வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குத் தெரியும் என்று இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஹைம் இஷத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைம் இஷத் கூறும்போது, “வேற்றுகிரக வாசிகள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். இருப்பினும் வேற்றுகிரக வாசிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளனர். ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு இணையாக விண்வெளியை அறிவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நன்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஹைம் இஷத் இத்தகவலை இஸ்ரேலின் முக்கியமான நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இக்கருத்து குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.