அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது. மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயகமும் அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்பாகும்.
ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்திற்கும் சட்டப்படியான அவற்றின் செயற்பாட்டிற்கும் வருகின்ற சகல அச்சுறுத்தல்களையும் கடுமையாக எதிர்த்துநின்று வெற்றிகொள்ள வேண்டும். அதை அமெரிக்கா நிரூபித்திருக்கிறது.
அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் இலங்கையினுடைய ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ , பிரதமர் மகிந்த ராஜபக்ஷ , எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாஸ போன்றோரும் ஜோபைடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.