சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்சிக்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்குகின்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி கட்சியின் கொள்கைகளையும், கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது எந்தக் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.