கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 உணவகங்களில், சுமார் 10,000 உணவகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுச்சாண்டி உரிமையாளர் சங்கஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 சிற்றுண்டிச் சாலைகளில் இதுவரையில் சுமார் 10,000 சிற்றுச்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் குறித்த உணவகங்கள் ரொட்டி, பாண், மாவு, இறைச்சி மற்றும் மீன் இன்மையால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைகள் பாண், முட்டை, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றிற்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும் நாட்டில் பாடசாலைகளில் 4,600 உணவகங்களும், 3,000 அரச நிறுவனங்களில் உணவகங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில், திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள் உட்பட பல்வேறு விசேட நிகழ்வுகளில் உணவு மற்றும் குடிபானங்கள் வழங்கும் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றிற்கு நிலவும் அதிக விலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது மற்றொரு காரணமாகும்.
மேலும் உள்நாட்டில் பாண், கேக் உற்பத்தி மற்றும் ஏனைய விசேட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 60,000 க்கும் மேற்பட்டோர் இவற்றினை தயாரிப்பதற்கான தேவையான மூலப்பொருட்கள் இன்மையால் இடை நடுவில் உற்பத்திகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் தோடம்பழம், வாழைப்பழங்கள் மற்றும் ஏனைய பழங்களை டொலரை பொருட்படுத்தாமல் தன்னிச்சையான விலைக்கு விற்கும் நியாயமற்ற வர்த்தக மாபியா இன்று நாட்டில் இயங்கி வருகிறது.
நுகர்வோர் பொருட்களை கட்டப்படுவதற்கு குறிப்பிட்ட விலைக் கட்டுப்பாடு இல்லாததே இந்த பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாகும்.
இன்று நாட்டில் இருக்கும் ஒருவர் உழைக்கும் பணத்திற்கு அதிகமாக உணவிற்காக பணத்தினை செலவிட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. மேலும் வர்த்தக மாபியாக்கள் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.