“மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரை மையமாக கொண்டே அமைச்சர்கள் வடக்குக்கு வருகிறார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பில் பேசிய போதே அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை சிங்களதேசம் தற்போதே உணர தொடங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம், தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய இருக்கின்றது.
இதேவேளை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கின்ற நிலையில் அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.
பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போயிருக்கும் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில் முதலில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.