“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(18.01.2021) மண்டைதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனைக் கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு,கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
போன தடவையும் பொலிஸார் பஸ்ஸுடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வர முயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாகச் சொல்கின்றோம் , பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு,கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள அவர் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என வேலணை பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த பைலை என்னால் முடியாது என திருப்பி அனுப்புங்கள் எனவும் சிவாஜிலிங்கம் வேலணை பிரதேச செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.