இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
துறைமுகநகர வேலைத்திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதுதொடர்பாக உத்தியோகப்பூர்வமாக சீனா அரச நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மொழி பெயர்ப்பலகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது அதிகமாகியுள்ள நிலையில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பில் தங்களுடைய விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து குறித்த நிறுவனத்துக்கு சீன தூதரகமும் மொழிக்கொள்கை தொடர்பில் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.