“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஆதரவினை வழங்க வேண்டும்.” என நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்..
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக சுயாதீனமாக செயற்படுவதற்கு நீதிமன்றங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஆதரவினை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.