உலகிலேயே கொரோனா தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக இந்தியாவில் ஒரேநாளில் 4 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 3 ஆயிரத்து 980 பேர் கொரோனாவுக்கு பலியாகிவுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 980 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 168-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 35 லட்சத்து 66 ஆயிரத்து 398 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.