“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு பதில் அளிக்கையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உலகின் முக்கியமான நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளதால் இன்னொரு நாடு திருகோணமலை துறைமுகத்தை கோரும் நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வேறு எந்த அரசாங்கமும் வெளிநாடுகள் இலங்கையில் நிரந்தரமாக கால்பதிப்பதற்கு அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அதேவேளை அந்த அரசாங்கங்கள் உலக நாடுகளுடன் சிறந்த உறவுகளை பேணிண எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 100, 150வருடங்கள் நிரந்தரமாக கால்பதிப்பதற்கான நிலையை வெளிநாடுகள் உருவாக்கியுள்ளன என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த 25 வருடங்களிற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகநகரம் மூலம் இலங்கைக்கு எந்த வருமானமும் கிடைக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.