COVID-19
COVID-19

உலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அவசர நிலை சேவை திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உலகளவில் தற்போது வரையில் ஏராளமான மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 56 இலட்சத்து 95 ஆயிரமாக பதிவாகியுள்ளது. மேலும் 10 இலட்சத்து 45 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உலகளவில் தற்போது 8 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் குறிப்பிட்டுள்ளார்.
இது உலக சனத்தொகையில் 10 இல் 1 என்ற அளவிற்கு அண்மித்த தொகையென்பது குறிப்பிடத்தக்கது.
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு வைத்தியசாலையின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.
இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.
அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-
ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது.
இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.
“வரலாற்றில் இல்லாதவகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களைக் கடந்து 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
கொரோனாதடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.
நாட்டில் இன்று (05.08.2020) புதிதாக நான்கு கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த நபரொருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இருவரும் மற்றும் சென்னையில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2838 ஆக அதிகரி்த்துள்ள அதே நேரம் , 13 நோயாளர்கள் இன்று பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதை அடுத்து, மொத்தமாக குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2537 ஆக அதிகரித்துள்ளது.