24 வருடங்களாக தீர்க்கப்படாத அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி அமைச்சர் தினேஸ் குனவர்தன தெரிவித்தார்.
இதன்படி
ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு உட்பட பல தீர்வுகளை அமைச்சரவை வழங்க முன்வந்துள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் , ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு ‘கோரப்பட்ட தீர்வுகளை வழங்காமல்’ செப்ரெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு ரூ. .5,000 கொடுப்பனவை வழங்குவதற்கான முன்மொழிவு ‘தெளிவாக ஆசிரியர்களை ஏமாற்றுவது’ என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர் துணை அதிபர் அறிக்கையில் கூட குறிப்பிடப்படாத இந்த முன்மொழிவை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் ஏற்கவில்லை என்றும், அவர்களின் திட்டங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.