நிபந்தனைகள் காரணமாக ஓமான் வழங்க முன்வந்த கடனை நிராகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஓமான் வழங்க முன்வந்த 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஓமான் விதித்த நிபந்தனைகள் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
கடந்த ஓக்டோபர் மாதம் ஓமானிடமிருந்து கடன்களை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. ஓமான் விதித்த நிபந்தனைகள் குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ள டலஸ் அலகபெரும நிபந்தனைகள் குறித்து சில கரிசனைகள் காணப்பட்டன இந்த தருணத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது அது சிறந்த யோசனை என நினைத்தோம்,ஆனால் தற்போது அது நடைமுறைப்படுத்த முடியாத யோசனைiயாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.