இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய போட்டியை காண வந்த சிறுவனின் கையில் இருந்த காட்சி பலகை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.
சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸை பார்க்கும் நோக்கத்தில் தான் போட்டியை காண வந்ததாக குறித்த காட்சிப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவை மேற்கொண்டிருந்தார்.
அதில், போட்டியின் நான்காவது நாளான இன்று சிறுவன் போட்டியை காண வர வேண்டும் என்றும், அங்கு அவரை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.