“இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு சம்பவம்.” என இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் தெரிவித்தார்.
தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இலங்கையில் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் காயத்தை ஏற்படுத்தும். சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் பொருளாதாரம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும்” – என்றுள்ளது.