்டத்திற்காக மற்றைய அமைப்புகள் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்கள்//
  இது என்ன பெட்டி கடையா? இன்று கடன் இல்லை என விளம்பர பலகை மாட்ட; யாராய் இருந்தாலும் கொலை கொள்ளை சமுதாய சீர்கேட்டில் உட்பட்டவர்கள் விமர்சிக்கபட வேண்டும்; அதுவே எதிர்கால தமிழ் சமுதாயத்துக்கு ஒரு பாடமாக அமையும்;

  //மற்றைய அமைப்புகள் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்கள்//
  அப்படியாயின் ஏன் இப்படி 39அமைப்புகள் தொடங்கின?அத்தனைக்கும் புலிதான் காரனமா? சரி அவர்களுக்குள் ஏன் புடுங்குபாடு?

  உமாவுக்கும் சந்ததிக்கும்?
  உமாவுக்கும் ராஜனுக்கும்?
  சிறியருக்கும் தாஸ்க்கும்?
  பத்மநாபாவுக்கும் டக்கிளசுக்கும்?
  பாலகுமார்க்கும் பிரபாவுக்கும்?
  சம்பந்தருக்கும் சங்கரிக்கும்?
  கருனாவுக்கும் பிள்ளையானுக்கும்?
  தேசத்துக்கும் தேனிக்கும்?
  தேனிக்கும் புதினத்துக்கும்?
  புதினத்துக்கும் நெருப்புக்கும்?
  நெருப்புக்கும் இலக்குக்கும்?
  இலக்கியத்துக்கும் பெண்ணியத்துக்கும்?
  பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும்?
  தலித்துயத்துக்கும் கமினிஸ்ட்டுக்கும்?
  ரிபிசி க்கும் ஜபிசி க்கும்.
  தீபத்துக்கும் டண்னுக்கும் ?
  டண்ணுக்கும் G T V க்கும்.
  தமிழ் ஒலிக்கும் தமிழ் அலைக்கும்.?
  இவ்வளவும் ஏன் பல்லிக்கும் மாற்று கடுப்பாளர்களுக்கும்? ஏன் கருத்து முரன்பாடோ அல்லது வாக்கு வாதமோ பிரிவோ அல்லது கைகலப்போ போட்டு தள்ளுதலோ வருகிறது????
  விட்டுகொடுப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் ரகசியமோ; இன்று பல தளம் புலம் பெயர் தேசத்தில் நடத்தும் பலர் ஏதோ ஒரு அமைப்பில் கல்வி கற்க்க சென்றோ அல்லது கற்றோ தோற்றவர்கள் தான் ஆனாலும் அவர்கள் கூட தாம் சார்ந்த அந்த அமைப்புகளை விமர்சிக்க மறுப்பது வேதனைதான்; இதில் தேசம் இருந்து தனி தவில் ர;;;;;வரை இந்த பணி தொடர்கிறது; ஆனாலும் தேசம் எம்மையாவது இருட்டில் மறைந்திருக்கும் பல குணசித்திர நடிகர்களை அம்பலபடுத்த அனுமதி தந்ததுக்கு நண்பர்கள் சார்பில் நன்றி; அதுக்காக தேசத்தையும் விமர்சிக்க தயங்க மாட்டோம்; ஆகவே விட்டுகொடுப்பு என்பது எம்மவர்க்கு என்ன என தெரியாத ஒரு விடயம்; பல்லிக்கும்தான்; பல்லியும் தமிழன்தானே அதுவும் ஈழ தமிழனாச்சே;

  Reply
 • rohan
  rohan

  //இருப்பினும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். எவ்வளவை இங்கு எழுதலாம் என்பதைதான் யோசிக்கிறேன். //
  அப்போது சின்னப் பொடியனாக இருந்த ஒருவர் தான் வேட்டுகளைத் தீர்த்ததாக எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்திருக்கிறது.

  //இருவரும் பழகியவர்களுடன் நன்கு கதைப்பார்கள். இவர்களைப்போல் நல்லவர்களை என்வாழ்க்கையில் நான் இன்னும் சந்திக்கவில்லை. //
  //ஆனால் இங்கு ஒரு சுவார்சியமான விடயத்தை எழுதவேண்டியுள்ளது. உமைபாலனை எனக்கு குடும்பரீதியாக 787 பஸ் ரூட் பகுதியில் பழக்கம். //

  787?
  யாழ் – காங்கேசன்துறை பேருந்து 767 என்றும் அள்வெட்டி ஊடான யாழ் – கீரிமலை பேருந்து 768 என்றும் எனது ஞாப்கம்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  றோகான்! 787 யாழ்பாணம்-சண்டிலிப்பாய்-சித்துங்கேணி-மாதகல்

  தயவுசெய்து இறைகுமாரனை சுந்தரத்தின் கொலையுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள். சுந்தரம் புதியபாதை எழுதுவது என்பதும் சித்திராப்பிரசுக்குப் போகிறார் என்பதும் இறைகுமாரனை விட மற்றவர்களுக்கும் தெரியும். இறைகுமாரனின் கொலை அறிவுகெட்டவர்களின் தப்புக்கணக்குக் கொலை. சந்தியும் இறையும் இளைஞர் பேரவை செயற்குழுவில் இருந்தவர்கள். அங்கேயும் கருத்து மோதலுகள் நடப்பது வளக்கம். சந்ததிக்கும் இறைக்கும் பண்பிலும் பழக்க வளக்கங்களிலும் பெரிய வேறுபாடு உண்டு. இறைகுமாரனை இரவு வீட்டில் இருந்து அழைத்துப்போகும் போது கண்டவர்கள் சொன்னதன்படி அழைத்துச் சென்றவர் ஏற்கனவே இறைக்குத் தெரிந்தவராம். இடக்கையால் இடப்பக்க கண்ணாடி பிரேமை அழுத்தி அழுத்தியே பேசினாராம். தம்பிக்கும் ஒரளவு தெரிந்திருக்க வேண்டும் சுந்தரம் எங்கு போய்வாறார் என்று முக்கியமாக ஒரு குறிப்பிட்ட கடையில்தான் சுந்தரம் தேனீரருந்துவார். ஒருமுறை பிரபாவைக் கண்டுவிட்டு இரகசியமாக உடன் தேனீரருந்தியவர்களுக்குச் சொல்லாமல் தேனீர்கடையின் பின்பக்கம் சென்றார். மற்றவர்களுக்கு பின்புதான் தெரியவந்தது ஏன் சுந்தரம் மறைந்தார் என்பது.

  பல்லி! கனடாக்காரனை நான் சொல்லாததற்கு முக்கியகாரணம் ஆரம்பத்தில் புலிகளுடன் இருந்தார் என்பதற்காக அவர் தண்டிக்கப்படுவதோ சாயம் பூசப்படுவதே இன்றைய அவரின் வாழ்வை நாசப்படுத்துவதோ நல்லதல்ல. இது என் மனச்சாட்சியின் வெளிப்பாடே

  Reply
 • Kusumbo
  Kusumbo

  நண்பா! நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. இறைகுமாரன் மட்டுமல்ல சுந்தரம் கூட எந்தக்குற்றமும் செய்யாது தண்டிக்கப்பட்டவர்களே. தம்பிக்கு உமாவை தேடிப்பிடிக்க முடியவில்லை; பிடிக்க வக்கில்லை அதனாலை சுந்தரத்தைப் போட்டார். தம்பியின் அரசியல் அம்மணம்தான் சுந்தரத்தின் கொலை.

  Reply
 • Thaksan
  Thaksan

  குசும்பு தப்பாக கணித்துள்ளார் என்றே நம்புகின்றேன். சுந்தரத்தின் கொலைக்கு பின்னர் பிரபா கூறிய காரணம் ஆயுதங்களை (தமிழீழ விடுதலைப் புலிகள் உடைவின்போது 1980ல்)உமாவிடம் கையளித்தார் என்பதே. ரி.என்.ரி யின் பெயர் மாற்றப்பட்டு எல்.ரி.ரி.ஈ உருவானதன்போது உமாவை அதன் தலைவராக பிரபாவே பிரேகரித்தாராம். அப்போது நிதிப் பொறுப்பாளராக இருந்த ஐயர்(தற்போது சென்னையில் தனது சொந்த வர்த்தகத்துடன் இருக்கிறார்)> நாகராஜா(வாத்தி) ஆகியோர் எல்.ரி.ரி.ஈ பிரிவுடன் பக்கங் சாராமல் ஒதுங்கிக் கொண்டாலும் உமாவுடன் தொடர்பிலிருந்தார்கள். சுந்தரத்தின் இராணுவ நடவடிக்கைகளில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த பிரபா உமாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சுந்தரத்தின் மீது கண் வைத்தார் சுந்தரத்தின் அரசியல் பார்வையையும் தொலைநோக்கையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் பிரபாவுக்கு அப்போது இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. அத்துடன் “புதியபாதை”யின் கருத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மீதான விமர்சனங்களும் தனது அரசியலுக்கு ஆபத்தானதென அமிர்தலிங்கம் தெரிந்துகொண்டதால் பிரபாவை இதில் பாவித்துக் கொண்டார் என்பதே புரிந்துகொள்ளக்கூடியது. எல்.ரி.ரி.ஈ உடைவின் பின்னர் பிரபா எங்கெல்லாம் அடைக்கலம் தேடியிருந்தார் என்பதை அவரை ஆதரித்தவர்களே சொல்லும் காலம் நெருங்கியிருக்கிறது என நம்புகிறேன். நிற்க! சந்ததியாருக்கு இறைவனுடன் பகையிருந்தாலும் அவரது கொலையில் பங்கிருக்கவில்லை. அந்த கொலையை பிரச்சனைக்குரியதாக்கியதில் சந்ததியாரின் பங்கு முக்கியமானதாம். தவிர மொட்டை மூர்த்திக்கோ கிளிநொச்சி சுதாவிற்கு இந்த கொலையில் எந்த சம்பந்தமும் இல்லையென முன்னாள் புளொட் அங்கத்தவர் ஒருவர் ஆதாரங்களுடன் சொல்கிறார். அந்த கால கட்டத்தில் அவர்கள் வெறும் ஆதரவாளர்கள் தானாம். பல்லி சொன்னதுபோல் பாலமோட்டை சிவம் சம்பந்தப்பட்டிருக்கிறாராம். மற்றயவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

  Reply
 • santhanam
  santhanam

  உமா, சந்ததி? சந்தியாரும் இறையும் இளைஞர் பேரவை செயற்குழுவில் இருந்தவர்கள். அங்கேயும் கருத்து மோதலுகள் நடப்பது வழக்கம். சந்ததியாருக்கும் இறைக்கும் உமா, பிரபா பிளவின் பின் இறை பிரபாவின் பக்கமும் சந்ததியா உமாவிடமும் சேர்ந்தார்கள். இதில் சந்ததியாரின் ஆலோசனைபடி அவரின் மருமகன் சங்கிலி தலைமையில் செட்டிகுளத்தை சேர்ந்த இன்னொருவரும்தான் இறை உமையை கொலை செய்தார்கள் பிரபா அணியில் ஒரு அரசியல் தலைமை உருவாகுமானால் அது தனக்கும் உமாவிற்கும் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும் என்று பிரபாவிடம் உள்ள ஒரே ஒரு அரசியல் அறிவாளியை அழிப்பதன் முலம் பிரபாவின் ஆயுதபோரட்டத்திற்கு முற்று புள்ளிவைக்காலம் என்ற கனவு. ஆனால் அதே சந்ததியார் சங்கிலிளால் தான் கொலைசெய்யபட்டார்.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  இங்கு பல நண்பர்கள் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்கள். தேசம், தேசம்நெற் வரலாறு 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. தேசம் சஞ்சிகையாக வரும்போது நாம் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கவில்லை. ஆனால் தேசம்நெற் இணைய ஊடகமாக மாறிய பின்னரே தேசம்நெற்க்கு நெருக்கடிகள் ஆரம்பித்தது. அந்த நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம் தேசம்நெற்றில் வெளியிடப்படும் பின்னூட்டங்கள்.

  நண்பர் பல்லி படிக்க விரும்பும் ரகு, ரதன், அரவிந்தன் ஆகியோரின் பின்னூட்டங்கள் பெருமளவில் வந்த வேளையில் தேசம்நெற் புலிகளிடம் விலைபோய்விட்டதாக பலரும் விமர்சித்தனர். ஜெயபாலனே ரதன் என்று கூட்டங்களில் குற்றம்சாட்டும் அளவிற்கு அது சென்றது. தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவரே பல்லி என்று பலரும் சந்தேகிக்கின்றனர். உண்மை என்னவெனில் எமக்கு ரதனையோ பல்லியையோ யார் என்று தெரியாது. அதை தெரிந்து கொள்ள முற்பட்டதும் இல்லை.

  தேசம்நெற் கருத்துக்களுக்கான தளம். தகவல்களுக்கான தளம். பல்வேறு முரண்பட்ட கருத்துக்களும் முட்டிமோதுகின்ற களம். அவரவர் தங்கள் பார்வையில் தேசம்நெற்றை காலத்திற்கு காலம் ஒவ்வொரு அரசியலுடன் அடையாளப்படுத்துகின்றனர். தேசம்நெற்றை புலிகளுக்கு விலைபோனவர்கள் என்றது முதல் இலைங்கை அரசுக்கு விலைபோனவர்கள் என்றது வரை பல்வேறு விமர்சனங்கள் உண்டு. அனைத்து விமர்சனங்களையும் வரவேற்கிறோம்.

  தேசம்நெற்றை வரலாறு நிச்சயம் மதிப்பீடு செய்யும்.

  குறிப்பாக பின்னூட்டங்களே தேசம்நெற்றின் பலமும் பலவீனமுமாக உள்ளது. கருத்தாளர்களின் கருத்துக்களே தேசம்நெற்றின் பலம். அதனை நீங்கள் பொறுப்புடன் செய்து வருகின்றீர்கள். தொடர்ந்தும் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

  பின்னூட்டங்கள் வரலாறுகளை மீள மீள ஆய்வுக்கு உட்படுத்தகின்றன. அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை கேள்விக்கு உட்படுத்துகின்றன. இதனால் கசப்பான உண்மைகள் வெளிவருகின்றது. சிலசமயம் ஊகங்களும் வெளிவருவது உண்மைதான். தவிர்க்க முடியாதது.

  தேசம்நெற் கருத்தாளர்கள் உள்ளவரை உண்மைகள் நீண்ட நாட்களுக்கு உறங்க முடியாது. அவை தட்டி எழுப்பப்படும்.

  இதுவே தேசம்நெற்க்கு ஏற்படும் நெருக்கடிக்கான காரணம். அதனை தேசம்நெற் எதிர்கொண்டது. இனிமேலும் எதிர்கொள்ளும்.

  சுந்தரம், இறைகுமரன், உமைபாலன் போன்றவர்களின் கொலைகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்ட்டத்தில் இடம்பெற்ற மரணங்கள் குறிப்பாக அரசியற் படுகொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.

  உலகில் சூரியன் மறையாத சாம்பிராஜ்யத்தை கட்டிய இங்கிலாந்து ஒரு சிறிய தேசம். (இந்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லன்ட், வட அயர்லாந்து சேர்ந்ததே இன்றைய ஐக்கிய ராஜ்ஜியம் – பிரித்தானியா) அவர்கள் தங்கள் கடற்படை வலிமையால் மட்டும் அதனைச் சாதிக்கவில்லை. அவர்களிடம் இருந்த திட்டமிடலே அதற்கு முக்கிய காரணம். இன்றும் பலகுடியேற்ற நாடுகளின் வரலாறு என்பது பிரித்தானியரால் எழுதப்பட்ட வரலாறே.

  தமிழர்களாகிய நாம், போராட்டத்தின் சமகாலத்தில் வாழ்ந்த நாம், எமது வரலாறுகளை சரியாக எழுதிச்செல்லத் தவறினால் மகிந்த சிந்தனையாளர்கள் எழுதுவதே தமிழ் மக்களுடைய வரலாறாக ஆகிவிடும். அதனால் உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் வரலாறுகளை விஞ்ஞானபூர்வமாக பதிவு செய்வது அவசியம்.

  இங்கு சம்பவங்கள் பற்றி முதற்தர தகவல் தெரிந்த நண்பர்கள் பலர் கருத்துக்களை எழுதி உள்ளனர். அவர்கள் சற்று சிரத்தையெடுத்து அவற்றை கட்டுரையாகத் தொகுப்பது மிகப் பயனுள்ளதாக அமையும். தங்கள் பெயர்களை இணையத்தில் வெளியிட விரும்பாதவர்கள் தேசம்நெற் ஆசிரியர்களுக்கு தங்களைத் தெரிவித்துக் கொண்டு புனைப்பெயரில் கட்டுரையை வெளியிடலாம். அதனையும் விரும்பாதவர்கள் கட்டுரையின் நம்பகத்தன்மையை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திக் கொண்டு தங்களை வெளிக்காட்டாமலேயே கட்டுரையை வெளியிடலாம்.

  நன்றி
  த ஜெயபாலன்.

  Reply
 • மாயா
  மாயா

  உமா மற்றும் பிரபாவுக்கிடையிலான சென்னை பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வு மற்றும் புளொட் படைத்துறைச் செயலர் கண்ணன் கடத்தப்பட்டது போன்ற சம்பவங்களுக்குப் பிறகு உமா கலந்து கொண்டு உரையாற்ற இருந்த கூட்டத்தில் (1985)வைத்து உமாவை படுகொலை செய்ய பிரபா ஒரு குழுவை திருச்சிக்கு அனுப்பினார்.

  இதை அறிந்த புளொட் முதலில் செய்தது சென்னை அடையாறில் பிரபா இருந்த வீட்டை முற்றுகையிட்டதுதான். பெரியவருக்கு(உமா) ஏதாவது நடந்தால் பிரபாவை முடிப்பதே சென்றவர்களது முடிவு. அது பிரபாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உமாவைக் கொல்ல திருச்சி சென்ற புலிகளில் நால்வர் புளொட்டால் கிரினெட்டுகளுடன் கைதானார்கள்.

  சென்னை பிரபா வீடு முற்றுகை குறித்து அறிந்த உமா, சென்னையில் வைத்து அசம்பாவிதங்களில் ஈடுபட வேண்டாம். உடனே திரும்புமாறு பணித்தார். புளொட் அடையாறை விட்டு திரும்பியது.

  சில நாட்களின் பின்னர் பஸ்ஸில் தஞ்சாவூரிலிருந்து உரத்தநாடு வந்து கொண்டிருந்த இரு புளொட் தோழர்களை சிறீலங்கா சீஐடீயினர் எனச் சொல்லி புலிகள் கடத்தினர். விபரம் அறிந்த வாமர் குழு ஜீப்பை எடுத்துக் கொண்டு புலி முகாமுக்குள் நுழைந்து எச்சரிக்கை செய்துவிட்டு கடத்தியவர்களை மீட்டு வந்தனர். புலிகளின் இப்படியான சேட்டைகள் சென்னையிலேயே அரங்கேறின. அப்படியும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் புளொட்டினால் அத்து மீறாமல் உமா (முகுந்தன்) பார்த்துக் கொண்டார்.

  ஆனால் சந்ததியாரை வடபழனி வீட்டில் வைத்து பிடிக்கப் போகும் போது நான் முக்கியமானவரது சென்னை வீட்டில் இருந்தேன். சந்ததியார் கொடுத்த தகவலால்தான் புளொட்டுக்கு வந்த ஆயுத கப்பல் பிடிபட்டதான சந்தேகம் வலுத்திருந்தது. ஜீப்பில் வந்தவர்கள் வீட்டில் இருந்தவரையுயும் அழைத்துக் கொண்டு வடபழனியில் சந்ததியார் செல்லும் பெண் வீட்டுக்கு போனார்கள்.

  அங்கிருந்து பிடிபட்ட சந்ததியாரின் உயிர் ……மேட்டு மாயானத்தில் முடிந்தது. எல்லாம் முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் உரத்தநாடு புறப்பட்டனர். அடுத்த நாள் சென்னை போலீசார், சென்னையிலிருந்த சிலரை போலீஸ் நிலையத்துக்கு கூட்டிச் சென்று சந்ததியார் சாவு குறித்து கேட்டனர். எல்லோரும் தமக்கு எதுவுமே தெரியாதென கையை விரித்த போது போலீஸார் தலையை சொறிந்து கொண்டு எதுவுமே தெரியல்லேண்ணா போங்கடா என்று அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டனர்.

  உமா எங்கிருக்கிறார் என்று தேடினர். அவர் தஞ்சாவூரில் இருந்ததாக போலீஸார் உறுதி செய்ததால் இக் கொலைக்கும் உமாவுக்கும் தொடர்பில்லை என போலீஸார் நம்பினர். அது அந்தக் காலம்.

  Reply
 • மாயா
  மாயா

  //santhanam on July 12, 2009 8:27 pm சந்ததியார் சங்கிலியால் தான் கொலைசெய்யபட்டார்.//
  இவரைச் சுட்டுக் கொன்றது சங்கிலி (கந்தசாமி)அல்ல. கொலை நடந்த இடத்தில் இருந்த மூவர் உயிரோடு இல்லை. அவர்கள் உமா, படைத்துறைச் செயலர் கண்ணன் மற்றும் சங்கிலி. சம்பந்தப்பட்ட சிலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர். எனவே அவர்களது பெயரை தவிர்க்கிறேன்.

  Reply
 • palli
  palli

  மன்னிக்கவும் தேசம்நிர்வாகம்; தேச ஆசிரியர்தான் பல்லி என பலர் குற்றம் சாட்டுவதாக ஜெயபாலன் சொல்லியிருந்தார்; உன்மையில் அது தவறு; தேச நிர்வாகத்துக்கும் பல்லிக்கும் இதுவரை எந்தவித தொடர்பும் இல்லை; பல்லி சில விடயங்களை தேசநிர்வாகத்துக்கு பின்னோடம் செய்தேன்; அதை செயல்முறைபடுத்த பல்லியை தேசத்துடன் தொடர்பு கொள்ளும்படி ஜெயபாலன் பின்னோட்டம் விட்டதை சிலர் கவனித்திருக்கலாம்; பல்லி இதுவரை எழுதிய எழுதுகிற கருத்துக்கள் சம்பவங்கள் அனைத்தும் பல்லியினுடையதே. இதில் தேச நிர்வாகத்தை சம்பந்தபடுத்த யாரும் முனையவேண்டாம்; பல்லி யார் என்பது கண்டிப்பாக தெரியதான் போகிறது; ஆனால் அன்று பல்லி யாராய் இருந்தால் நமக்கென்ன என்ற சூழல் எமது சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதே என் கனவு;

  Reply
 • palli
  palli

  மாயா தாங்களும் புளொட்டில் ஏதோ முக்கியபங்கு வகித்தவராக இருக்க வேண்டுமென சிவா சின்னபொடி முனுமுனுப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்; ஆனாலும் பல உன்மைகள் சொல்லும் மாயா சிலரை காப்பாற்றுவதாகவும் குறைபட்டாராம் அப்படியா?

  Reply
 • நண்பன்
  நண்பன்

  //palli on July 12, 2009 10:09 pm மாயா தாங்களும் புளொட்டில் ஏதோ முக்கியபங்கு வகித்தவராக இருக்க வேண்டுமென சிவா சின்னபொடி முனுமுனுப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்; ஆனாலும் பல உன்மைகள் சொல்லும் மாயா சிலரை காப்பாற்றுவதாகவும் குறைபட்டாராம் அப்படியா?//

  நான் முக்கிய பொறுப்பில் இருந்தனா? சே..சே…அப்படியில்ல. ஆனா உமாவோட செல்லம். அது பிரான்ஸில இருக்கிற பேபி அக்காவுக்கு தெரியும். அவ்வளவுதான்.

  சிவா சின்னப்பொடியை TTN தொலைக்காட்சியில முதலாவதா கண்ட போது அதிர்ந்தே போனன். தாய்லாந்து பேச்சு வார்த்தை குறித்து சின்னப்பொடி விவரணம் செய்த போது புளொட் கொள்கைகளை புலியாக மாறி செய்ததை பார்த்து சிரிப்புதான் வந்தது. உமாவின் கருத்துகளை அழகாக எழுதி தமிழீழத்தின் குரல் வானோலியில் வாசித்தவர் சிவா சின்னப்பொடி திவாகரன். இதுக்கு மேல நான் கதைக்க ஏலாது. தாங்கள் முன்னேற எங்க போனாலும் முன்னுக்கு நிக்கிற பலரை பற்றி பெரியவர் ஜாடையா சொன்னவர்/ காட்டினவர். அதில நான் பார்த்த பலர் இன்னமும் இருக்கிறாங்கள். பெரியவர் , தெரிந்து கொண்டே செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

  அடுத்தது அவரைச் சுற்றி நின்ற மொக்கு கூட்டம். எல்லாம் செய்திட்டு பெரியவருக்காக என்று சொன்ன போதெல்லாம் பழியை தானே ஏற்றது ஏனோ தெரியாது? இதனால் நானே அவரை வெறுத்ததுண்டு. தூக்கி வீசிவிட்டு வெளியேறிய போதும், போனால் அவதானமாக இருக்க சொன்ன மனுசன் உமா மகேஸ்வரன். இன்றும் நான் உயிரோடு இருக்க காரணம் அவர் சொன்ன அந்த அலேட்தான்.

  கார் வரத் தாமதமானால், சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு பாதுகாப்பே இல்லாமல் சைக்கிளில் போன ஒரு இயக்க தலைவனாக நான் அவரை பல தடவை கண்டுள்ளேன். என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் ஆற்றல் உள்ளவர். தமிழகத் தலைவர்களே முகுந்தனோடு பேச முடியாது என்பார்கள்.

  சென்னையில் நடந்த அனைத்து கட்சி கருத்தரங்கில் தமிழர் போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்ல முகுந்தன்தான் சரியான ஆள் என்று ரத்னசபாபதி அத்தனை கேள்விகளையும் முகுந்தனிடம் கேளுங்கள் என்றார். சீறீ சபாரத்தினம் கொல்லப்பட்டு செல்வம் தேர்வாகியிருந்தார். புலிகளில் திலகர்,பத்மநாபா, வாசுதேவா மற்றும் ரத்தின சபாபதி அங்கே இருந்தார்கள். நானும் பெரியவரோடு சென்றிருந்தேன்.

  அங்கேதான் B camp முகாமில் நடந்த கொலைகளை உண்மை என்று பகிரங்கமாக சொன்னார். போராட்டத்தில் இப்படியான தவறுகள் நிகழும். அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்றார். எனக்கு அந்த போராளிகளது மரணம் குறித்து கோபம்தான். அதை அவரிடமே சொன்னேன்.அந்த வெளிப்படுத்தல் இன்று அவர் மழுப்பல் இல்லாத மனிதராக ஏற்றார் என்பதாக உணருகிறேன்.

  தமிழீழம் தமிழருக்கு சாத்தியமற்றது. சுவிஸ் போன்ற ஒரு மாநில சுயாட்சி அல்லது அனைத்து இலங்கை மக்களோடு இணைந்த பாட்டாளி மக்கள் போராட்டம் இவைதான் சாத்தியம். சிங்களவர்களது விருப்பம் இன்றி விடிவு இல்லை என்றார். அதுவும் மிக நீண்ட கால போராட்டமாக இருக்கும் என்றார். ஏனைய இயக்கங்கள் நடத்திய தொடர் தாக்குதல்கள் படையினரை பலப்படுத்தும் விதமாக ஒருநாள் அமையும் அபாயம்தான் என்று சொல்வார்.

  அவை அனைத்தும் இன்று நிஜம்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  தக்சன்! ஒருவிடயத்தை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். சுந்தரம் ஆயுதங்களை உமாவிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் சுந்தரம் உமாவுடன் தான் இயங்குகிறார் என்பது பிரபாவுக்கத் தெரியும். மேலும் புலிகளில் இருந்து புளொட் வெளியேறும் போது இடதுசாரித்துவப் புத்தகங்கள்; போராட்டு வரலாறுகள்> கெரில்லாப் போர்முறை தந்திரங்கள் போன்ற புத்தகங்களும் சில ஆயுதங்களும் புளொட் எடுத்து வந்து கே கே எஸ் வீதியிலுள்ள ஒரு சில வீடுகளில் பகிரப்பட்டு பாதுகாக்கப்பட்டது. சில ஆயுதங்கள் சுளிபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டது. அடுத்து ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தாக்குதலில் எடுத்த ஆயுதங்கள் சுளிபுரத்தில் ஒரு பழைய இளைஞர் பேரவை உறுப்பினர் வளவுக்குள் தாழ்க்கப்பட்டது. அவர் சிறையில் இராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரின் குடும்ப நலன் கருதி பெயரைக் குறிப்பிடவில்லை. இந்த ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல்; கிளிநொச்சி வங்கிக் கொள்ளையுடன்தான் பிரபா மிரளவெளிக்கிட்டார். உமாவைக் குறிவைத்துத் திரிந்தாலும் உமாவுக்கு அதிக பாதுகாப்பு இருந்தது. சுந்தரம் அப்படியல்ல. பிரபா முதலில் நம்பியது கொண்டுபோன ஆயுதங்களுடம் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று. நடந்ததோ வேறு. சுருக்கமாகச் சொல்லின் சுந்தரம் சுடப்பட்டதற்கு பிளவின் போது எடுத்து வந்த ஆயுதங்களே காரணம் புத்தகங்களை பிரபா பெரிதாக எண்ணியதில்லை. சுருங்கக் கூறின் பிரபா ஆயுதங்களில் மனநோய் கொண்டவர்.

  /சுந்தரத்தின் அரசியல் பார்வையையும் தொலைநோக்கையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் பிரபாவுக்கு அப்போது இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. அத்துடன் “புதியபாதை”யின் கருத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மீதான விமர்சனங்களும் தனது அரசியலுக்கு ஆபத்தானதென அமிர்தலிங்கம் தெரிந்துகொண்டதால் பிரபாவை இதில் பாவித்துக் கொண்டார் என்பதே புரிந்துகொள்ளக்கூடியது. எல்.ரி.ரி.ஈ உடைவின் பின்னர் பிரபா எங்கெல்லாம் அடைக்கலம் தேடியிருந்தார் என்பதை அவரை ஆதரித்தவர்களே சொல்லும் காலம் நெருங்கியிருக்கிறது என நம்புகிறேன்/
  பிரபாவுக்கு எப்போது அரசியல் நோக்கு இருந்து தொலைநோக்கைப்பற்றிச் கதைப்பதற்கு. உடைவு பிரபாவுக்குப் மநோரீதியாக பொரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது தோளோடு தோள் நின்றது சீலன் (சாள்ஸ்) இவர் பிரபாவால் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டவர். பாடசாலைக் கொடியெரிபதனூடாக இனங்காணப்பட்டவர். சுந்தரத்தைப் அமிர் ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. நாகராசா வாத்தி உடைவின் போது வெளியில் வந்தாலும் உமாவுடன் தொர்புகளைப் பேணினார் என்றீர்கள். இந்த உடைவுக்குக் காரணம் யார் என்று அவரிடம் கேளுங்கள் தானும் தான் காரணம் என்று சொல்வாரா? கேட்பீர்களா?

  இறையை யார்போட்டது என்பது சந்ததிக்கு நிச்சயம் தெரியும். சுத்தரத்தையும் சந்ததியையும் ஒப்பிடும் போது அமிருக்குத் தலையிடிகாக இருந்தது சந்தியே சுந்தரமல்ல. மேலும் பாலமோட்டை சிவத்தின் பெயரைக் நான் குறிப்பிட விரும்பாததற்குக் காரணம் அவர் உயிருடன் இருக்கிறார் என்தால் தாங்கள் குறிப்பிட்டதால் தொடர்ந்து எழுதுகிறேன். இறைகுமாரனுக்கு நன்கு பழக்கமுடைய ஒருவர்தான் இறையை கதைக்க என்று வெளியில் கூட்டி வந்தார். கதைவளி முற்றிப்போக இறை ஒருவிடயத்தை ஆணித்தரமாக மறுத்தார். இதுவே கொலைக்குக் காரணம் என்று அயலவிரிடம் துப்புத் துலக்கினேன். இறை உமா சுடப்பட்டது சரியான புரிதலும் பதட்டமுமே காரணம் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். குமணன் உயிருடன் இருந்தால் கேளுங்கள்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  தாசன் நான் கணிக்கவில்லை ஒன்றாக இருந்தவன். இந்த இரண்டு கொலைக்குப் பின் என்தலைதான் என்றிருந்தது. இதைவிட மேலும் எதுவும் வேண்டாம்..
  மாயா! உங்களுக்கு படைத்துறைச் செயலாளர் கண்ணனைத் தெரியும் என்றால் என்னை நிச்சயம் சந்தித்திருப்பீர்கள் இயக்கப் பெயருடன். இது புலிஉடைந்த காலம் 82க்கு முன்.
  மாயா நீங்கள் நம்புகிறீர்களா சந்ததி புலிக்குத் தகவல் கொடுத்திருப்பார் என்று. சந்ததி வாயே தவிர வள்ளல் குறைவு. புலிகள் வெருட்டி உண்மையைக் கறந்திருப்பார்களோ? உங்களிடம் மேலும் ஒரு கேள்வி. புளொட் பொடியளுக்கு பலசந்தர்பத்தில் பிரபாவைப் போடச் சந்தர்பம் கிடைத்தபோதும் முகுந்தன் தடுத்தது ஏன். இது ஒருமுறையல்ல பலமுறைகள். என்ன விசுவாசம்? ஊர்மிளாவா? நீங்கள் புலி உடைவின் பின் புளொட்டில் சேர்ந்த வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதி சார்ந்தவர் என்று தெரிகிறது. பதில் சொல்லுங்கள். சந்ததி சாவு பின்நடந்தது. கிளிநொச்சி வங்கிக் கொள்ளையின் பின் புளொட் கொண்டுவந்த ஆயுதங்களை இந்தியபடைக்கு பிரபாதான் தகவல் கொடுத்தால். இத்தகவல் எப்படிப் பிரபாவுக்குப் போனது? அப்போது புளொட்டில் நீங்கள் இருந்தீர்களோ தெரியாது.

  Reply
 • மாயா
  மாயா

  Kusumbo, கண்ணன், சுபாஸ் மற்றும் தாஸனுடன் பல முறை கண்டிருப்பீர்கள் என்று கருதுகிறேன். நீங்கள் சொல்லும் பல தகவல்கள் எனக்கு சரியாத் தெரியாது. இவை குறித்து நான் அதிகம் அலட்டிக் கொள்ளாத காலம். அதற்கு பெரியவரோடு இருந்த நெருக்கம் காரணமாக இருந்தது. சின்ன மென்டிஸோடு சில சமயம் பார்த்திருப்பீர்களோ? ஒருநாள் சந்திக்கும் நிலை வரலாம். அப்போது பேசுவோம்.

  பிரபாவோடு, உமாவுக்கு ஏதோ மனக் கசப்பு இருந்ததே தவிர அவரை போட்டுத் தள்ளும் நோக்கம் உமாவுக்கு இருக்கவில்லை. அது ஊர்மிளாவாக இருக்க முடியாது. அது போராட்டத்தின் பலம் குறைந்து விடும் என்ற நோக்கமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எந்தவொரு இயக்கமும் அழிய வேண்டும் என்ற கருத்து உமாவிடம் இருக்கவில்லை.

  அதற்கு காரணம், நான் பல முறை அனைத்து இயக்கங்களும் இணைந்து போராடுவது பலமாக இருக்கும் என்று உமாவோடு வாதிட்ட சமயத்தில் , அது பல பிரச்சனைகளை உருவாக்கும். இப்போதைய நோக்கம் அனைவரும் சிறீலங்கா பாசிச அரசுக்கு எதிராக போராட தத்தமக்குள் பலமாவதுதான் என்றார்.

  புளொட் தவிர்த்து அடுத்த இயக்கங்கள் ஒன்று சேர்ந்து நிற்கும் படத்தை பார்த்துவிட்டு உமா சொன்னது ” முழியன் (பிரபா) , இவங்களை போட்டுத் தள்ளப் போறான்.” என்பதே. நாங்கள் பலவீனமாகியதை உணர்வதாக சொன்ன போது ” இருந்து பார். முடிவு அதிக தூரமில்லை” என்றார். அது நடந்தது.

  இங்கே பிரபா, EPRLF,TELO, EROS & LTTE இணைந்ததால் பலம் பெற்றோம் என்பதாக நினைத்ததை விட இணைந்தவர்களது பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அவர்களை அழிக்க அதை பயன்படுத்தியதுதான் நடந்தது.

  கிளிநொச்சி வங்கிக் கொள்ளை குறித்து தெரியும். தகவல்கள் தெரியாது. ஆனால் புளொட்டுக்கு வாங்கப்பட்ட சீன தயாரிப்பு ஆயுதங்கள் பஞ்சாப் மாநில முகவரிக்கு சில கொண்டேனர்களில் வருவது புளொட்டின முக்கிய நபர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர்களிடமிருந்த தகவல் இந்திய அரசுக்கு சென்றது சந்ததியாரால்தான் என்ற கருத்து பரவலாக இருந்தது. இந்த ஆயுதக் கொள்வனவு சந்ததியார் பிரிந்து செல்லு முன் இந்திரா காந்தி உயிரோடு இருந்த போது நடந்தது. ஆயுதங்கள் சென்னை வந்த போது சந்ததியார் பிரிந்து சென்று இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலரால் கொல்லப்பட்டிருந்தார். தகவல் கசிந்தது சந்ததியாரால் என்பதே கருத்தாக இருந்தது. இந்திரா கொலையும், பஞ்சாப் முகவரியும் ஆயுதங்களை வெளியே எடுக்க தடையாகின.

  துறைமுக தாக்குதல் ஒன்றின் பின் ஆயுதங்களை மீட்க இன்டர்லிஜன்ஸ் என்று சொல்லிக் கொண்ட சிலர் முயல முயன்ற போதும் அதை உமா தடுத்து விட்டார். அது தமிழ்நாட்டில் புளொட்டின் கடைசி அத்தியாயமாகிவிடும் என்று கடுமையாக இருந்து அவர்களை தடுத்தார்.

  சந்ததியார், வட பழனியிலிருந்து கடத்தப்பட்டு சந்ததியை விசாரித்த பின்னரே கொல்லப்பட்டார். சந்ததியால், அத் ஆயுதம் குறித்த தகவல் இந்திய புலனாய்வு துறைக்கு வழங்கப்பட்டதாக உறுதியானது. அப்போது உமா அங்கே இருந்தார். அதன் பின்னரே சந்ததியார் கொல்லப்பட்டார். வங்கம் தந்த பாடம் புத்தகம் சந்ததியாரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டு இருந்ததால் அக் கொலை குறித்து இந்திய புலனாய்வுத்துறை மகிழ்ந்ததே தவிர , அதன் சந்தேக நபர்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் புளொட் இந்தியாவுக்காக அந்த கொலையை செய்ததாக சிலர் சந்தேகம் கொண்டார்கள்.

  Reply
 • palli
  palli

  ஜயோ ஜயோ உங்களை போன்ற பிரமுகர்களை தான் பல்லி தேடி திரியுது; (அன்றய கேனைதனமான பல விடயங்களை தெரிந்து கொள்ளதான்)குசும்பு; மாயா; நண்பனும்தான்; பலவிடயங்கள் தமிழர் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் உங்களிடம் இருக்கிறது; அதை சொன்னால்
  எமக்கும் சில புருடாக்கள் தெரிய வாய்பல்லவா.

  சந்ததி ஏன் கொல்லபட்டார்? யாரால்? எப்படி.
  காக்கா ஏன் கொல்லபட்டார்? யாரால்? எப்படி.
  புளொட்டின் உள் கொலை ஏன்.? யாரால்? எங்கு?
  எப்படி? தீப்பொறி உருவாச்சு? அவை காணாமல் போனதுக்கு என்ன காரணம்?
  சின்ன மெண்டிஸ் எப்படி தள பொறுப்பை எடுத்து கொண்டார்?
  அவரை விட திறமையும் அனுபவமும் ஏன் பளயவர்கள் கூட இருக்கும் போது இவருக்கு இந்த பதவி ஏன்? சரி அரசியல் வாசு தகுதியானவரா??
  ஏன் யான் வாத்தி தவிர்க்கபட்டார்?
  படைதுறை கண்ணன் இவர் ஒரு ராணுவமா?
  அப்படியாயின் பரந்தன் ராஜன் ஏன் ஒதுக்கபட்டார்?
  சங்கிலியின் பதவி என்ன?
  மாணிக்கதாசன் ஏதும் பதவியில் இருந்தரா?
  புளொட்டின் மத்திய குழு உறுப்பினர் யார்??
  எதற்க்காக கந்தர் கொடையில் மகாநாடு நடத்தினார்கள்;
  ராசன் ஏன் பிரிந்தார்? உமா ஏன் கொல்லபட்டார்
  யாரால் கொல்லபட்டார்?
  இப்படி பலவிடயம் தெரியவேணுமே; காரனம் புளொட்டின் மறுபக்கம் என சிவா சின்னபொடி எழுதியதை படித்ததுக்கும் உங்கள் பின்னோட்டத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் காணபடுவதால் இதை கேட்டேன்; இது உங்களை பார்த்து மற்ற அமைப்புகளும் (நண்பர்கள்) சுயவிமர்சனம் செய்ய கூடுமல்லவா? அது பல்லி போன்றோருக்கு விடயங்கள் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு; சிலவேளை மறுபடியும் தேசம்மீது ஒரு கைனாட்டு போர் தொடங்கலாம்; காரனம் பலரது வண்டவாளங்கள் வெள்ளி திரையில்;

  Reply
 • மாயா
  மாயா

  கிளிநொச்சி வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட மாதவன் பிரான்சில் இருக்கிறார். யாராவது கேட்டு எழுதலாம்.

  Reply
 • மாயா
  மாயா

  பல்லிக்காக புளொட் தோழர்களது ஒற்றுமை குறித்து ஒரு சம்பவத்தை சொல்கிறேன். நீங்கள் தேடும் தலைமை அல்லது பொறுப்பாளர் பதிவிக்கான உள்குத்து வெளிப்படவும் பலரது முகங்களை புதியவர்கள் உணரவும் வாய்ப்பாக அமையும். இவை கண்ணை மூடிக் கொண்டும் நம்பும் பழக்கத்தை விட்டு 6 அறிவோடு சிந்திக்க தோன்றும்.

  1985ல் புளொட் குழு ஒன்று தென் பகுதி தாக்குதல் ஒன்றுக்கு தயாரானது. அதற்கான ஒத்திகைக்காகவும் நிலைமைகளை நோட்டம் விடவும் வாமர் தலைமையில் சிலர் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பகுதிக்கு அருகே உள்ள உடப்பு எனும் மீனவ பகுதிக்கு சென்றார்கள்.

  வாமரோடு வந்த முக்கியமானவர்கள் PLO ராஜா ( இவர் பரந்தன் ராஜனோடு பின்னர் இணைந்து அதிலிருந்தும் வெளியேறி நோய்வாய்ப்பட்டு சென்னையில் இறந்து போனார்.)மற்றும் டில்லி முருகேசு முக்கியமானவர்கள். இங்கே துடிப்பானவராக உடனடியாக யாருக்கும் தெரிந்த இளைஞன் திருகோணமலையைச் சேர்ந்த பிரிட்டிஸ்.

  உடப்புக்கு சென்ற பின்னர் வெடி மருந்துகளை கொழும்பு பகுதிகளில் பதுக்க இடம் பார்க்கப்பட்டது. முஸ்லீம் ஐக்கிய முன்னணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு போட்டியிட்ட ஒருவரின் உதவி கூட கிடைத்தன. (இவர் திம்பு பேச்சு வார்த்தையில் தமிழ் பேசும் மக்கள் (இஸ்லாமியர்) எனும் ரீதியில் கருத்துகளை முன்வைக்க சென்னை வந்து வடபழனி லொட்ஜில் தங்கி பின்னர் திம்பு குழுவோடு அங்கு பயணித்தவர். இவரும் பின்னர் கைது செய்யப்பட்டு பூஸாவில் 18 மாதங்களுக்கு மேல் இருந்து இந்திய இராணுவம் வந்த போது பொது மன்னிப்பு பெற்று வெளிவந்து இன்னும் வாழ்கிறார்.

  உடப்புக்கு வந்தவர்கள் பூஸா முகாமை உடைத்து அங்கிருந்தவர்களை வெளியேற்றி தென் பகுதியில் ஜேவீபீ போன்ற சிங்கள இடதுசாரிகளோடு இணைந்து பரந்த தாக்குதல் ஒன்றை நடத்துவது என்பது ஆரம்ப எண்ணமாக இருந்தது. பூஸாவை உடைத்து கைதிகளை மீட்பதை விட சிலாபத்துக்கு வருகை தரும் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியை பணயக் கைதியாகக் கடத்தி பூசா கைதிகளை விடுவிக்குமாறு பேரம் பேசலாம் என்ற நிலைக்கு கருத்து பரிமாற்றம் ஒன்று இடம்பெற்றது. இதற்கு இருந்த சிறு குழு போதாது. மேலதிகமாக தமிழகத்திலிருந்து போராளிகளையும் ஆயுதங்களையும் அனுப்ப வாமர் உமாவை தொடர்பு கொண்டார். அதற்கான ஒப்புதல் கிடைத்தது. இருந்தாலும் லலித்தின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட போது கடத்தல் ஆபத்தானதாக இருந்தது. தவிரவும் ஜேஆருக்கும் லலித்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பனிப் போர் லலித்தை மீட்க ஜேஆர் எதையும் செய்யாது லலித் கொல்லப்படுவதை விரும்புவார் எனும் தகவலை தந்தது.

  இது எப்படியானாலும், பின் தளத்து இரண்டாம் தரத்தில் இருந்தவர்கள் உடப்புக்கு ஆயுதங்களை அனுப்ப தடையாக இருந்தனர். அதற்கு காரணம் தாமே அத் தாக்குதலை தலைமை ஏற்க வேண்டும் என்ற ஆசைதான். இதை உணர்ந்த போது புலிகள் கல்பிட்டி கடற்படை தளம் அல்லது புத்தளம் சீமேந்து தொழிற்சாலையை தாக்க திட்டமிடுவதாக ஒரு தகவல் கிடைத்தது.

  அது புளொட்டின் எண்ணத்தை சிதைத்து விடும் என்பதால் , புலிகளின் தாக்குதலுக்கு முன் உடப்பில் இருந்த குழு ஏதாவது ஒரு தாக்குதல் நடத்த வேண்டியிருந்தது. இங்கேதான் புளொட் ஆதரவாளராகவும் புத்தளம் வங்கியொன்றில் பணிபுரிந்த அமரனின் உதவியோடு புத்தளம் வங்கியொன்றை தாக்குவதென்ற நிலைக்கு மாற்றலானது. இது பின்னர் நிக்கவெரட்டிய என தாக்குதல் குறியாக மாறியது. அதற்கு காரணம் புத்தளம் மாவட்ட பணம் மற்றும் அடகு நகைகள் நிக்கவெரட்டியவுக்கு சென்று, அங்கிருந்து குருநாகலுக்கு செல்கிறது எனும் தகவல் கிடைத்தது.

  தாக்குதல் டாகட் நிக்கவெரட்டியாவாக மாறியது. நிக்கவெரட்டிய போலீஸ் நிலையம், வங்கி மற்றும் தொலைத் தொடர்பு கோபுரம் ஆகியவற்றை தாக்குவது என முடிவானது. மிகக் குறைவான ஆயுதங்களே கையில் இருந்தன. ஒரு SMG , ஒரு ரிவால்வர், உடப்பில் இருந்து பெறப்பட்ட 3 துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் கிரினெட்டுகளே கையில் இருந்தது. தூத்துக்குடி வழி ஆயுதம் வரும் என எதிர்பார்த்து இரு தினங்கள் கழிந்தன. யாரும் அனுப்பவில்லை. இந்த இரு நாட்களும் ஜீப்பில் நிக்கவெரட்டியவின் இரவு நேர நிலமையை கண்காணிக்கச் சென்றவர்கள் , ஆயுதம் இல்லாமல் தாக்குதல் தொடுத்து விட்டு திரும்பி வர முடியாது எனும் நிலை உணர்ந்தனர். தமிழகத்தில் இருந்து ஆயுதம் வராதது ஏமாற்றமே.

  உடப்பில் நடமாடிய புளொட்டை பார்த்து முல்லைத்தீவில் கரவலை தொழில் செய்து வந்த இரு உடப்பு புலி ஆதரவாளர்கள் “சோத்துப் பார்சல்கள் போகுது” என்று சொல்ல , மாலையில் பிடித்து அவர்கள் சாப்பிட்ட பகல் சோறு கக்கும் வரை சாப்பாடு போட்டார்கள். பின்னர் அவர்கள் ஒரு அறைக்குள் போட்டுப் பூட்டப்பட்டார்கள்.

  இந்த வெக்கக் கேடு தீர தாக்குதல் நடத்தியே ஆக வேண்டும் எனும் வெறி பலரிடம் இருந்தது. அடுத்த நாள் காலையில் PLO ராஜாவும் இன்னொருவரும் நிக்கவெரட்டிய தாக்குதல் இலக்குகளை பார்வையிட மோட்டார் சைக்கிளில் போனார்கள். அப்படிப் போனவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நிக்கவெரட்டிய போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்திக்க வந்ததாக கூறி அங்கே நோட்டம் விட்டனர்.

  அதன் பின்னர் நிக்கவெரட்டிய வங்கிக்கு சென்று பணம் மாற்றினர். மாற்றிய பணத்தோடு வங்கிக்கு முன்னுள்ள ரெஸ்ட்கவுஸில் பியர் ஒன்று வாங்கிக் குடித்தனர். அங்கு வந்த இரு போலீஸாரும் போனவர்களோடு இணைந்து குடித்த போது , போலீஸ் நிலையம் குறித்த மேலதிக தகவல்கள் கதையோடு கதையாக தெரிய வந்தது. பக்கத்தில் இருந்த கொமினிகேஸன் பகுதியும் கண்காணிக்கப்பட்டது.

  திரும்பி வந்து கலந்துரையாடல் வழி தாக்குதல் திட்டம் தயாரானது. பின் தளமான தமிழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆயுதங்கள் இல்லாமல் தாக்குதல் நடக்காது என்பதே தஞ்சாவூரிலிருந்த சிலரது எண்ணமாக இருந்தது.

  அடுத்தநாள் கொழும்புக்கு இரு குழுக்கள் சென்றன. ஒரு குழு திருமண வீட்டுக்கு என அரிச சாமான்களோடு ஒரு HIACE வாகனத்தை வாடகைக்கு எடுத்தனர். அடுத்த குழு Gas சிலிண்டர்களோடு வங்கியின் பெட்டகங்களை வெட்டுவதற்கான உபகரணங்களை வாகனம் ஒன்றை திருத்துவதற்கு என்று வாடகைக்கு எடுத்தனர்.
  இதில் Gas சிலின்டரோடு வந்தவர் கொஞ்சம் முரண்டு பிடித்ததால் ராஜாவால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். அடுத்தவர்கள் அடங்கிப் போனார்கள். அவர்ளைக் கட்டிப் போட்டு விட்டு இரவு தாக்குதலை நடத்தினார்கள்.

  தென்னிலங்கையில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும். 1985 மே மாதம் 18ம் திகதி அதிகாலை 12.03க்கு போலீஸ் நிலையம் , வங்கி மற்றும் தொலைத் தொடர்பு கோபுரம் தாக்குதல் நடந்தது. புளொட்டுக்கு இழப்புகள் இல்லை. ஒருவருக்கு மட்டும் சிறிய காயம். போலீஸ் நிலைய ஆயுதங்கள் கைகளில் கிடைத்ததும் அதிகம் பலம் கிடைத்தது. வங்கியில் இருந்த பணம் அப்போதைய மதிப்பில் 8 கோடி அளவு. நகைகள் 3 மூட்டைகளில். தாக்குதல் குழு மூன்றாக பிரிந்து திட்டமிட்ட படி வில்பத்து காடுகளை நோக்கியும் , மலையகத்தை நோக்கியும் , உடப்பு நோக்கி வந்தோர் தூத்துக்குடியை நோக்கியும் பயணித்தனர்.

  படகோட்டி பாதை தவறி செலுத்திய போது , இந்திய கடற்படை இடையில் உதவியது. அவர்கள் படகில் இருந்த ஆயுதங்களை பார்த்து வியந்தனர். தூத்துக்குடி மக்கள் செய்தியறிந்து கடற்கரையில் எதிர்பாத்து இருந்தார்கள். புளொட் தோழர்கள் சிலர் வாகனங்களை தயாராக வைத்திருந்தார்கள். படகில் வந்த நால்வரும் ஆயுதமும், பணமும் இரு வாகனங்களில் உரத்தநாடு நோக்கி நகர்ந்தன.

  அங்கு உமாவை தவிர பலரது முகங்களில் மகிழ்ச்சி இருக்கவில்லை. அந்த பிரச்சனையில்தான் வாமர் குடும்பத்தோடு சென்னை வந்து கேகே நகரில் இருந்தார். பின்னர் உயிராபத்தை உணர்ந்து பம்பாய்க்கு மாறி, அங்கு கப்டன் …… எனும் பெயரில் நாயகன் டைப்பில் வாழ்ந்து வந்தார். அவரை போட்டுத் தள்ள இருந்தவர்கள் பின்னர் அவரோடு எடுபிடியாக இருந்தார்கள்.

  இது ஒரு தாக்குதல் சொல்லும் கதை. இங்கே பலதை தவிர்த்திருக்கிறேன். எதிர்காலத்தில் கை சொறிந்தால் எழுதுவேன். இனியாவது நேர்மையாக இருங்கள். தவறானவர்கள் முகங்கள் இப்படி கிழிக்கப்பட வேண்டும். அப்பாவிகள் பகடைகளாக ஆகக் கூடாது. இதுபோல அனைத்து இயக்கங்களிலும் வாசமும் , துர்நாற்றமும் இருந்ததை பலரும் பேசுவதுண்டு. அவை சந்திக்கு வந்தால் அடுத்த சந்ததியாவது தப்பும்.

  இல்லையென்றால் , வெளிநாட்டிலிருந்து தாக்குதல் நடத்த போய் பல இளையோர் செத்து மடிவர். இவை தடுக்கப்பட வேண்டும்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ….பூஸா முகாமை உடைத்து அங்கிருந்தவர்களை வெளியேற்றி தென் பகுதியில் ஜேவீபீ போன்ற சிங்கள இடதுசாரிகளோடு இணைந்து பரந்த தாக்குதல் ஒன்றை நடத்துவது என்பது ஆரம்ப எண்ணமாக இருந்தது…..

  அது பின்னர் வங்கிக்கொள்ளையாக மாறி காஸ் சிலிண்டர்கொண்டு வந்தவனை முரண்டுபிடிச்சதுக்காக கழுத்தை நெரிச்சு கொலை செய்து ‘மக்கள் போராட்டமாக’ வங்கிக்கொள்ளையில் முடிந்தது!

  நன்றி மாயா!

  Reply
 • Kusumbo
  Kusumbo

  மாயா! நீங்கள் கூறும் வாமன் செல்வாயகத்துக்கு கார்ச்சாரதியாக இருந்தவரா? கொல்லன் கலட்டி அம்பனையைச் சேர்ந்தவாரா? அல்லது வேறு ஒருவரா? அம்பனை கொல்லன் கலட்டியை (தெல்லிப்பளை)இவர் ஆரம்பகால புளொட் உறுப்பினர்.
  எனக்கு முன்பே தெரியும் வசந்தன் (சந்ததி) குளப்படி செய்யும் என்று. துரையப்பா வளங்கில் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாத சந்ததி வாயைப்பிளந்துதான் பிடிபட்டு உள்ளே போனவர். வங்கம் தந்தபாடம் புத்தகம் அடிக்கும் போது அவர் அமிரின் வால்.
  புலிகேட்டு கேள்விக்கு: கண்ணன் (இயற்பெயர் வேண்டாம்) ஆரப்பத்தில் இருந்தே உமாவுடன் இருந்தவர். புதிய புலிகளில் அல்ல. புளொட் பிரிந்து சுந்தரம் இறந்தபின் தளபதிப் பொறுப்பை ஏற்றவர். வறிய பலபெண்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளை. அவரின் இயற்பெயரையோ பிறந்த இடங்களையோ மேலதிக விபரங்கள் இங்கு வேண்டாம். கண்ணனின் இறப்பின் பின் அல்லது இயக்க நுளைவின்பின் அவரது குடும்பம் ஆடிப்போய் இருந்தது. கண்டநிண்டபடி வாயைத்திறக்காத ஒரு ஒற்ரை றோட்டு எனலாம். நல்ல விசுவாசி.

  Reply
 • மாயா
  மாயா

  //மாயா! நீங்கள் கூறும் வாமன் செல்வாயகத்துக்கு கார்ச்சாரதியாக இருந்தவரா?//

  Kusumbo, வாமன் தந்தை செல்வாவின் சாரதிதான். கிளிநொச்சி வங்கி கொள்ளையின் போதும் இருந்தவர். மட்டக்களப்பு சிறை உடைப்பின் போதும் இருந்தவர். தற்போது இந்தியாவில் இருக்கிறார். ஊத்தை மூர்த்தியும் இந்தியாவில் இருந்தார். இப்போது தெரியாது.

  கண்ணன் பற்றிய தகவல் சரி. கண்ணன் , வாசுதேவா , சுபாஸ் ஆகியோர் புலிகளோடு பேச்சு வார்த்தைக்கு என்று போய் வரும் வழியில் நிராயுதபாணிகளாக புலிகளால் கொல்லப்பட்டார்கள். அடுத்தவர்களுக்கு செய்தது கடைசியில் புலிகளுக்கும் நடந்தது. இதையெல்லாம் பெரிதுபடுத்தாத புலி வாலுகள் அரசாங்கம் மட்டும் சரணடைந்தவர்களை கொன்று போட்டதாக குதிக்கிறார்கள். இதெல்லாம் நேரம்?

  //அது பின்னர் வங்கிக்கொள்ளையாக மாறி காஸ் சிலிண்டர்கொண்டு வந்தவனை முரண்டுபிடிச்சதுக்காக கழுத்தை நெரிச்சு கொலை செய்து ‘மக்கள் போராட்டமாக’ வங்கிக்கொள்ளையில் முடிந்தது! – சாந்தன்//

  சாந்தன் , இந்த தாக்குதல் வெற்றிகரமான ஒரு தாக்குதல். ஜேஆர் அரசு பெரும் தாக்கமாக உணர்ந்தது. புளொட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று தமிழ் – சிங்கள மொழியிலான கைத் துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு வந்தது.

  பின் தளமான தமிழகத்தில் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியிருந்த புளொட்டுக்கு இது பெரும் ஆறுதலாக இருந்தது.

  அதற்கும் மேல் புத்தளம் , குருநாகல் , சிலாபம் , ஆனமடு ஆகிய போலீஸ் சுற்று வட்டத்துகுள், கலாஒய இராணுவ தளத்துக்கும் , கல்பிட்டி கடற்படைத் தளத்துக்கும் நெருக்கமாக நடத்திய தாக்குதல் தென் இலங்கை இதயத்தில் தாக்கியதற்கு ஒப்பானது. அது பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. பொதுமக்கள் கொல்லப்படவில்லை. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் நிக்கவெரட்டிய பஸ் நிலையத்தில் இருந்த மக்கள் தாக்குதல் பகுதிகளை நோக்கி வந்த போது துரத்துவதற்கு வானத்தை நோக்கியே துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன. இறப்புகள் போலீஸாருக்கு மட்டுமே. இவை சிங்களவர்களோடு இணைந்த தாக்குதலாகவே சிறீலங்கா அரசால் கருதப்பட்டது.

  புலிகளது தாக்குதல்கள் அப்பாவிகளைக் கூட விட்டு வைக்கவில்லை.
  உதாரணத்துக்கு அனுராதபுர தாக்குதலைக் குறிப்பிடலாம்.
  http://www.youtube.com/watch?v=qqdW2auRlo4

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  மாயா,
  நான் சொல்லவந்ததை உங்களை அறியாமல் நீங்களே சொல்லி விட்டீர்கள். அதாவது கழகத்தோழர்களுக்கு காசு தேவை என்பது நன்கு தெரியும். இந்தியாவில் காசில்லாமல் சாப்படில்லாமல் அலைந்தவர்களில் எனது நண்பர்களும் அடக்கம். கடைசியில் நோர்வேயில் இருந்து காசனுப்பி சாப்பாடு வாங்கவேண்டியதாய் போச்சு. அப்ப காசுக்கு போட்ட திட்டம் தான் பாங்க் கொள்ளை. ஆனால் ‘தொண்டர்’ க்கு சொல்லப்பட்டது ஏதோ மக்கள் போராட்டம், பரந்துபட்ட போராட்டம், நேசசக்திகளுடன் இணவு’ என பல கதைகள். ஆனால் தோழர்மாருக்கு தெரியும் இது பாங்க் கொள்ளை எண்டு. ஆனால் தொண்டர்மாருக்கு சொன்னால் என்னடா இது ‘பாசிசம், புலி, மக்கள் விரோதம்’ எண்டவங்கள் ஏன் பாங்க் கொள்ளை எண்டு கேட்டால் என்ன சொல்லுறது! அது தான் பூசா ஜெயில் உடைப்பு கதை!

  சரி அப்பிடித்தான் பாங்கை கொள்ளை அடிக்க வேணும் எண்டால் ஏன் யாழ்பானத்தில அடிக்கலாம் தானே ஏன் தென் இலங்கையில் அடிக்கோணும் எண்ட கேள்வியை நீங்கள் கேட்கப்போறியள் தான். இதைத்தான் நானும் கேக்கப்போக தோழர் சொன்னார் இருக்கிற எல்லா பாங்கும் கொள்ளை அடிச்சாச்சு , பெரிய பாங்குகள் இல்லை , செக்கியூரட்டியும் கூடுதலாப்போச்சு அதால பாதுகாப்பில்லாத தென் இலங்கை எண்டு. புத்தளத்தில இருக்கிற காசு காணாது அதாலதான் நிக்கவரெட்டியா. சிங்களத்தில நோட்டீஸ் அடிச்சது மக்களால் வியந்து பாராட்டப்பட்டதா? இல்லை பொதுமக்களை சுட்டு கொல்லாதது (காஸ் சிலிண்டர்காரன் ஆமிக்காரன் போல கிடக்கு)கழுத்தை ந்ரிச்சு அதுவும் ”முரண்டு” பிடிச்சதுக்கு! இத்தனைக்கும் கையில SMG ரிவால்வர், கிரனேட், இப்படிப்பல!!!!!!

  புத்தளப் புலி ‘சோத்துப்பாசல்’ எண்டு போட்டுதாம். அதில ’வெக்கக்கேடு’ தீர புலியை சுடாமல் (சகோதரக் கொலை செய்யக்கூடாது எண்ட நல்லெண்ணம்) சிங்கள காஸ் சிலிண்டர்காரனை கழுத்தை நெரிச்சு கொண்டவையாம். அப்பப்பா சகோதரக்கொலைக்கு இடம் கொடாத பரந்து பட்ட மக்கள் போரட்டம்! வாழ்க கறைபடியாக் கரங்கள்!!

  அது சரி சென்ரல் காம்ப் அடிச்சதை கொஞ்சம் சொல்லுறியளோ? அந்த மாறி நோட்டீஸ் அடிச்சு உரிமை கோரின கதை!
  நன்றி மாயா

  Reply
 • Kusumbo
  Kusumbo

  நன்றி மாயா! வாமன் எனக்கு நன்கு பழக்கமானவர். உயிருடன் இருக்கிறார் என்பதில் சந்தோசம். உந்தப்பிரபாவுக்கு எத்தனை தரம் சொன்னாங்கள் ஆமியை அடிக்கிறது அல்ல போர். எப்ப கேட்டான் பாவி. இவ்வளவு சனத்தையும் காவுகொடுத்தானே. மேலும் அன்று முகுந்தனும் இயக்கத்தை கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை என்று நான் குறைப்பட்டிருந்தேன். தயவு செய்து நான் புளொட்டைச் சேர்ந்தவன் என்று எண்ணிவிடாதீர்கள். புலி புளொட் எனும் இணைவில் ஒன்றாய் வளர்ந்தவர்கள்.

  சிங்களப்பகுதியில் அதாவது எதிரியின் களப்பிரதேசத்தில் தாக்குதல் செய்வது என்பது பணத்துக்காக மட்டுமல்ல எதிரியை சமநிலையைத் தகர்பதற்கே. காசோ பொருளோ அல்ல முக்கியம் எதிரியின் மனம். சிங்களமக்களின் எழுற்சி ஏன் எதற்கு என்ற கேள்விகள் அவர்கள் பக்கத்தில் இருந்தே கேட்கப்பட்டிருக்கும். இதில் எதை புலி செய்தது. பெருந்தொகை மக்கள் இறந்து கொண்டிருந்தபோதும் தென்னிலங்கையில் எதுவும் தெரியாது. எமக்கான போராட்டம் ஏதுமில்லை. இப்படி இருந்தது தேசியத்தலைவர் ……………………. பிரபாவின் போராட்ட வரலாறு.

  Reply
 • மாயா
  மாயா

  சாந்தன், வங்கிக் கொள்ளை ஏற்கனவே திட்டமிடப்பட்டதல்ல. தவிரவும் தாக்குதலுக்காகன இடங்களை நோட்டம் விட வந்த குழு தாக்குதல் நடத்தியது. இதுதான் உண்மை. வாமன் குழு வந்த போது நான் அங்கு இருந்தேன். உமா தாக்குதல் நடத்தச் சொல்லவில்லை. இடங்களை பார்த்து விட்டு வருமாறு சொல்லியனுப்பியிருந்தார். என்னோடும் பேசும் போது அதையே சொல்லச் சொன்னார். அவர் அனுமதியின்றி அத் தாக்குதல் இடம் பெற்றது. அத் தாக்குதலினால் உடப்பு பகுதியை இழக்க வேண்டி வந்ததோடு, பலரது உயிர் போலீஸாரால் பறிக்கப்பட்டது.

  இந்தியாவில் காசில்லாமல் இருந்திருக்கலாம்.சாப்பாடில்லாமல் இருக்கவில்லை. அதற்கான ஒழுங்குகள் தேவைப்பட்ட போதெல்லாம் ஒருவரால் கிடைத்தது. வேறு முக்கிய இடத்திலிருந்தும் கிடைத்தது. புலத்தில் இருந்து வந்த பணத்தில் ஒரு முகாமிலுள்ளவர்களுக்குக் கூட சாப்பிட போதாது. நோர்வேயிலிருந்து காசு வந்து சாப்பிடுவதா? அப்போது நோர்வேயில் எத்தனை பேர் இருந்தீர்கள். மாதம் எவ்வளவு அனுப்பினீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்?

  தாக்குதல்களின் போது தேவைப்பட்டால் கொலைகள் நடக்கலாம். திட்டமிட்டு செய்வதற்கும், எடுத்தோம் சுட்டோம் என்பதற்கும் வேறுபாடு உண்டு.

  //மேலும் அன்று முகுந்தனும் இயக்கத்தை கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை என்று நான் குறைப்பட்டிருந்தேன்.- Kusumbo //

  இயக்கம் கட்டுப்பாட்டோடு இருந்தது. பெரியவருக்கு விசுவாசமானவர்கள் என்போர் பெரியவர் பெயரில் கட்டுப்பாட்டை குலைத்தனர்.

  உமா சொன்னதை கேட்காமல்தான் நிக்கவரட்டிய தாக்குதல் தன்னிச்சையாக சிலரால் எடுக்கப்பட்டு நடத்தப்பட்டது ஒரு உதாரணம்

  Reply
 • palli
  palli

  சாந்தன் எந்த ஒரு கருத்து சுதந்திரத்திலும் பல்லி தலையிடுவதில்லை; ஆனால் ஏதோ சிலர் தமக்கு தெரிந்ததை சொல்லும் போது அதில் கிளிதட்டு விளையாடுவது அழகல்ல; ஆனால் நிதானமான கேள்விகளை கேட்பதை யாரும் தடுக்க முடியாது;

  ஒகே சில வினாக்கள்; காசு இல்லாமல் நோர்வேயின் உதவியை புளொட் நாடியது; அப்படியாயின் அந்த நெரத்தில் நிதிக்கு பொறுப்பு வீரகோனா(மாதவன்)அல்லது மாசிலாமணியா? நிக்கிரவொட்டியா கொலை கொள்ளை ஒகே; ஆனால் அங்கே உதவிய உமா (பெண்) குடும்பத்தை விட்டது ஏன்?; சரி வாமர் ஏன் பம்பாய் போனார்? இதில் 6ம் நம்பர் அறை சம்பந்தமில்லையா.? இத்தனைக்கும் மேலாக பல்லியின் கேள்விகளுக்கு பதில் வரட்டும்.

  ஜெயபாலனும் புளொட்டின் விசுவாச குடும்பத்தில் இருந்து வந்தவர்; அத்துடன் புளொட்டின் கோட்டை சுழிபுரத்தின் மண்ணுக்கு சொந்தகாரன்; அதனால் அவருக்கும் பல பகிடியள் தெரியும் என்பதை கவனிக்கவும்: திரும்பவும் கேக்கிறேன் பல்லியின் கேள்விக்கு என்ன பதில்; தெரியுமா? தெரியாதா?; அத்துடன் நீங்கள் சொன்ன முஸ்லீம் நண்பர் பெயர் மதன் அவர் முல்லைதீவை சேர்ந்தவர்; அத்துடன் அவர் சிலம்பாட்ட வாத்தி செல்லகிளியின் மாணவர் இது குறிப்பிடதக்கதல்லவா?அத்துடன் நிங்கள் சொன்ன பிட்டிஸ் தவறு என பல்லிக்கு சின்னபொடி சொல்கிறது;(சின்னபொடி உமாவின் நிழல் என வர்னிக்க பட்டவர்)அவரது பெயர் டினேஸ்; இவர் பிற்காலத்தில் சின்ன மெண்டிஸ்சால் திருட்டு குறத்துக்காக அவரது சகோதரத்துடன் கைது செய்யபட்டாராமே; அத்துடன் இந்த சந்ததியின் கொலையில் ராதா என ஒரு பெண்மனி சம்பந்த பட்டதாக சொல்வது உன்மையா? அந்த ராதா யார் ??? பல்லியின் நோக்கம் உங்களை கடுப்பேத்த்துவதல்ல; உங்களை போல் பலர் வந்து உன்மைகளை ஒப்பிக்க வேண்டும் என்பதே; அதுக்காக பல்லி பல பேரை சந்திக்கிறேன் அவர்களிடம் விபரம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்; இதில் சிலர் புளொட்டின் மத்திய குழு உறுப்பினர் என அவர்கள் சொல்லுகிறார்கள்; அது உன்மையா என அறிவதானால்; மாயாவோ அல்லது குசும்புவோ புளொட்டின் மத்திய குழு உறுப்பினர் பட்டியலை வெளியிடுவதே நல்லது;

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி! நான் புலி புளொட் இரண்டும் ஒன்றாக இருந்த காலத்தைச் சேர்ந்துவன். பிரிவினை எனவந்துபோது இருபகுதியையும் இணைக்கும் வேலையில் இறையுடன் ஈடுபட்டிருந்தேன். என்னசைவுகள் முழுக்க தொடர்வுகள் முழுக்க புளொட்பக்கமே இருந்தது. காரணம் வெளியேறியவர்கள் பலர் நட்பு என்பதற்கு மேலாக என்னை நேசித்தவர்கள். முக்கியமாக கண்ணன்; சுந்தரம்; இறை; உமா; புலேந்தி; சேயொன்; இராசலிங்கம்; கனகுலசிங்கம் …பட்டியல் நீளும்.. புலி புளொட் என்று பிரிவுற்றாலும் தெரிந்தவர்கள் ஒன்றாய் இருந்தவர்கள் எல்லோரையும் மறக்க இயலாது. அப்போ புளொட்டே மக்களிடையே ஆதரவைப் பெற்றிருந்தது. புளொட்டின் மத்திய செயற்குழு காலத்துக்குக் காலம் மற்றிக் கொண்டிருந்தது. அது தேவையானதும் கூட. மத்தியகுழு: கூட்டு என்றவிடயத்தை பிரபா பலகாலம் பேணவில்லை. சுருக்கமாகச் சொல்லின் ஒரு தெருச்சண்டித்தனக் குழுமாதிரியே புலி வளர்ந்தது. மத்திய செயற்குழு என்றால் கூட கூடியிருந்து கதைக்கும் அளவுக்கு நேரம் சந்திக்கும் வசதி தொலைத் தொடர்புகள் என்று உடனுக்குடன் தீர்மானிக்கும் வசதி இருக்கவில்லை. உமா மத்திய செயற்குழு என்ற விடயத்தைப் பேணிவந்தாலும் பிற்காலத்தில் அதுவும் தனிநபர் தன்மையை காட்டத் தொடங்கிட்டது. காரணம் அபரீதமாக பெரும் தொகையாக அடையாளம் காணாமல் சேர்க்கப்பட்டதன் விளைவு என்பதே என்கருத்து. கட்டுப்பாடு கைமீறியதால் விசுவாசிகள் சொல்வதே சரியாக் தொடங்கியது. காரணம் அடிப்படைப் பிரச்சனை.

  Reply
 • மாயா
  மாயா

  இப்போது இருப்பவர்கள் கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது எனும் தரப்பில் எழுதினேன். அது சிலருக்கு வினையாகும் எனும் நிலை உணர்வதால், அதை தொடர விருப்பமில்லை. நன்றி வணக்கம்.

  Reply
 • palli
  palli

  ஆக மாயா குசும்பு உங்கள் வீட்டில் நாத்தம் வர போகுது என தெரிந்தவுடன் தடுமாறுவது தெரிகிறது; ஆனால் புலி புலி புண்ணாக்குகள் பற்றி கதை கதையாய் சொல்லுவியள்; உன்மையான கமினிஸ்ட் யாரென பல்லியை கேட்டால் பல்லி உச்செரிக்கும் முதல் இருவர் சந்ததி; டேவிட் ஜயா; ஆக அதேசந்ததி மீது குற்றம் சுமத்திய உமா ஒரு கொடூரமான மனிதன் என்பது கூட; தெரியாமல் அவருக்கு பக்கத்தில் இருவரும் என்ன அவருக்கு ஜல்ராவா போட்டீர்கள்; நீங்கள் சொல்லிய அனைத்து விடயங்களிலும் ஒரே குற்றவாளி உமாதான் என்பது பலர் சொல்லி பல்லி கேட்டுள்ளேன்;

  Reply
 • மாயா
  மாயா

  பல்லி , சாப்பிடும் போது வாசம்தான். அதுவே வெளியாகும் போது நாத்தம்தான். இதை மாற்ற முடியாது? ஏனைய இயக்கங்களுக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு? புலிகள் அளவுக்கு காட்டிக் கொடுப்புகள் மற்றும் துரோகதனங்கள் வேறு இயக்கங்களில் மிக குறைவு. அப்படி யாரும் கொப்பு தாவியிருந்தால் அவர்கள் இருந்த இடத்திலும் சுயநலம் மற்றும் தலைமைக்கு முண்டியடித்த கூட்டமாக இருந்தோரே தாவினார்கள்.

  //ஏதோ சிலர் தமக்கு தெரிந்ததை சொல்லும் போது அதில் கிளிதட்டு விளையாடுவது அழகல்ல; ஆனால் நிதானமான கேள்விகளை கேட்பதை யாரும் தடுக்க முடியாது; – பல்லி//

  என சாந்தனுக்கு சொன்ன நீங்களே , இப்படிக் கடலை போடும் போது எனக்கு குஷியா இருக்கு. நீங்கள் சோ ராமசாமி மாதிரி என்று என் நண்பர் சொன்னார். நாங்கள் ஜால்ரா அடிக்கும் போது, நீங்கள் கை தட்டினீர்களே? //அனைத்து விடயங்களிலும் ஒரே குற்றவாளி உமாதான் என்பது பலர் சொல்லி பல்லி கேட்டுள்ளேன்// என்று இப்போது அடுத்தவன் சொல்வதை கேட்டு எழுதுறவர் நீங்கள்.

  அதை விட பக்கத்தில் இருக்கும் போதே பயமில்லாமல் நேருக்கு நேர் குறைகளை சொன்னவன் நான். எனக்கு உமாவின் பலம் மற்றும் பலவீனம் தெரியும். இயக்கம் என்ற ரீதியில் நான் முதலில் சந்தித்ததும் உமாவைத்தான். கடைசியாக சந்தித்ததும் உமாவைத்தான். அதற்கு பிறகு இயக்கம் மற்றும் அரசியல் பாதையில் செல்ல விரும்பியதேயில்லை. உமா விட்ட தவறுகளை வெறுக்கிறேன். ஆனால் உமா போல் ஒரு தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைவரை காணமுடியாது. இது முக்கியமானவர்களுக்கு தெரியும். பிரபாவைக் கூட சந்தித்துள்ளேன். சிறீ சபாரத்தினத்தைத் தவிர 1980களில் இருந்த அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்துள்ளேன்.

  பாவம் கையில் வைத்திருந்த கடலையை கொறியுங்கள் பல்லி. சொறி பல்லி.

  Reply
 • மகுடி
  மகுடி

  மாயா, பல்லியின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கீட்டீரே? சீ சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாகிட்டுது.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  என்ன மாயா குழப்பமா இருக்கு…

  ‘…இறப்புகள் போலீஸாருக்கு மட்டுமே…..
  ‘..அத் தாக்குதலினால் உடப்பு பகுதியை இழக்க வேண்டி வந்ததோடு, பலரது உயிர் போலீஸாரால் பறிக்கப்பட்டது…..

  ———-
  ‘…. அதற்கான ஒழுங்குகள் தேவைப்பட்ட போதெல்லாம் ஒருவரால் கிடைத்தது. வேறு முக்கிய இடத்திலிருந்தும் கிடைத்தது…….’

  எல்லாரின்ர பெயருகளை வெளியிடுங்கள் …கப்பல் கனக்கை காட்டுங்கோ ..கேள்விக்குட்படுத்துங்கோ…எண்டெல்லாம் கேட்கும் நீங்கள் சொன்ன கதையை பாருங்கோ!

  சாப்பாடில்லாமல் அலைஞ்ச ஆளில ஒருதன் என்ர நண்பன். அவனுக்கும் கூட்டாளியளுக்கும் நோர்வேயில இருந்து கொஞ்ச காசு (குடிக்க கஞ்சிக்காவது) போனது. நோர்வேயில இருந்த கொஞ்ச பேர் அவன்களுக்கு தங்களால ஆன உதவியை செய்தவங்கள். ஆக்களை பயிற்சிக்கெண்டு கூட்டிக்கொண்டு போய் பண்ணின அட்டகாசம் காணாது இதில கேள்வி வேற!
  நீங்கள் சொன்ன ‘ஒருவர்’, ‘முக்கிய’ இடம் எல்லாம் எங்கேயோ அல்லது யாரிடமோ வந்து தான் நிக்க வேணும். ஒருவேளை இந்தியாவில உங்கட ‘ஒருவர்’ கள்ளக்காசு ‘ஒருஇடத்தில்’ வச்சு அடிச்சவரோ?

  ….அப்போது நோர்வேயில் எத்தனை பேர் இருந்தீர்கள். மாதம் எவ்வளவு அனுப்பினீர்கள்? ..”

  ..’அது சிலருக்கு வினையாகும் எனும் நிலை உணர்வதால், அதை தொடர விருப்பமில்லை….
  எங்களை கேளுங்கோ. ஆனால் உங்கட ஆக்களுக்கு வினையாகுமாம். பெரிய நல்ல குணமாம் ஒதுங்கிப்போறொயளாம்!!!

  போகாதையுங்கோ மாயா….இன்னும் எழுதுங்கோ. நான்களும் என்ன நடந்ததெண்டு அறியவேணும் தானே?

  Reply
 • theevan
  theevan

  please maya tells us why uma was killed?what happend?how sri saratnam like?and ptrabaharan?we wouild like to know.its great to know you the former rebel.do you think communisim good for srilanka.mr puthuvai ratnathurai,eros balakumar was inspire socialist tamils and puthuvai was worked with singalese people and went to middle esat,he is an SITBI by proffesinel and so many SITBAMS to kamban kottam.when i was seminerian i met him personely.he was with all srilanka kampan society as well.very good poet.
  i think he is in srilankan army custody but unfortunetly none of the socielist raise a voice for him,why?

  srilankan think tank based on singala buddisam,commuisim or socialisim is useless rubbish in srilanka.i think,

  Reply
 • palli
  palli

  மாயா பல்லி கேட்ட கேள்வி ஏதேனும் தாங்கள் சார்ந்ததா இல்லையா.,,,?? கேட்டு தெரிந்து கொறிக்கும் பல்லிக்கே இத்தனை விடயம் தெரியும்போது; உமாவுக்கு பக்கத்தில் இருந்த உங்களுக்கு அந்த அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் பெயர் தெரியாதா? சுழிபுரம்தான் புளொட்டின் கோட்டை ஆனால் அந்த கோட்டையை உருவாக்கிய சந்ததியை அழித்த பெருமை உமாவைதானே சாரும்; நிக்கெரொவெட்டியா தாக்கபட்டது தவறா? அல்லது அதில் தளபதியாக போனவர் களத்தில் இறங்காது கடலிலேயே கன்னிகளுடன் உல்லாசமாய் இருந்தது தவறா?

  கண்ணால் பார்ப்பது பொய்; காதால் கேப்பதும் பொய்; ஆனால் தீர விசாரிப்பதே மேல்என யாரோ சொன்னதுதான் பல்லிக்கு நினைவு வருகிறது; ஆக ஒரு வீட்டு சாப்பாடு உங்களது; ஆனால் பல்லிக்கு பலரது சாப்பாடு (பிச்சைகாரன் போல்) புலியை எப்படியெல்லாம் வீடு வீடாய் புகுந்து விமர்சனம் செய்தோமோ அதே போல் அனைத்து அமைப்புகளும் அம்பலபடுத வேண்டும்; அதுக்கு மாயா குசும்பு மறுத்தால் என்ன ஒரு செந்திலோ அல்லது பாபுஜியோ வராமலா விடுவார்கள்; பல்லி சோவை போல் என சொல்லியுள்ளீர்கள் அது பெருமைதான்; அவருடைய தகுதிபெற பல்லி பல பிறப்புகள் பிறக்க வேண்டும்; ஆனாலும் எழுத என புறப்பட்டால் அவரது துணிவும் யாரையும் (எந்த பதவியில் இருப்பவர்களையும்) விமர்சிக்கும் மனபக்குவமும் இருப்பது நல்லதுதானே; எது எப்படியாயினும் எழுதுங்கள் திருத்தங்கள் தானாக வரும்; இல்லாவிடினும் பல்லியின் கட்டுரை ஒன்று அனைத்து இயக்க மகாங்களின் களியாட்டம் பேயாட்டம் தனியாட்டம் சகலதும் கலந்து சரியோ தவறோ எழுத முயல்வேன்; தவறு வராமல் இருக்கதான் உங்களுடன் கடிபடுகிறேன்;

  Reply
 • மாயா
  மாயா

  //பல்லியின் கட்டுரை ஒன்று அனைத்து இயக்க மகாங்களின் களியாட்டம் பேயாட்டம் தனியாட்டம் சகலதும் கலந்து சரியோ தவறோ எழுத முயல்வேன்; தவறு வராமல் இருக்கதான் உங்களுடன் கடிபடுகிறேன்;//

  பல்லி, கடிபடுங்கோ. அல்லது கடிங்கோ.பரவாயில்லை. என்னில் இருந்தும் ஏதாவது கறக்க முயற்சியா? நான் இப்போது புளொட்டில் இல்லை. அவர்களோடு மீண்டும் இணையும் நோக்கமும் இல்லை.

  அங்கும் இங்கும் பொறுக்கி நீங்கள் எழுதுவதில் மேலே எழுதிய உள்ள கருத்துகள் போல பல தவறுகள் உங்கள் ஆக்கத்தில் அல்லது கட்டுரையில் நிச்சயம் ஏற்படும்.

  உதாரணத்துக்கு நிக்கவெரட்டியா தாக்குதலின் தளபதி கடலை விட்டு கன்னிகளோடு இருந்தார் என்பது முட்டாள்தனமான பொய். உடப்பு தனித் தமிழர் பகுதி. அது கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய கிராமம். அந்த தளபதியோடு நிக்கவெரட்டிய போலீஸ் நிலையத்துக்குள் முதலில் நுழைந்தவர் சுவிஸில் இப்போதும் இருக்கிறார். உங்கள் கதை படம் எடுக்க நல்லா வரும்.அடுத்து செந்தில் அல்லது பாபுஜி தாக்குதலுக்கு வரவில்லை. செந்திலும் இன்று உயிரோடு இல்லை. அது கூட தெரியவில்லை.

  ஒரு வீட்டு சாப்பாடே முழுமையாக ஜீரணிக்காத நிலையில் பல வீடுகளில் உண்பதால் அது ஒரு நாள் உங்களுக்கு அஜீரணமாகும் என்பதை தாழ்மையோடு தெரிவிக்கிறேன். அது வாந்தி பேதியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை கொலராவானாலும் ஆகலாம்?

  Reply
 • Thaksan
  Thaksan

  சிறீலங்கா இராணுவ வீரனுக்கு என தலைப்பிட்டு முதன்முதலாக பிரபாகரனால் கையெழுத்திடப்பட்டு நோட்டீஸாக வெளியிட்ட துண்டுப்பிரசுரம்> சோசலிச தமிழீழத்தை நோக்கி…. சிறு புத்தகம்> சுந்தரத்தின் படுகொலை துரோகத்தின் முத்திரையா? என்ற தலைப்பில் வந்த துண்டுப்பிரசுரம்> சுந்தரம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட புதியபாதை பத்திரிகை> மக்கள் பாதை மலர்கிறது புளொட்டின் பினாமி சஞ்சிகை> ஆரம்பகால விடுதலைப் புலிகள் பத்திரிகை> Geniside in Srilanka என்ற தலைப்பில் புளொட் டில்லியில் விடுத்த சிறு புத்தகம்> வங்கம் தந்த பாடம்> நிர்மாணம்> Spark > தொடங்கி இயக்கங்களின் ஆரம்ப கால வெளியீடுகள் பிரசுரங்களை தேடிப்படித்த ஞாபகம் இருக்கிறது. ஒப்பீட்டளவில் புளொட்டின் கருத்துக்களும் பிரச்சனையை வெளிக்கொண்டுவந்த விதமும் நியாயமும் அர்த்தமுள்ளவையாகவும் அப்போது எனக்கு தெரிந்தன. பின்நாட்களில் புளொட் புதியபாதையில் இருந்து தடம்புரண்டதையும் அதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் புலிகளுக்கு ஆதரவாக உமா விடுத்திருந்த அறிக்கைகளும் நினைவில் வருகின்றன. அதே நேரம் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரே இயக்க தலைவர் உமா என்பதை அறிந்தபோது உமாவின் அரசியல் தெளிவும் தீர்க்கதரிசனமும் பல அரசியல்(இடதுசாரி) புள்ளிகளால் மெச்சப்பட்டதை கேள்விப்பட்டிருந்தேன். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் புளொட்டின் மாலைதீவு தாக்குதலுக்கு தமிழீழ போராட்டத்திற்கான பின்தளமாக இந்தியாவை கொள்ளமுடியாதென்ற வலுவான நம்பிக்கையும் மாலைதீவை பயன்படுத்த முயற்சித்த தற்துணிவும் விடுதலைப்புலிகளின் இராஜதந்திரங்களுடனும் இறுதிமுடிவுடனும் ஒப்பிடும்போது ஒன்றும் முட்டாள்தனமானதாக தோன்றவில்லை. ஒட்டு மொத்த இலங்கையின் வர்க்கப் புரட்சியினூடாகவே தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டலாம் என்ற புளொட்டின் சிந்தனை இன்றளவும் பொய்க்கவில்லை என்றுதானே நம்பமுடிகிறது?

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி! நீங்கள் என்மேல் வைக்கும் குற்றச்சாட்டு அநியாயமானது. காரணம் நான் ஆனைக்கோட்டை; கிளிநொச்சி வங்கிக்குப்பின் எனக்கு எதுவும் தெரியாது. 1984 க்குப்பிறகு நான் அரசியலில் முக்கிமாக ஆயுதம் தொடவேயில்லை நீங்கள் சந்ததியைப்பற்றிக் போட்ட கணக்கும் தப்பானது. சந்ததி இரட்டைத் தன்மை கொண்டவர். வங்கம் தந்த பாடம் நான் சிறுவனாக இருந்த போது வாசித்தேன். அதை எழுதியது அமிர் என்று நினைக்கிறேன். பின்னோட்டத்தின் சந்ததி என்று எழுதியிருந்தார்கள்.சந்ததி அமிருக்கு சிலவேளை சொந்தக்காரனுமாகலாம். இருவரும் பண்ணாகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியவில்லையா? வட்டுக்கோட்டை இளைஞர் பேரவை கட்டிய இடத்தை புளொட் புகுந்தது. சந்ததி காந்தியம் பண்ணை; வன்னியில்தான் அதிகமாக இருப்பார். தயவுசெய்து தெரியாததை எழுதாதீர்கள்.சந்ததி சொல்லளவில்தான் கமினிஸ்டு செயலளவில் ஒரு மிதவாதியும் வலதுசாரிச்சரிவானவர். இதற்கு அவர் வளப்பும் குடும்பப்பின்னணியும் காரணமாக இருக்காலாம். தம்பி வன்னிக்குள் கடசிகாலத்தின் எம்மக்களை என்ன பாடு படுத்தியதோ அதைவிட மோசமாக புளொட் நடந்து கொண்டது எனலாம். சந்ததியையும் உமாவையும் ஒப்பிடும் போடு போராட்ட போடும் வழி போன்றவற்றில் உமா திறமையானவர் என்பதை யாரும் மறுக்க இயலாது.மாயா சொல்வது போல் எதிர்வு கூறக்ககூடியவர். ஆனால் கட்டுப்பாடு; தலைமை பொறுப்பு; இராணுவ வடிவமைப்பு என்பவற்றுக்கு உமா சிறந்தவர் அல்ல. முகாம் அமைத்தே நம்பிவந்த தலைமைக்குப் பிடிக்காக போராளிகளை புளொட் டம் பண்ணியதாக அறிந்தேன். டம்பிங்கின் தந்தை பிரபாதான். அதற்காக மற்ற இயக்கங்கள் மார்பு தட்ட இயலாது. பல்லிக்கு நான் புளொட்டைச் சேர்ந்தவனல்ல. புலி புளொட்டின் ஆரம்பகாலங்கள் எனதே.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  //ஜெயபாலனும் புளொட்டின் விசுவாச குடும்பத்தில் இருந்து வந்தவர்; அத்துடன் புளொட்டின் கோட்டை சுழிபுரத்தின் மண்ணுக்கு சொந்தகாரன்; அதனால் அவருக்கும் பல பகிடியள் தெரியும் என்பதை கவனிக்கவும்//

  என் பற்றிய பல்லியின் இந்த விபரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது கட்டுரை ஒன்றிற்கான இணைப்பை வழங்குகிறேன். தயவு செய்து நிறுத்துங்கள்!!! : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=999

  புளொட் பற்றிய மிக முக்கியமான ஆவணம் ‘புதியதோர் உலகம்’. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கிய ஆவணமும் கூட. அதற்கான இணைப்பு இதோ: http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&uselang=ta

  புளொட்டின் கோட்டை ‘சுளிபுரம்’ என்பது எவ்வளவு உண்மையோ புளொட்டின் அழிவுக்கும் ‘சுளிபுரம்’ முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

  பல்லி குறிப்பிடுவது போல் நான் சுளிபுர மண்ணின் சொந்தக்காரன் அல்ல. அனுராதபுரம் நான் பிறந்து தவழ்ந்த மண். சுளிபுரத்தைக் காட்டிலும் அனுராதபுர மண்ணில் எனக்குப் பற்று அதிகம்.

  Reply
 • மாயா
  மாயா

  தேவன் , உமா கொல்லப்படும் போது நான் இந்தியாவில் இருந்தேன். நான் அப்போது இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டேன். இயக்கத்தை விட்டு வெளியேறிய பின் இயக்கம் குறித்து மனதைச் செலுத்த நான் விரும்பவில்லை. நான் இயக்கங்கள் மீது வெறுப்போடு இருந்தேன். இன்றும் மக்கள் பாவம் என்று மட்டுமே நினைக்கிறேன். அவர்களது உயிரின் மேல் உட்காந்து பலர் இயக்கம் நடத்தினார்கள் என்பது எனது கருத்து. புலிகள்தான் அதன் உச்சம்.

  தமக்கு ஆதரவானவர்களை விட வேறு எவரையும் எதையும் செய்யாமல் முடக்கிப் போட்டது. அவர்கள் செய்த பெரும் தவறு. சரித்திரம் புலிகளை மன்னிக்காது. அடுத்தவனை துரோகி எனச் சொல்லி அதற்கு தாமே பலியான சோகம் அவர்களுடையது.

  புதுவை முன்னர் சொன்னதுக்கு முரணாக பின்னர் சொன்னவை உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. இவர்கள் குறித்து நான் அலட்டிக் கொண்டதே இல்லை. அவருக்காக சோசலிஸ்ட்டுகள் எப்படி குரல் கொடுப்பார்கள்? அவர் யாரோடு இருந்தார்? சோசலிஸ்ட்டுகள் பாசிசத்தோடு உறவு கொள்ள மாட்டார்களே?

  இலங்கையில் சோசலிஸம் எடுபடாது. உலகத்திலேயே அஸ்த்தமனம் ஆகி வருகிறதே? N.M.பெரேராவின் சமசாமஜக் கட்சியும் , பீட்டர் கெனமனின் கொமியுனிஸ்ட் கட்சியும் சிங்கள மக்களிடம் கூட தலை தூக்கவில்லை. சிறீமாவோடு இணைந்த போது ஏதோ வந்ததோடு சரி.

  தற்போதைய மகிந்தவின் மாற்றத்தை பொறுத்தே இடம் – வலம் தீர்மாணிக்கப்படும். சிறீலங்கா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். புலத்தில் இருந்து எம்மால் கோஸம் போட அல்லது இணையத்தில் எழுத முடியும். இவை எல்லாம் விரும்பமில்லா காதலிக்கு அனுப்பும் லவ் லெட்டர் மாதிரி. மகிந்த சிந்தனையாக எதை வைக்கிறாரோ அதுதான் இன்னும் 15 – 20 வருடத்துக்கு நடக்கும். இனி மகிந்த – பசில் – கோட்டபய – நாமல் என ராஜபக்ஸ ராஜ்யம்தான்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  மாயா,
  உமாவை ஏன் கொன்றார்கள்? யார் கொன்றார்கள்? எங்கள் இயக்க தலைவனை கொன்றவர் யார் , ஏன் என அறிய ஆவலாக உள்ளேன். சொல்லுவீர்களா?

  மற்றவர்களை துரோகிகள், பாசிச வாதிகள், மக்கள் விரோதிகள், தனிமனித வழிபாட்டாலர்கள் என சொன்னது எமது புளொட் என்றால் மிகையாகாது. ஆனால் நீங்கள் என்னவோ வசதியாக புலியில் மீது பழிபோடுகிறீர்கள்!

  இதற்கு நல்ல உதாரணம் ‘வங்கம் தந்த பாடம்’ அடிச்சு மக்களுக்கு ‘விழிப்புணர்வு ஏற்றி’ கடைசியாக இந்திய சதியில் வீழ்ந்தது எமது இயக்கமான புளொட் அல்லவா? சகோதரக்கொலை என பாட்டுப்பாடி சுழிபுரம் கொலைக்கலம் கண்டது நாமல்லவா? இப்படிப் பல சொல்லிக்கொண்டே போகலாம் மாயா, என்னைப்பொறுத்தவரை எமது இயக்கமான புளொட்டுக்கு புலிகள் 1000% மேல் எனச் சொல்வேன்! இதை இறுமாப்புடன் சொல்லவில்லை வேதனையுடனே சொல்கிறேன்.

  Reply
 • mano
  mano

  மாயா நீங்கள் சொல்வது சரி. இனி ராஜபக்ச ராஜ்யம்தான். 21ஆம் நூற்றாண்டின் அரசர்களாக இருப்பதில் சிங்களத் தலைவர்களுக்கு மாத்திரமல்ல தமிழ்த் தலைவர்களுக்கும் ஆசைதான். இந்த அரசர்களின் ஆட்சியில் மக்கள் ஏமாறுகிறோம் என்று தெரிந்தாலும் எதிர்ப்பு காட்ட முடியாதளவு அவர்கள் விசுவாசமான படையைக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

  கடந்த கால அமைப்புகளைப் பற்றிய பின்னூட்டங்கள்> நல்ல முயற்சி. ஆனால் இதிலிருந்து ஒன்று தோன்றுகிறது இன்றும் தமிழர் அரசியலில் தாக்கம் செலுத்துபவர்கள்> அதே புலிக் குணாம்சத்திலிருந்து வந்தவர்கள் தானோ? அதாவது புலியும்> புளொட்டும் ஒரே அடிப்படை கொண்டவர்கள்தான் என்பது எனது கருத்து. உமா தீர்க்கதரிசனமான கருத்தைக் கொண்டிருந்தார் என்பதில் மறுப்பில்லை. இந்தியத் தலையீட்டை எதிர்த்து சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்பை வலுப்படுத்துவதே விடுதலைக்கு வழி என்பது மிகச் சரியானது. ஜேவிபி போன்றவற்றைக் கூட எமக்கு ஆதரவான சக்தியாக வென்றெடுக்கும் வாய்ப்பு இருந்தபோதும் இங்குள்ள தமிழர் தரப்புகள் தம்மிடையே இடதுசாரி சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமையே சிங்கள இடதுசாரிகளிடமிருந்து தமிழர் பிரச்சினை தொடர்பான காத்திரமான பங்களிப்பைப் பெறமுடியாமலிருப்பது. அதே நேரம் கடந்த காலங்களில் இடதுசாரிகளான தமிழ் தரப்புகள் புலி சார்பு நிலையெடுத்து தம்மை தமிழ் தேசியவாதிகளாக இனங்காட்டிக்கொண்டனர்.
  அதுநிற்க. இந்த விவாதம் இப்போது அவசியமானதல்ல. இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றிய ஆராய்வும் தெளிவும் தொடரட்டும்.
  யோகியின் தம்பி தான் பொன்னம்மான் என்பது சரி. பொன்னம்மான் இருந்த காலத்தில் யோகிக்கு எந்தவித அரசியல் ஈடுபாடும் இருந்ததில்லை. அவருடைய ஆங்கில அறிவுக்காக புலிகளின் பேச்சாளராக இணைக்கப்பட்டவர். அவருடைய தாயார் கடவுள் பக்தி கொண்டவர். குட்டிமணி மீது பாசம் வைத்திருந்தார். ராதா என்ற பெண் புளொட்டின் இராணுவப் பொறுப்பாளர் கண்ணனின் மனைவியாக இருக்கலாம். அவரைப் பற்றி வ.ஜ.ச.ஜெயபாலன் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார்.

  Reply
 • kumarathasan
  kumarathasan

  we are back to basics again,i think uma maheswaran aspirations failed his lack of leadership according to your comments.puthuvai step out the way so socielist cant help him,what about poets world like vairamuthu etc.eros balakumar he sacrificed his whole life for tamil people,there many eros in uk there no voice for him yet.

  Reply
 • palli
  palli

  ஜெயபாலன் பல்லிதானே சொன்னேன் இப்படியான பளய வாதங்களை திரும்ப போடும்படி; ஆனாலும் தாங்கள் போடுமுன்பே எப்படியோ இவைகளை எடுத்து படித்து விட்டேன்; பல்லி தங்களை அந்த மண்ணுக்கு சொந்தகாரன் எனதான் சொல்லியுள்ளேன் அதை கவனியுங்கள்; உங்களுக்கும் புளொட்டின் விபரங்கள் சற்றேனும் தெரியும் என்பதால் அதை இன்று சுட்டிகாட்டினேன்; காரணம் பின்னோட்டம் விடுபவர்கள் பீலா விடகூடாது அல்லவா; வளர்த்த சுழிபுரம்தான் அழித்தது என்பதை வெளிகொணரதான் மாயாவுடன் மல்லுகட்டினேன் (கவனிக்கவும் எனது பின்னோட்டங்களை)இருப்பினும் மாயா பின்வாங்கி விட்டார்; அதுக்காகதான் மத்திய குழு உறுப்பினர் பட்டியல் கேட்டென்; இதில் உங்களை வம்புக்கு இழுப்பது எனது நோக்கமல்ல ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் சில சம்பவங்கள் தெரியும் என்பதை சொன்னேன் ;ஆனாலும் சுழிபுரத்தை சொன்னவுடன் ஜெயபாலன் பயபடும் அளவுக்கு அது என்ன வன்னியா;உன்மைதான் அந்த காலத்தில்(1982.1983°)அதுதானே வன்னி;

  ஜெயபாலன் புதியதோர் உலகம் கூட ஒரு பக்க நியாயம் மட்டுமே தாங்கி வந்தது; இதை எழுதியவர்கள் யாராக இருக்கட்டும் இதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை; ஈழ தேசத்தில் அரக்கர்கள் இருந்தது உன்மையெனில் அது தீப்பொறியினரே; இவர்களை போல் கொடூரம் கொண்ட மனிதர்கள் எங்கும் இருக்க முடியாது; இந்த புதியதோர் உலகத்தில் சந்ததியின் பங்கோ அல்லது டேவிட் ஜயாவின் பங்கோ மிக சிறியது; தம்மை நியாயபடுத்த சிலர் மேற்கொண்ட நடவெடிக்கைதான் இது; இதில் சில பட்டபடிப்பு படித்த மாணவர்களும் அடங்கும்; ஒருவர் என்னை சென்னையில் சந்தித்தபோது அவருடன் ஒரு 36 ,மணித்தியால பயணம் செய்யவேண்டி வந்தது; அப்போது எனது கையில் புதியதோர் உலகம் என்னும் புத்தகம்; அதை பார்த்த அவர் இதை யார் எழுதியது தெரியுமா என கேட்டார்; நான் தெரியாது ஆனால் நல்ல புத்தகமென சிலர் சொன்னார்கள் அதனால் அவர்களிடம் வேண்டி வாசிக்கிறேன் என சொன்னேன்; அதுக்கு அவர் இந்த புத்தக சரித்திரம் சொன்னார்; அவர் சொல்லி முடியும்போது எனது கண்கள் கண்ணீரில் நிறைந்தன; புளொட்டுக்கு மட்டும்தான் மறுபக்கமல்ல; புதியதோர் உலாகத்துக்கும் உண்டு;அது பற்றி விவாதம் வரும்போது கண்டிப்பாக எனக்கு தெரிந்ததை எழுதுவேன்;

  Reply
 • chandran,raja
  chandran,raja

  ஊமைவிழிகளில் திரைப்படத்தில் வந்த “தோல்வி இதுவென நினைத்தால்” பிரசித்தமானது. எல்லா இயக்கத்தவரும் தத்துவ-விரக்திப்பாடலாகவே எடுத்துக் கொள்ளுகிறார்கள். 1986 ஆண்டு மேமாதத்திற்குப் பிறகு டெலோவும் அதன்பிறகு பிளட்டும் தமது இந்திய பயிற்சி முகாம்களில் பாடி தமது விரக்தியை போக்கியதாக இங்கு வந்திருந்த போராளிகள் சொன்னார்கள்.

  இந்த ஆண்டில் ஜிரிவிலும் தீபம் தொலைக்காட்சியிலும் இதே பாடலைப் பாடவிட்டு புலிகள் தமது விரக்தியைப் போக்கிக் கொண்டார்கள். இது எமக்கு எதை புரியவைக்கிறது? போராட்ட காலங்களில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஆயிரம் தவறுகள் நடந்திருக்கலாம். புலிகளை போல் மக்களை பரிதவிக்க விட்டவர்கள் வேறு எந்த இயக்கமும் இல்லை. ஒளித்திருந்து தேன்கூட்டுக்கு கல்லெறிந்து விட்டு ஓடித்தப்பினார்கள். குளவி தன்ஆசை தீருமட்டும் குத்தி கொடுமைப்படுத்தியது. இதற்கு புலம்பெயர் நாட்டில்லிருந்து விசில்லடியும் அமோக வரவேற்பையும் பெற்றது. ஈழமக்கள் சபிக்கப்பட்ட மக்களாகவே கடந்த மேமாதம் வரை வாழ்ந்து தீர்த்தார்கள்.

  இனி என்ன தேடுகிறீர்கள்? கிளறக்கிளற குப்பைதான் வருமேயேழிய வேறு ஒன்றையும் நீங்கள் கண்டு கொள்ளப்போவதில்லை. வரலாற்றை ஆய்வு செய்கிறோம் என்று சொல்லி இனியொரு அழிவுக்கு வழிகோலாதீர்கள். நீங்கள் ஆய்வு செய்பவர்களாக இருந்தால் மக்கள்பட்ட துன்பங்களை ஆய்வு செய்திருப்பீர்கள். அறிவுக்கு உட்படாத வெறிபிடித்த இளைஞர்களின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்திருபீர்கள். ஈழமக்களின் வாழ்வை அவர்கள் போக்கிற்கே விட்டுவிடுங்கள். அவர்ககளுக்கு உள்ள தீர்வே யுத்தத்தில் இருந்து மீள்வதும் அமைதியான வாழ்வை தொடருவதுமே! அதை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்.புலிகள் பிரச்சாரம் செய்வது போலோ இங்கு சிலர் பின்னோட்டம் விடுவதுபோல்லோ அங்கு ஒன்றமே இல்லை.

  இதையும் மீறி அவர்களுக்கு துன்பம் வந்தால் போராடவேண்டுமென்று தேவை வந்தால் அவர்கள் போராடுவார்கள் என்பதே எனது தாழ்வான அபிப்பிராயம். ஈழமக்களுக்கு புத்திபுகட்டுமளவிற்கு புலத்தில்புத்தி அதாவது அரசியல்அறிவு இன்னும் விருத்தியடையவில்லை என்பதே இந்த சின்னவன்னுடைய மற்றுமெரு அபிப்பிராயம். சிறுதுகாலம் செல்ல நிச்சயம் வரலாம்.

  Reply
 • palli
  palli

  மாயா எனது வாதம் புளொட் மட்டுமல்ல அனைத்து இயக்கமும்தான்; ஆனால் இன்று தாங்கள் உங்களை புளொட் என தையிரியமாக சொன்னபடியால் உங்களுடன் விவாதிதேன்;
  சில காலத்துக்கு முன்பு டெலோ பற்றி சந்தானதுடன் விவாதித்தேன்; மற்றய அமைப்புகளும் தேசத்துக்கு வரும்போது ஓடி ஒழிய மாட்டேன்; இருப்பினும் சரியோ தவறோ நான் புளொட் என தாங்கள் சொன்னதை பாராட்டிதான் ஆகவேண்டும்; சில புலிகள் கூட தாம் புலி இல்லை சும்மா ஆதரவுதான் என சொல்லும் காலம் இது;

  //பக்கத்தில் இருக்கும் போதே பயமில்லாமல் நேருக்கு நேர் குறைகளை சொன்னவன் நான்//
  என்ன என்ன குறைகளை சுட்டி காட்டினீர்கள்?
  அதுக்கு உமாவின் பதிதான் என்ன?

  //அந்த தளபதியோடு நிக்கவெரட்டிய போலீஸ் நிலையத்துக்குள் முதலில் நுழைந்தவர் சுவிஸில் இப்போதும் இருக்கிறார்//
  இருகட்டுமே அதுக்காக உன்மை உறங்கி விடுமா?அந்த தளபதியின் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று சில காலம் சென்னையில் கெசற்மூலம் அலைந்தது தாங்களோ சுவிஸ் நண்பரோ கேள்விபடாதது ஏன். அந்த சுவிஸ் நண்பரிடம் கேழுங்கள் ஆறாம் அறை என எதோ இருக்காமே; அதுதான் அந்த கெசற்றின் தலையங்கம்; பல்லி எது சொன்னாலும் பொய் போல்தான் இருக்கும் விசாரித்து பாருங்கள்; அப்போது பல்லியின் பலன் புரியும்; குறிப்பாக அந்த நிக்கெரவெட்டியா தாக்குதலில் உமா என்ற பெண்ணின் வாக்குமூலமும்; வைரையா என்பவரின் வாக்குமூலமூமே அன்றய சாரதி இன்றய வேலுநாயக்கராக இருக்க வேண்டியவர் எல்லாத்தையும் இழந்து (குடும்பத்தையும்) பட்டமரமாய் பம்பாயில் பாய்விரித்து படுக்கிறாராம்; (குடும்பம் கனடாவில் என்பதும் நாம் அறிவோம்)

  //ஒரு வீட்டு சாப்பாடே முழுமையாக ஜீரணிக்காத நிலையில் பல வீடுகளில் உண்பதால் அது ஒரு நாள் உங்களுக்கு அஜீரணமாகும் என்பதை தாழ்மையோடு தெரிவிக்கிறேன். அது வாந்தி பேதியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை கொலராவானாலும் ஆகலாம்?//
  வாஸ்த்தவம்தான் ஆனால் பாருங்கோ இந்த பிச்சை எடுத்து(பலர் வீட்டு சாப்பாடு) சாப்பிடும் மனிதர்களுக்கு வருத்தம் வருகிறதோ இல்லையோ அவர்கள் ஆஸ்பத்திரிக்கு போவது குறைவுதானே; அனால் ஒரு வீட்டு சாப்பாடு சாப்பிடும் பலர் கிழமையில் ஜந்து நாட்கள் மருந்துதான் சாப்பிடுகிறார்கள் என்பதும் மாயா மறுக்க முடியாத உன்மைதானே(பல்லி ஆஸ்பத்திரி என சொன்னது விமர்சனத்தை புரிந்து கொண்டால் சரி) சொல்ல நான் ரெடி; மறுக்க நீங்க ரெடியா??

  Reply
 • மாயா
  மாயா

  மனோ, கண்ணன் திருமணம் செய்திருக்கவில்லை. அந்த எண்ணமும் அவருக்கு இருக்கவில்லை. ராதா கண்ணனின் மனைவியல்ல.

  கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் ராதா குறித்து கவிதை எழுதியிருக்கலாம். ஆனால் இவரும் சுயநலம் கருதி பேசுபவர். இவரையும் புளொட் ஒதுக்கியது. இவர் அடையாறில் தனியாகவே இருந்தார். காரணம் இவர் கவிஞர்கள் போல் நேரத்துக்கு ஏற்றாற் போல் மாறிப் பேசுவதால். இடதுசாரி போல் வாழலாம். ஆனால் இடதுசாரியும் இல்லை. வலதுசாரியும் இல்லை. ஏதோ ஆரம்ப கால உறுப்பினர்கள் என்பதைத் தவிர அடுத்த நகர்வு குறித்துக் கூட சிந்திக்காதவர்கள். பழகும் போது இனிமையாக இருப்பார். இவரது கருத்துக்கு மறுகருத்து சொன்னால் சினக்கத் தொடங்கிவிடுவார். எனவே இவரோடும் தொடர்ந்து கருத்தியலோடு பயணிக்க முடியாது.

  kumarathasan, புலி ஆதரவாளர்கள் தலைவரை மட்டுமே நம்பியவர்கள். அவருக்கு பின்னால் இருப்போர் அதற்கு பின் செல்லாக் காசு. புதுவையை மீட்க வைரமுத்துவால் என்ன செய்ய முடியும்? அவராலும் கவிதை மட்டுமே எழுத முடியும்? புதுவை, புலத்தில் இருந்த மக்களை முன்னர் துரோகிகள் என்ற விதத்தில் எழுதியவர். அவர் புலத்துக்கு வந்த பின்னரே அவரது கருத்து மாறியது. இவரும் ஒரு ஜால்ராதானே தவிர தமது உண்மையான பார்வையை இடதுசாரியாகக் கூட பிரபாகரனுக்கு காட்டியிருக்க மாட்டார். சொகுசான வாழ்வுக்குள் சுகம் கண்டார் என்றே நினைக்கிறேன்?

  பாலகுமாரோ, புதுவையோ அல்லது ஏனையவர்களோ பிரபாகரனோடு இருந்து மக்களைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? என்று வினவினால் விடை பூஜ்ஜியமாகவே இருக்கிறது. பாலசிங்கம் கையெழுத்து வைத்த ஒப்பந்தத்தை கருணா கொண்டு போன போது ஏனையோரிடம் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருந்ததாகவும், ஆனால் தனிநாடுதான் சரியான தீர்வு என பாலகுமார் பிரபாவுக்கு பக்க பலமாக நின்று ஜால்ரா அடித்தார் என்று அங்கே கருத்தாடிய புலி நண்பர் ஒருவர் கிளிநொச்சி வீழ்ந்த போது எல்லாம் போகப் போகுது என்று என்னிடம் சொன்னார். சொன்னவரும் இன்று இல்லை.

  கடைசியில், உணர்ச்சி வசப்பட்டு, தலை வணங்கா மன்னர்கள் வன்னியையே சுடுகாடாக்கினார்கள். கிளிநொச்சியில் இருந்த தண்ணீர் டாங்கைக் கூட வீழ்த்தி விட்டே சென்றார்கள். குளம் குட்டைகளைக் கூட விடவில்லை? அவர்கள் இல்லை என்றால் அனைத்தும் இல்லாமல் போகட்டும் என்றே நினைத்து செயல்பட்டுள்ளார்கள். இறுதியில் தமது உயிர்களை காக்க மட்டும் மக்களை விடுவித்தார்களே தவிர, மக்களை விடுவிக்க தம் உயிர்களை இழக்கவில்லை என்பதை யாரும் உணரலாம். மக்களுக்காக போராட்டமா? தலைமைக்காக போராட்டமா? என்றால், தலைமைக்காகத்தான் புலிகள் போராடினார்கள் என்ற கருத்தே தொக்கி நிற்கிறது? இன்று புலத்திலும் அதுவே நிதர்சனமாகியுள்ளது. பிரபாகரனின் புலித் தலைமை மக்களை எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாக்கினார்களோ, அது புலத்திலும் தொடர்வதையே புலத்து புலிகள் விரும்புகிறார்கள். இங்கே பொதுநலம் என்பது செத்து சுயநலம் எனக் கொடிகட்டிப் பறக்கிறது. அவர்கள் உலகம் புரியாது செய்தார்கள் என்றால், இவர்கள் உலகம் புரிந்து செய்கிறார்கள். அவர்களை மன்னித்தாலும், இவர்களை மன்னிக்க முடியாது. அவர்களை விட இவர்கள் தமிழினத்தை குழி தோண்டி அழிப்பவர்களாவே தெரிகிறது. இவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதை பலர் செய்ய வேண்டும். தவறிழைத்தவர்களை கடவுளே தண்டித்து விட்டார் என ஒரு நண்பர் சொன்னார். இருக்கலாம். இவர்களுக்கு?

  சாந்தன், உங்களைப் போன்றவர்களோடும், பல்லி போன்றவர்களோடும் நான் தொடர்ந்து கருத்து பகிர்வதில்லை. பூ அழகாக இருப்பதால் முள்ளில் கை வைக்கக் கூடாது. காரணம், நான் கடந்த கால தவறுகளை எழுதத் தொடங்கியது இருப்பவர்கள் தவறிழைக்கக் கூடாது எனும் நோக்கில்தானே தவிர, வேறு நோக்கமில்லை. உங்களைப் போன்றோரது கருத்துகள் அதை தொடர வேண்டாம் எனும் மனநிலையை உருவாக்கியது. நீங்கள் புளொட்டாக இருந்தாலும் புலியாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான். புலிகள் அளவுக்கு எந்த இயக்கமும் மக்களை கொலை செய்யவும் இல்லை. மக்களைக் கொள்ளை அடிக்கவுமில்லை. அடுத்தவர்களை இயங்காமல் தடுக்கவும் இல்லை. புலிகள் புலத்தில் கூட யாரையும் பேசவோ, தன் வீட்டு பிறந்தநாளைக் கூட கொண்டாடவோ கூட விடவில்லை. அந்தளவு அராஜகமாக நடந்து கொண்டார்கள்.

  சில மாதங்களுக்கு முன் நான் வாழும் நாட்டில் ஒருவரது கடைக்கு போகும் போது, அவர் துரோகி அங்கே போய் சாமான் வாங்காதீர்கள் என்று என்னையே தடுத்தார்கள். நான் திட்டிவிட்டு கடைக்குச் சென்றேன். கடைக்காரர் வேதனையோடு இருந்தார்.

  “பாருங்கோ தம்பி, காசு கொடுக்கயில்லையெண்டு கடைக்கு வாறவங்களை தடுத்து திருப்பியனுப்புறாங்கள். என்ட கடையே நட்டத்தில் ஓடுது. பில் கட்டேலாமல் கடன் வாங்கி கடையை கொண்டு போறன். முன்ன காசு கொடுத்த நான் , இப்ப ஏலாது, பிறகு பாப்பம் எண்டன். அதுக்கு இப்பிடி நடக்குது” என்றார். இதுதான் புலிக் குணம்.

  புலிகளது கடைசி நேர புலத்து போராட்டங்களுக்கு போன, ஏனைய இயக்கத்தவரைப் பார்த்துக் கூட, புலிகள் நகைத்தே கருத்து சொன்னார்கள். புலிகள் அழிந்தால், இவர்களுக்கு வாழ்வில்லை என்று தெரிஞ்சு வாறாங்கள் என்றே கதைத்தார்கள். இவர்களுக்கும் அங்கே உறவுகள் இருந்ததை நினைக்கவேயில்லை? எனவே புலிகளின் அழிவுதான் தமிழரின் உண்மையான சுதந்திரம். இதுவே உண்மை. புலத்தில் இந்த கடுதாசிப் புலிகளை வாழ வைத்தால் இவர்களால் புலம் பெயர் தமிழர் சமுதாயம் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை பெற்று வன்னி மக்களின் துயரத்துக்கு நிகரான துயரத்தை எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும்.

  இவர்களது எண்ணங்கள் நிறைவேறாத போது , புலம் பெயர் இளையோரை வைத்து புலத்திலோ அல்லது இலங்கை அல்லது இந்தியா போன்ற நாடுகளிலோ பயங்கரவாத தாக்குதல்களை அல்லது தற்கொலைத் தாக்குதல்களை நிச்சயம் செய்வார்கள். அது கேபீ கைதாகும் போது கூட நடக்கலாம்?

  கனடா தேடகத்துக்குள் சுவிஸ் முரளி போன்றோரது இணைவு, கனடாவில் புலிகளது பயங்கரவாத செயல்பாட்டு நிலையொன்றை விரைவில் ஏற்படுத்தும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.(சுவிஸ் முரளியும் கே.பி.யும் மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) முரளிதான், அமைதியாக இருந்த சுவிஸ் நாட்டுக்குள் தமிழர் சண்டைக் குழுக்கள் உருவாகக் காரணமானவர். இதனால் தனியாக சிவனே என்றிருந்த அனைத்து இயக்க இளைஞர்களும் இணைந்து முரளியின் காரியாலயத்திலிருந்து முரளியை ஓட ஓட அடித்த விரட்டியதும், நாலஞ்சு பேர் இல்லாமல் முரளி தனியாக வெளியே செல்லாமல் இருந்ததும் போன்றவை சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு. சுவிஸ் போலீஸாரால் கைதாகும் வரை இந்த சண்டைகள் சுவிஸில் தொடர்ந்தது. பின்னரே ஓய்ந்தது. பின்னர் உள்ளதை சுருட்டிக் கொண்டு முரளி ஓடினார்.

  தவிர சிங்களப் புகுதிகளில் இருந்த புலிகள் மற்றும் கரும்புலிகள் புலம் பெயர் நாடுகளுக்கும் , மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வெளியேறியுள்ளனர். சமாதான காலத்தில் புலத்தில் பிறந்தவர்கள் கூட வன்னி சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்களால் நிச்சயம் புலத்தில் சில அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நடக்கும் சாத்தியமுண்டு. வெளிநாடுகளும் புலிகளின் அழிவுக்கு துணை போனது என்பதான கருத்து புலிகளை கடுமையாக பாதித்துள்ளது. இவற்றுக்கும் பழி வாங்கும் படலமாக ஏதாவது நடக்கலாம். அப்போதுதான் புலத்து தமிழர்கள், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் எப்படிப் பார்க்கப்பட்டதோ அதே நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவை நடவாது கண்காணிப்பதும் தடுப்பதும் பெற்றோர்களால்தான் முடியும்? இல்லாவிட்டால் கடவுள்தான் துணை.

  இஸ்லாமியருக்கு பல நாடுகள் இருக்கின்றன. தமிழருக்கு ஒரு நாடு கூட இல்லாத நிலையில் இப்படி அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், புலம் பெயர் தமிழர் நிலை, மிக மோசமாக இருக்கும். தமிழக புலி ஆதரவாளர்கள் ” இரத்த ஆறு ஓடும். இன்னொரு காஷ்மீராகும் ” என்பது போன்ற கோஸங்களைத்தான் வைப்பார்களே தவிர, ஈழத் தமிழரது உண்மையான பிரச்சனையையோ அல்லது தேவையையோ அவர்களுக்குத் தெரியாது. ஈழத் தமிழன் பேரில் அவர்கள் அரசியல் நடத்தும் அல்லது பண நோக்கம் கருதி செயல்படும் நிலைதான் அங்கே உள்ளது. அங்கேயும் இன்னொரு அரசியல் கொலை நடக்குமேயானால், நினைக்கவே தேவையில்லை? புலத்திலும்தான்?

  புலத்தில் நடந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் , தூதுவராலயங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பெளத்த விகாரைகள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை புலிகளோ அல்லது புலத்து புலிகளோ அல்லது தமிழரோ கண்டிக்கவில்லை. அதை ஏற்றுள்ளார்கள் என்பதை உணரலாம். இவற்றை ஊக்குவிப்பதற்கே தமிழ் ஊடகங்கள் கூட பரபரப்பு செய்திகளை கொடுத்தன. இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. புலிகளோ அல்லது புலி ஆதரவாளர்களோ அழிவுகளை கண்டு ஆனந்தப்படுபவர்களே தவிர ஆக்கமான செயல்கள் கண்டு ஆனந்தப்படுவோரல்ல. இது மனநோயாக அவர்களிடம் இருக்கிறது.

  இவை குறித்து பேசுங்கள். இவை உயிரோடு உள்ளவர்களை வாழ வைக்கும். சரித்திரத்தை விட்டு நாளை சரித்திரம் படைப்பதுதான் இப்போதைய தேவை.

  Reply
 • rohan
  rohan

  //கனடா தேடகத்துக்குள் சுவிஸ் முரளி போன்றோரது இணைவு, கனடாவில் புலிகளது பயங்கரவாத செயல்பாட்டு நிலையொன்றை விரைவில் ஏற்படுத்தும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.(சுவிஸ் முரளியும் கே.பி.யும் மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) //

  முரளி மயிலிட்டி அல்ல என்பது எனது கருத்து.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  /ராதா என்ற பெண் புளொட்டின் இராணுவப் பொறுப்பாளர் கண்ணனின் மனைவியாக இருக்கலாம். அவரைப் பற்றி வ.ஜ.ச.ஜெயபாலன் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார்./ இது தவறான கருத்து என்று கருதுகிறேன். எனக்குத் தெரிந்தவரை கண்ணன் கல்யாணம் கட்டவில்லை. வ.ஐ.ச பெண்கள் என்றார் கவிதை பாடுவது மட்டுமல்ல கடைவாயால் ஊத்தவும் செய்வார் .

  மாயா கூறுவதுகோல் அரசியலில் எதிர்வு கூறுவது கடினம். 4வருடங்களுக்கு முன் யார் யோசித்திருந்தார் புலிகள் அழிவார்கள் என்று. 2000 ஆண்டுக்குப் பின் தனிய நின்று சதிராடும் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எங்கு கூட்டாக இணைந்து அமைதி காக்கப்படுமோ அதுவே நிலைத்து நிற்கும். சூரியனின் காலம் போல் 2000ல் சந்திரனின் பலன் ஆரம்பித்துள்ளது. இது என்றும் ஒத்தோடும் உலகவாழ்க்கையையே காட்டுகிறது. 29 எண்ணைக் விதியெண்ணாக்கொண்ட கொண்ட பிரபாகரனுக்கு 2009 அழிவுகாலம்: அதோபோல் 29 விதியெண்ணாக்கொண்ட இராஜபக்கவுக்கு உயர்வுகாலம்: பிரபாவின் பிறப்பெண் 26 தலைமறைவு வாழ்கை; சடுதியான நடவடிக்கைள்; சடுதியான சாவு. 18ம் திகதியைக் கொண்டு ராஜபக்கசவுக்கு போர்; போரினால் மதிப்பு; சிவப்புச்சால்வை சின்னம். இங்கே ராஜபக்கச கூட்டு வென்றது தனிமனிதன் பிரபாஅழிந்தான்.
  ஜெயபாலன்! பல்லி நல்லாகப் போட்டு பிடிப்பார். இவரும் பிரபா ராஜபக்ச குழுமமாக்கும். கவ்விநீரோ அவ்வளவுதான் உயிர்கோகிடும் கவனம். பல்லி பெயருக்கத்தான் பல்லி. தூண்டில் போடுவதில் புலி ஐயா புலி.

  சாந்தன்/இதற்கு நல்ல உதாரணம் ‘வங்கம் தந்த பாடம்’ அடிச்சு மக்களுக்கு ‘விழிப்புணர்வு ஏற்றி’ கடைசியாக இந்திய சதியில் வீழ்ந்தது எமது இயக்கமான புளொட் அல்லவா? / வங்கம் தந்தபாடத்துக்கும் புளொட்டுக்கும் என்ன தொடர்பு. இப்புத்தகம் எப்போ வெளிவந்தது தெரியுமா? இது வட்டுக்கோட்டை மகாநாட்டுக்கு முன் வெளிவந்தது. அப்போ புளொட் என்று ஒரு நாமமே கிடையாது.

  /கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் ராதா குறித்து கவிதை எழுதியிருக்கலாம். ஆனால் இவரும் சுயநலம் கருதி பேசுபவர். இவரையும் புளொட் ஒதுக்கியது. இவர் அடையாறில் தனியாகவே இருந்தார். காரணம் இவர் கவிஞர்கள் போல் நேரத்துக்கு ஏற்றாற் போல் மாறிப் பேசுவதால். இடதுசாரி போல் வாழலாம். ஆனால் இடதுசாரியும் இல்லை. வலதுசாரியும் இல்லை. ஏதோ ஆரம்ப கால உறுப்பினர்கள் என்பதைத் தவிர அடுத்த நகர்வு குறித்துக் கூட சிந்திக்காதவர்கள். பழகும் போது இனிமையாக இருப்பார். இவரது கருத்துக்கு மறுகருத்து சொன்னால் சினக்கத் தொடங்கிவிடுவார். எனவே இவரோடும் தொடர்ந்து கருத்தியலோடு பயணிக்க முடியாது/ மாயா சொன்ன அவ்வளவும் உண்மை. உங்களுக்குத் தெரியுமான வஐச ஜெயபாலன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி குடுத்தபோது வஐச வை அரசியல் இராணுவ ஆய்வாளர் என அவர் தனக்குத் தானே கொடுத்த பட்டத்தைப் போட்டிருந்தார்கள். எந்த யூனிவர்சிற்றி இவருக்கு இப்பட்டம் கொடுத்தது. நோர்வேயில் இருந்து 3ம் உலகநாடுகளுக்கென ஒருக்கிய பணத்துடன் இந்தியாவில் லூட்டியடிக்கிராம். புதிய விசை மின்னியங்கி எம்பி 5 எப்படி இருக்கும் என்று வஐச விடம் கேட்டுச் சொல்வீர்களா? இவர் இராணுவப்புவியியல் ஆய்வாளராம்.

  முரளி மயிலிட்டியல்ல. புன்னாலைக்கட்டுவன்.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /பல்லி குறிப்பிடுவது போல் நான் சுளிபுர மண்ணின் சொந்தக்காரன் அல்ல. அனுராதபுரம் நான் பிறந்து தவழ்ந்த மண். சுளிபுரத்தைக் காட்டிலும் அனுராதபுர மண்ணில் எனக்குப் பற்று அதிகம்./—
  அனுராதபுர தெண்கொண்டார் என்ற பல ஆயிரம் வருடங்களாக வழங்கிவரும் பட்டப் பெயர் பற்றி உங்களுக்கு ஏதவது தெரியுமா?.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  “வடஈழ மறவர் மான்மியம்”
  “முருகன் அருள்”
  3ஃ2, இராமகிருஷ்ண ரெறேஸ்
  வெள்ளவத்தை
  1971ம் ஆண்டு மார்கழித் திங்கள் 22ம் திக
  சில வருடங்களுக்கு முன் நான் நெடுந்தீவிலிருந்து ஊர்காவற்றுறைக்கு மோட்டார் வள்ளத்தில் வரும் போது. அவ்வள்ளத்திலுள்ள இரு முதியவர்களின் மத்தியில் நடைபெற்ற சிறு சம்பாஷணையே நான் இந்நூல் எழுதுவதற்கு மூலகாரணம். “நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும், காலகதியில் இவர்கள் போர்த்துக்கேயரோடு சம்பந்தம் செய்தார்களென்றும், இதன் பிற்பாடே இவர்களை இழிகுலத்தார்களென்று மக்கள் அழைத்தார்களென்றும், மற்றப்படி உள்ளபடியே இவர்கள் மேன்குல மக்களென்றும்” ஒரு முதியவர் சொல்லி முடித்தார்.
  வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
  சோகேன் அத்தை நின்னீன்றனனே
  பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி
  அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
  புகர்முகக் குஞ்சர மெறிந்த எஃகம்
  அதன்முகத் தொழிய நீபோந்தனையே
  அதனால் எம்மில் செய்யாப் பெரும்பழி செய்த
  கல்லாக் காளையை ஈன்ற வயிறே

  எனக் கூறி மிகவும் மனம் வருந்தி வெறுப்பாள். இவ்வாறே மறவர் குலத்து மகளிர்கள் வீரஞ்செறிந்த பெண்மணிகளாகத் திகழ்ந்துள்ளனர்.

  இம்மறவர் குலத்தவர் உயர்குடி மக்கள். இவர்களைத் தமிழகம் மிகவும் கௌரவமாகமதித்தது. தமிழர்களின் வீரத்துக்கு வித்திட்டவர்கள் இக்குலத்தவர்களே யாவர். இவர்களை மாறன், சேர்ப்பன், தேவன், மறவன், அகம்படியார், கள்ளர் செயங்கொண்டார், தென்கொண்டார், தொண்டைமண்டலத்தார், படையாட்சியார், வண்டையார் முதலாம் சிறப்புப் பெயர் கொண்டழைப்பர்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //முரளி மயிலிட்டி அல்ல என்பது எனது கருத்து – rohan//

  ஆம் முரளி தையிட்டியைச் சேர்நதவர்.

  Reply
 • சங்கர்சன்
  சங்கர்சன்

  “…வங்கம் தந்தபாடத்துக்கும் புளொட்டுக்கும் என்ன தொடர்பு….”

  சந்ததியாருக்கும் புளொட்டுக்கும் என்ன தொடர்போ அதே தொடர்புதான்! ஆனைக்கோட்டை பொலிஸ்ரேசன் கிளிநொச்சி வங்கிக்கொள்ளை எல்லாம் கலந்து கொண்டிருக்கிறியள். 1984 க்கு பிறகு ஆயுதமே தொடேல்லை எண்டு ஒப்புதல் வாக்குமூலம் குடுக்கிறியள். அரசியல் ஞானம் வளர்க்க புளொட் அடிச்ச புத்தகமே உங்களுக்கு தெரியேல்ல! நீங்கள் ‘அமிர்’ எழுதினது எண்டு சொல்லேக்க ஒருவேளை சந்ததியார்தான் அமிரோ எண்டு நினைச்சன் இப்பதான் விளங்குது நீங்கள் எங்க நிக்கிறியள் எண்டு. நீங்கள் புகழ்மிக்க யாழ் இந்துவின் மாணவன் எண்டு வேற சொல்லி பள்ளிக்கூட பெயரையும் கெடுத்திட்டியளே? நியாயமா குசும்பு?

  ”… இப்புத்தகம் எப்போ வெளிவந்தது தெரியுமா?…”

  நான் அறிய 1984 இல் வந்தது! (5 ரூபாய் விற்பனை விலை)

  ”…. இது வட்டுக்கோட்டை மகாநாட்டுக்கு முன் வெளிவந்தது. ….”
  அண்ணையாண நான் உந்தக்கதை கேள்விப்படவே இல்லை!

  ”…அப்போ புளொட் என்று ஒரு நாமமே கிடையாது….”

  உண்மைதான்.புளொட் இருந்துதோ என்னவோ தெரியாது ஆனால் கடைசியில் ”நாமம்” எண்டது எங்களுக்கு புளொட் வந்த பிறகு தான் போடுப்பட்டது !

  Reply
 • மாயா
  மாயா

  // முரளி மயிலிட்டியல்ல. புன்னாலைக்கட்டுவன்.- Kusumbo //

  சரியான தகவலுக்கு நன்றி Kusumbo. உங்கள் கருத்துகளை உங்களது நேர்மையைக் காட்டுகிறது. மகிழ்வாயிருக்கிறது.

  இது போன்றவர்கள் எழுதுவதால்தான் பலர் தெளிவடைவார்கள். கிளித்தட்டு பாய்பவர்களால் மக்கள் நடுத் தெருவில்தான். நாம் முகத்தைத்தான் காட்டவில்லை. நேர்மையாக இருந்தாவது மக்களை வழி நடத்தலாம்.

  // மாயா கூறுவது போல் அரசியலில் எதிர்வு கூறுவது கடினம்.//

  புலிகளிடம் கருத்தியல் இல்லை. கொலையியல் மட்டுமே புலிகளிடம் உள்ளது. எனவே தாயக மக்கள் வெறுத்தொதுக்குவர். கடந்த காலத்தை வன்னி மக்களால் மறக்க இயலாது. அதேதான் கூட்டமைப்புக்கும்.

  PLOTE, EPRLF , EPDP ஆகியவை ஏதாவது செய்து கொண்டு இருக்கும். Telo, செல்வம் அடைக்கலநாதனாலும் EROS பாலகுமாராலும் களை இழந்து போனது வேதனை. புதியவர்கள் வழி நடத்த வேண்டும்.

  Reply
 • மாயா
  மாயா

  // “…வங்கம் தந்தபாடத்துக்கும் புளொட்டுக்கும் என்ன தொடர்பு….”….நான் அறிய 1984 இல் வந்தது! (5 ரூபாய் விற்பனை விலை) – சங்கர்சன்//

  புத்தகம் 1984ல் வந்திருக்கலாம். அல்லது அக் காலத்தில் இந்தியாவில்தான் வெளியானது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் போதல்ல. கிழக்கு பாகிஸ்தான் பிரிவினைக்காக பயிற்சியளிக்கப்பட்ட பங்களாதேஷ் முக்திபாகினி படை இளைஞர்களையும் , வங்கதேசத்து மக்களையும் இந்தியா கொன்றவை போன்ற தகவல்களை உள்ளடக்கியதாக வந்திருந்தது. இதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தம் எந்த அளவு என்பது சரியாகத் தெரியாது. காரணம் சந்ததியார் புளொட்டை விட்டு வெளியான பின்னரே இப் புத்தகம் வெளிவந்தது.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  சங்கர்சன்! நான் அமிர் எழுதியதாக எண்ணினேன் என்று எழுதியிருந்தேன். அது சந்ததியாக இருந்தாலும் நான் அதை உறுதியாச் சொல்ல முடியும்.1980க்கு முன் அப்புத்தகத்தை வாசித்தேன். 1970ல் வங்கம் பிரிந்தது. இந்த வங்காளதேசத்தின் வரலாற்று எமக்கு என்ன சொல்கிறது என்பதூடாக ஈழம் சாத்தியமா எனும் பொருள்பட எழுதப்பட்ட ஒரு சின்ன மெல்லிய புத்தகம். எத்தனை பிரதிகளை யாரும் அடித்து விற்கலாம். அதன் முதற்பிரதி 1980க்கு முன் வந்தது. சிலவேளை அதே பெயருடன் சந்ததி வேறு ஏதாவது புளொட்டின் பிரசாரத்துக்காக எழுதியிருந்தால் அது எனக்குத் தெரியாது. நீங்கள் வாசிக்கவில்லை தெரியாது என்பதற்காக நான் வாசிக்கவில்லை; அது பொய் என்று உங்களால் கூறமுடியாது.

  /நீங்கள் புகழ்மிக்க யாழ் இந்துவின் மாணவன் எண்டு வேற சொல்லி பள்ளிக்கூட பெயரையும் கெடுத்திட்டியளே?/ எனக்கும் நக்கலாகவும் நளினமாகவும் எழுதமுடியும். என்னால் யாழ் இந்துக்கல்லூரிக்கு என்ன பங்கம் வந்தது? கூறமுடியுமா?
  /சந்ததியார்தான் அமிரோ எண்டு நினைச்சன் / இதில் இருந்து தெரிகிறது உமது அரசியல் ஞானம்.
  நான் எழுதியதை மீண்டும் இங்கு தருகிறேன் /நான் சிறுவனாக இருந்த போது வாசித்தேன். அதை எழுதியது அமிர் என்று நினைக்கிறேன்/ என்று நினைக்கிறேன் என்றால் அது உறுதியானது இல்லை என்று அர்த்தம்…

  நன்றி மாயா! எனக்குள் என்றும் ஒருதிருப்தி நான் அரசியல் வியாபாரமோ விபச்சாரமோ செய்ய வில்லை என்பதில் நேர்மையாகப் போராடினோம் மக்களை எழுற்சியுறச் செய்தோம் போராட்டம் பாதைமாறும் போது எமது கருத்துக்களை நேரே வைத்துவிட்டு வெளியேறினோம். நாம் பலரைப்போல் பார்வையாளராக இருக்கவில்லை பங்காளிகளாக இருந்தோம். யார் எதையும் எப்படியும் கூறலாம். இது அவர்கள் காலம். எனக்குத் தெரிந்தவரை அனைத்தையும் சரியாகத்தான் எழுதியுள்ளேன்.

  Reply
 • rohan
  rohan

  பார்த்திபன் //ஆம் முரளி தையிட்டியைச் சேர்நதவர்.//

  மாயா // முரளி மயிலிட்டியல்ல. புன்னாலைக்கட்டுவன்.- குசும்பூ//

  சரியான தகவலுக்கு நன்றி .. குசும்பூவின் தகவல் அல்ல – பார்த்திபன் தகவலே சரியானது.

  Reply
 • Waco
  Waco

  “யார் இந்த மோகன்குமார்?
  அவுஸ்திரேலியாவில் சிட்னியும் மெல்போணும் தனிததனி அமைப்பாளர்களைக் கொண்டன என்பது எனக்குத் தெரிந்த செய்தி (சரிஎன்று நம்புகிறேன்). இரண்டு மாநகரங்களிலும் யாழ்நகரைச் சேர்ந்த இருவரே பொறுப்பாளர்களாக உள்ளனர் என்றும் அறிகிறேன்.” – Rohan.

  Dear Rohan,
  Mohankumar is a native of VVT and son of a Jaffna school principal. Educated in England and later settled in Sydney Australia. Though Mohankumar is not the present chief of the LTTE frontal organisation in Sydney in the past he had held the post. Moreover in the background he got more real power than the LTTE’s Sydney and Melbourne’s figure heads. Mohankumar is a rich and energetic man. He runs a 24 hours Tamil Radio in Sydney and melbourne. He has many properties and businesses in Australia many of them are suspected of bought by LTTE’s money as an investment for LTTE. In a nutshell it is obvious that VVT natives are the ones who manages LTTE funds world around.

  Reply
 • palli
  palli

  சந்ததி ஏன் புளொட்டால் விலக்கபட்டார்?
  அவர் செய்த குற்றம் என்ன?
  அவர் மட்டும்தான் கொல்லபட்டாரா?
  அவருடன் பிரிந்து சென்றவர்கள் யார்?
  இத்தனைக்கும் விடை காணுங்கள் வங்கம் தந்த பாடம் ஏன் வெளியானது எப்படி வெளியானது என்பது சந்தேகத்துக்கு இடம்இன்றி தெரியவரும்;

  சந்ததி பிரிந்து சென்றாரா? அல்லது விலக்கபட்டாரா? அப்படியாயின் அவர் விலகி ஏதாவது அமைப்பு தொடங்கினாரா? அல்லது அப்படி ஏதும் சிந்தனை அவரிடம் இருந்ததா? சந்ததியுடன் இனைந்து பிரிந்து சென்ற அல்லது விலக்கபட்ட முக்கிய புளொட் உறுப்பினர்கள் யார்? இவர்கள் பிரிந்து சென்றபின் உமாவுடன் ஏதாவது பேச்சு வார்த்தை நடந்ததா? சந்ததியின் விலகலுக்கு அல்லது பிரிவுக்கோ புளொட் மத்தியகுழு என்ன முடிவு செய்தது; அதில் இந்த பிரச்சனை பேசபட்டதா? இத்தனைக்கும் விடைகாணும் பட்ச்சத்தில் புதியதோர் உலகம் பிறந்த கதை தெரியும்; அதைவிட்டு திருவிழாவில் போடும் கடைபோல் உங்களுக்கு வேண்டியதை எழுதிவிட்டு பல்லிக்கு கல் எறியலாமா?

  புளொட்டின் ஆரம்பகாலம் மிக நிதானமானது; இடையில் அது திசைமாறி காத்தான் சுந்தரம் அணியென பாகுபாடுபட்டு இறுதியில் சுந்தரம் அணியை உமா தனது சகாக்களாக நியமித்து அதனால் சிலர் ஓரம் கட்டபட்டு அதுவே பலரை பல வழியில் சந்தேகத்தை உருவாக்கியது என்பார்கள்; புளொட்டின் பல நல்ல திட்டங்கள்; மக்கள் இயக்கமாக இயங்கியது; பேச்சுரிமை இருந்தது(அதனாலேயே இயக்கம் பாழாய் போச்சு என இன்றய கழகத்தார் சொல்வார்கள்) இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் கை எழுத்து இடாதது; செயல்திட்டம் ஏதுமே இல்லாமல் இயக்க கூட்டை விரும்பாமல் இயங்க்கள் இனைந்தபோது அதில் தம்மை இனைத்து கொள்ளாதது; இன்று புலிகளிடம் இல்லாத நிர்வாகம் அன்று புளொட்டிடம் இருந்ததாம்; இத்தனைக்கும் மேலாக சகோதரயுத்தம் செய்யாது தம்மை ஒதுக்கி கொண்டது; இப்படி பாலஸ்தீனத்தில் பயிற்ச்சி எடுத்த 100 மேலான வீரர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் கிராமத்தவர்கள்; மலையக நண்பர்கள் ;சிங்கள நண்பர்கள் முஸ்லீம் மக்களை இனைத்து அமைப்பை உருவாக்கியது ஜெ வி பி தொடர்பு இப்படி பல திறமைகள் இருந்திச்சாம்; ஆனால் என்ன நடந்ததோ யார் யாருடன் இழுபறியோ இன்றுவரை தெரியாதாம் எல்லாமே சதாமின் நிர்வாகம் போல் ஒரு சில காலத்திலேயே சீர்குலைந்து விட்டதாம்; ஆக அந்த சீர்குலைவுக்கு என்ன காரனம் என்பதை அறிய சில பளய கழகத்தாருடன் விவாதிப்பது உகந்ததுதானே; அதைதான் பல்லியும் ஆமாசாமி போடாமல் நான் அறிந்தவை உன்மையா என தங்களிடம் பல்லியின் பாணியில் கடிக்கிறேன்;

  ஆகவே மாயாவோ அல்லது குசும்புவோ குளத்தில் இறங்கியவன் எல்லாம் நீச்சல் வீரனுமல்ல; கரையில் நிற்பவனெல்லாம் நீச்சல் தெரியாதவனுமல்ல; சந்தர்ப்பம் சூழ்நிலையும் சாதகமான போக்கும் யாருக்கு கிடைத்தாலும் யாரும் எதையும் சாதிக்கலாம் அல்லது சாகடிக்கலாம்; ஆனால் தமிழரின் துப்பாக்கியம் யாரும் சாதிக்க தமது சந்தர்ப்பத்தை செலவு செய்யாமல் சாகடிக்கவே அனைத்தையும் வரவாக பெற்றுகொண்டனர்; அம்முட்டுதான் சாமி;

  Reply
 • Kusumbo
  Kusumbo

  றோகான் நீங்கள் சொன்னது சரி. முரளி தையிட்டி இப்போ கனடாவில் இருக்கிறார். முன்னைய சுவீஸ்பொறுப்பாளர். நான் புன்னாலைக்கட்டுவன் என்றது பின்னைய சுவீஸ் பொறுப்பாளர்.

  Reply
 • மாயா
  மாயா

  //குளத்தில் இறங்கியவன் எல்லாம் நீச்சல் வீரனுமல்ல; கரையில் நிற்பவனெல்லாம் நீச்சல் தெரியாதவனுமல்ல; சந்தர்ப்பம் சூழ்நிலையும் சாதகமான போக்கும் யாருக்கு கிடைத்தாலும் யாரும் எதையும் சாதிக்கலாம் – பல்லி//
  எவனோ தள்ளி விட , கிணத்தில் விழுந்தவனை காப்பாற்றியதாக அவன் கெளரவிக்கப்பட்ட போது , என்னைத் தள்ளி விட்டவன் என் கையில் அகப்பட்டால் என்று கெளரவிக்கப்பட்டவன் தள்ளியவனை தேடியது போல, பல்லி பல்லைக் கடிப்பது எமக்கு கேட்கிறது. இதுதான் புலிக்கும் , ஒரிஜனல் மாற்று இயக்கக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களுக்குள் கடிபடுவோம். கத்துவோம். அடிபடுவோம். விட்டு வெளியேறுவோம். ஆனால் , அடுத்தவன் கையில் கோவணத்தைக் கொடுத்து விட்டு அம்மணமாக ஓட மாட்டோம். அவதானமாக இருப்போம்.

  புலிகள் வீழ்ந்து இரத்தம் காய முன்னமே எவ்வளவோ உள் குத்து வெட்டு, கடி. ஏனைய இயக்கங்கள் புலிகளால் இயங்க முடியாமல் எத்தனை வருடம்? அரை குறை கருத்துகளே வெளி வந்துள்ளன. இதற்கு காரணம் அவைகளுக்குள் உள்ள கருத்தியல் பலம்தான்.

  கருணா வெளியேறிமைதான் புலிகளுக்கு முதல் சறுக்கல் என்றால், அடுத்த இயக்கங்களில் எத்தனை பேர் வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப் பட்டார்கள். இருந்தாலும் புலிகள் அளவு துரோகங்கள் அடுத்த இயக்கங்களில் இடம்பெறவில்லை. படைகளோடு சேர்ந்து முன்னால் அடிபடவும் இல்லை. இவை சிந்திக்கப்பட வேண்டியது?

  Reply