இலங்கையில் கொரோனா வைரஸினுடைய பரவல் குறையாது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.
இதே நேரம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோருள் மேலும் 344 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது 7 ஆயிரத்து 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 461 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.