தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நிகழ்த்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர “வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எனவே வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.” என் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இந்த நாட்டுக்குள் தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல.
தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சட்டங்களை மீறினால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.