அரசாங்கத்தினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியவில்லை – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு !

தற்போதை அரசாங்கத்தினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

பட்டப்பகலில் கூட வீடுகளுக்கு வந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பாதாள உலகக் குழுவினர் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

தேசிய பெருமை அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சி காரணமாக நாட்டில் விவசாயிகள் நிவாரணமாக பெற்ற உரத்தினை இழந்துள்ளதாகவும், தற்போதைய அறுவடை பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும், தேயிலை உற்பத்தி கூட வீழ்ச்சியடைந்து ஊழல் நிறைந்த ஆட்சி முறை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *