விமானப்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, முல்லைத்தீவில் இன்று (திங்கட்கிழமை) நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, கேப்பாப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான நூலகம் மாணவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் குரூப் கெப்டன் ஏ.டி.ஆர்.லியன ஆராச்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நூலக கட்டடம் திறந்துவைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.