முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் எனப் பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகவிருந்த ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மகாவலி ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.