அரசாங்கம் மக்களை முட்டாள்கள் போல நடத்துகின்றது என ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது.
அரசாங்கம் மக்களை முட்டாள்கள் போல நடத்துகின்றது. அமைச்சர்கள்இருவரையும் பதவி விலக்கியுள்ளதன் மூலம் அரசாங்கம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுயல்கின்றது என நாங்கள் நம்புவோம் என அரசாங்கம் நினைக்கின்றது.
இது கவனத்தை திசைதிரும்பும் முயற்சி டொலர் நெருக்கடிகளிற்கு அமைச்சரவை மாற்றம் தீர்வல்ல பதவி விலக்குவது என்றால் ஜனாதிபதி மத்தியவங்கி ஆளுநரை பதவி விலக்கவேண்டும் அவரே நாட்டிற்கு டொலர் வருவதை தடுக்கும் கொள்கைகளை பின்பற்றுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.