Starlink இணையச் சேவையை நாட்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தனது டுவிட்டர் செய்தியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, ஒழுங்குபடுத்தும் விடயங்கள் மற்றும் இந்தச் சேவைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக முதன்மையாக கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி கீழ்வருமாறு:
Preliminary engagement was initiated with SpaceX in exploring the introduction of Starlink Internet Services in @SriLanka and the first round of discussions focused on regulatory aspects and prerequisites of initiating the service in the near future for Sri Lanka #Lka #trcsl
— TRCSL (@TRCSL) November 29, 2021