தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையிட்டு மனுவை மாகாண குடியியல் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அகில இலங்கை காங்கிரஸ் அறிவித்தது.
இதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வி.மணிவண்ணன், பா.மயூரன் தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் மாகாண குடியியல் மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையை செல்லுபடியற்றதாக்க கோரியிருந்தனர். இந்த மனுவை மாகாண குடியியல் மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.