புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளிற்கு முகநூலில் வாழ்த்து பதிவிட்ட நால்வர் கைது! 

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 வது பிறந்ததினத்தையிட்டு நேற்று (26) அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்து 3 நாட்கள் காவல்துறை தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர் .

இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த 90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *