“யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.”- த.சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டது. இதே நேரம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக கொரோனா நோயாளர்கள் பயன்படுத்தும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

தற்போது, நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஒரு எரியூட்டி இயந்திரத்தினை பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் அதனைப் பொருத்தி அதனை பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்ப்பாணமாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பையன் மடல் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. கோம்பையன் மடல் பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றினை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அதற்கான தீர்வினை முன்வைப்போம். குறிப்பாக எரியூட்டி நிலையத்தினை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படுவதோடு, மருத்துவ கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *