தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம்தோறும் சண்டை பிடிப்பதாகவும் இதனால் தன்னுடன் ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இன்றையதினம் தஞ்சம் அடைந்ததாக குறிப்பிட்டார். தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிசாரின் முறைப்பாட்டின் போது தெரிவித்தார்.