கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் உடல் நேற்று (30) மாலை அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, முஹம்மது ஹம்தி எனும் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜயசூரிய தெரிவித்துள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்