ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தாம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறே 21ஆவது திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் தனக்கு உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.