கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பலர் இது தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.
இதன் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, “இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியானதே என கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் , ஒரு பௌத்தனாக பௌத்த சடங்குகளையும் போதனைகளையும் தான் பின்பற்றுவேன் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.
அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.