அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு ஒரே கட்டமாக தீர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆசிரியர் ‘அதிபர்கள்’ சங்கத்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர்-ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதிபர்-ஆசிரியர் வேதன பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்கப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வருகிறது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன