ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திடீர் மின்சாரம் தடைப்பட்டால் மற்றும் மின்சாரத்தின் தேவை உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மின்சார சேமிப்பு கட்டமைமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொரிய குடியரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட மானிய உதவிக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹம்பாந்தோட்டை துணை மின் நிலையத்துக்கு அருகில், 8 மணித்தியாலங்களுக்கான 5 மெகாவோட் கொள்ளளவு கொண்ட மின்சாரம் சேமிக்கப்படும்.
இது தொடர்பான திட்டத்திற்காக கொரிய அரசாங்கம் 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் கைச்சாத்திடுவதற்கு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.