ஐ.நா. மனித உரிமைகள் சபை

ஐ.நா. மனித உரிமைகள் சபை

நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் – UNHRC

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இந்த சட்டத்தின் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை தடுக்கப்படலாமென பேரவையின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக சிவில் சமூகத்திற்கும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளுக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து பரிசீலிக்க வேண்டுமென, இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுகிறது. – இலங்கை நாடாளுமன்றில் அமைச்சர் அலி சப்ரி விசனம் !

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் நடத்தையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அவர்,

மனித உரிமைகள் பேரவையின் இந்த நடவடிக்கை அரசியல் பின்புலத்தை கொண்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மீறல்கள் தொடர்பாக, உள்ளக பொறிமுறை ஊடான விசாரணையையே அவசியம். மேலும் இலங்கை மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

“சிறைக்கைதிகள் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபை செல்வாக்கு செலுத்த முடியாது.” – நாமல்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேச சக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என  நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு பிரச்சினைகள் எழாது என குறிப்பிட்டுள்ள அவர், சிறைக்கைதிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்துவேன் என ஜனாதிபதி தனது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்க தீர்மானித்துள்ளோம். நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யப்போகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கைதிகளை தனித்தனியாக அவதானித்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக பல நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா மனித உரிமை அமர்வில் நாங்கள் உண்மையை தெரிவிப்போம் .” – நீதியமைச்சர் அலி சப்ரி

“காயங்களை எவ்வாறு ஆற்றலாம். ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது..” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில்  “மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை அமர்விற்காக அரசாங்கம் எவ்வாறு தயாராகின்றது? அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

பதில்- பயங்கரவாத மோதலின் இறுதியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் -முக்கியமான விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். காயங்களை எவ்வாறு ஆற்றலாம். ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு. சர்வதேச தரப்புதலையிடுவதற்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு நாங்கள் இவற்றை பயன்படுத்தவேண்டும்.
சர்வதேச தரப்பு தலையிட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். காயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும்.

ஆகவே நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் மேலும் முன்னேறுவோம் என்பதை எங்களின் நிலைப்பாடு.
நாங்கள் உண்மையை தெரிவிப்போம்  – வடக்குகிழக்கில் பிரச்சினைகள் உள்ளன அவற்றிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன. பேண்தகு இலக்குகள் சாத்தியமாகியுள்ளன. ஆகவே உலகிற்கு நாங்கள் இவற்றை காண்பித்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை அங்கீகரிக்கவேண்டும் என கோரவுள்ளோம்.

நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டுவருகின்றோம்- நல்லாட்சி அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியவில்லை.” என அவர் பதிலளித்துள்ளார்.

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம்.” – சந்திரிகா பண்டாரநாயக்க

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம்.” என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் என்று முதலே இலங்கை அரசுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்து கொண்டு அதற்குச் சவால்விடும் வகையில் இலங்கை அரசு செயற்பட்டது. அந்தச் சவால் தவிடுபொடியாகியுள்ளது.

ராஜபக்ச அரசின் வெளிவிவகாரக் கொள்கை படுதோல்வியடைந்துள்ளது. இது நாட்டுக்குப் பேரவமானம். நாட்டின் இன்றைய மோசமான நிலைக்கு இந்தத் தீர்மானம் சான்றாக அமைந்துள்ளது. இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து ஏற்படலாம்.

ஏனெனில் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு தட்டிக்கழிப்பதால் சர்வதேசம் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுபுறத்தில் நிரூபணமாகின்றது. இதனால் சர்வதேச அழுத்தங்கள் மேலும் இலங்கை மீது அதிகரிக்கும். என்ன நடந்தாலும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.