“தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிர்த்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுபட்டு இன்றுடன் 73 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் , இலங்கையின் சுதந்திர தினத்துக்காக சஜித்பிரேமதாஸ வழங்கிய வாழ்த்துச்செய்தியலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது ,
ஒட்டுமொத்தமாக நாட்டின் வெற்றிகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 73 ஆண்டுகளில் எங்களுக்கு அனுபவத்தை அளித்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.
நாட்டின் இறையாண்மை வெளிப்புற குறுக்கீட்டால் பாதிக்கப் படுவதைத் தடுக்கவும் உள்ளூர் வளங்களைப் பாதுகாக்கவும், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, மத, ஊடகங்கள் போன்றவை பாதுகாப்பது நமது கடமை.
எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இனம், மதம், கட்சி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே தாயின் பிள்ளைகளாக பணியாற்றிய வரலாறும் மிகவும் உணர்வுப்பூர்வமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை கொண்ட நாட்டில் ஒரு கொடியின் நிழலில் வாழ வேண்டும் என்ற தூய்மையான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.