“நீங்கள் ஆள்பவர்கள், தமிழர்கள் அடிமைகள் எனும் மனநிலையில் இருந்து மாறுங்கள்” என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆட்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாவீர்தின நினைவேந்தலுக்கு இம்முறை நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தடைகளை மீறி செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (26.11.2020) கருத்து தெரிவிக்கும்போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கும் போது ,
“எந்த அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமையை தடுக்க முடியாது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களிடம் சொல்ல விரும்புவது, தமிழர்களின் உரிமைகளை தடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எனவே நாங்கள் நினைவேந்தல் செய்வதற்கு இடையூறு விளைவிக்காது இருக்க வேண்டும்.
ஒரே நாட்டினுள் ஒற்றுமையாக வாழவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். எனவே தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் நீங்கள் ஆள்பவர்கள், தமிழர்கள் அடிமைகள் எனும் மனநிலையில் இருந்து மாறுங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.