சில மோசடி சிறை அதிகாரிகளால் தனக்கு எதிரான அவதூறான சதி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மேலாண்மை மற்றும் சிறை மறுவாழ்வுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ஊழல் சிறை அதிகாரிகளின் திருட்டுகள் மற்றும் மோசடிகளைப் பிடிப்பதன் மூலம் சட்டத்தை அமுல்படுத்த சிறைக்குள் இருந்து தனக்கு ஒரு தகவல் கிடைத்ததாகவும், ஊழல் தடுப்பு திட்டத்தின் காரணமாக அவற்றை செய்ய முடியாததால் பல சிறை அதிகாரிகள் தன் மீது கோபம் கொண்டுள்ளனர்.
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றது உண்மைதான், ஆனால் அந்தச் சிறைச்சாலைகளில் குறிப்பிடும்படியான எந்த சம்பவமும் இடம்பெறவில்லை.
தான் அடிக்கடி சிறைச்சாலைகளுக்குச் செல்வதையும் செல்கள் மற்றும் சமையலறைகளை ஆய்வு செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன் தான் ஒரு அழகு ராணியுடன் சிறைக்கு சென்றதாக பொய்யான வதந்திகளை பரப்பியதாகவும், அப்போதுதான் அத்தகைய பெண்ணைப் பற்றி தான் கேள்விப்பட்டதாகவும் ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் தனக்கு தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.