எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்காமல் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மாணித்துள்ளது.
பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்டவர்களும் பிரதமர் ரணிலுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அரசாங்கத்தை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமையும் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.