எஸ்.சிறிதரன்

எஸ்.சிறிதரன்

“மாபெரும் தேசிய தலைவர் ஒருவரின் தலைமையில் போராட்டமொன்றை வழிநடத்த முடியாத கருணா, கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ் மக்களுக்கான விடிவை பெற்றுக்கொடுப்பார் என்பது நகைப்பான விடயம்” – எஸ்.சிறிதரன்

“மாபெரும் தேசிய தலைவர் ஒருவரின் தலைமையில் போராட்டமொன்றை வழிநடத்த முடியாத கருணா, கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ் மக்களுக்கான விடிவை பெற்றுக்கொடுப்பார் என்பது நகைப்பான விடயம்”  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயாராகவுள்ளதாக விநாயாகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட கருத்து குறித்து, தனியார் செய்தி ஊடகாமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட கருணா அம்மான் வேறு, 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான விநாயகமூர்த்தி முரளிதரன் வேறு .

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகவும், தளபதியாகவும் செயற்பட்ட காலத்தில், தமிழர்களுக்காக ஆற்றிய பணிகளுக்காகவும், சேவைகளுக்காகவும் அதற்கான மரியாதை மற்றும் அந்தஸ்த்து ஆகியன கருணா அம்மானுக்கு தமிழர்கள் மத்தியில் இன்றும் உள்ளது. ஆனால், அதே கருணா அம்மான், விநாயகமூர்த்தி முரளிதரனாக மாறியதன் பின், அவர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்கள் என்பது தமிழ் மக்கள் மனங்களில் இன்றும் மறக்க முடியாதுள்ளது.

இவ்வாறான இரண்டு தராசு படிகளை கொண்ட ஒருவரே விநாயகமூர்த்தி முரளிதரன். மாபெரும் தேசிய தலைவர் ஒருவரின் தலைமையில் போராட்டமொன்றை வழிநடத்த முடியாத கருணா அம்மான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ் மக்களுக்கான விடிவை பெற்றுக்கொடுப்பார் என்பது நகைப்பான விடயம்”  என அவர் அந்த செவ்வியில் குறிப்பிட்டார்.