மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கானா ஃபாஸ்கோவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கானா ஃபாஸ்கோ 1960ம் ஆண்டு பிரான்சின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. புர்கானா ஃபாஸ்கோவைச் சுற்றி மாலி, நைஜர், பெனின், டோகோ, கானா, கோட்டிவார் ஆகிய நாடுகள் உள்ளன. 1980-கள் வரை அரசின் சீரற்ற நிலையில், பல கட்சிகள் இந்நாட்டை ஆண்டன. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கானா மற்றும் கோட்டிவார் போன்ற அயல்நாடுகளுக்கு பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
புர்கானா ஃபாஸ்கோவில் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவதுண்டு. இந்நிலையில், நேற்று காயாவில் 30 பேரை, தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நைஜர் எல்லை அருகே கொமான்ஜாரி மாகாண கிராமம் ஒன்றில், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 100 பேர், வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த பயங்கரவாதிகள் அல்கய்தா மற்றும் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.