சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் ஆகிய பல பிரச்சினைகள் குறித்து கடுமையான புதிய கொள்கையின் கீழ் சட்டத்தைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவர் சமாதி ராஜபக்ஷ மற்றும் அதன் பணிப்பாளர் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன் போது புதிய வரிக் கொள்கையை அமுல்படுத்துவதன் மூலம் சிகரெட் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.