முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஹிருணிகா ஓர் இரும்புப் பெண். அவர் குண்டர்களுக்கு பயப்படவில்லை. ஜனாதிபதி மாளிகை முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஹிருணிகாவின் வீடும் மலக்கழிவால் தாக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியின் வீட்டின் முன்பாக பொரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமையம் நினைவில் கொள்ளத்தக்கது.