கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது 15.86 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
74 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது 1,268 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் 141 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
151 தடவைகளில் 193 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 700 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கையிருப்புடன் 193 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வருடம் 158 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் கையிருப்புடன் 98 சந்தேகநபர்களை 73 சந்தர்ப்பங்களில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு 16 சந்தர்ப்பங்களில் 69 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் 27 சந்தேக நபர்களையும், 8 சந்தர்ப்பங்களில் 88 கிலோவுக்கும் அதிகமான ஹசீஸ் போதைப்பொருளுடன் 9 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.