வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண
சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(11.02.2021) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பி
லேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கில் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்
கைகளை மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களுடன்
கலந்துரையாடி மேற்கொண்டுள்ளோம்.
முதற்கட்டமாக 30 தொடக்கம் 60 வரையானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும். அவர்கள் குறித்த பெயர் விவரங்கள் பிரதேச செயலர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதேச செயலக ஊழியர்
களே ஒழுங்குபடுத்தி அழைத்து வருவர். வடக்கில் தடுப்பூசி போடு
வதற்காக 118 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்ற உடனடியாகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும்” என்றார்.