விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு- ஏறாவூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பபட்டது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் கே. வாஜித் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக நடைபெற்ற இப்போராட்டத்தில் குறைந்த தொகையினரே பங்கேற்றனர்.
‘பிரித்தானிய அரசே! புலிகள் மீதான தடையை நீக்காதே’ என்ற வாசகம் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாதையொன்றை கவனயீர்ப்புப் போராட்டக்காரர்கள் ஏந்திநின்றனர். இதையடுத்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஊடாக இலண்டன் உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கான மகஜர் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாறா மௌஜுதிடம் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கும் போது,
முழு மனித சமுதாயத்திற்கும் எதிராகச் செயற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகக்கருதி உலகிலுள்ள முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் தடைசெய்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இத்தடையை நீக்க மேற்கொள்ளும் முயற்சியானது சர்வதேச ரீதியில் பயங்கரவாத இயக்கம் மீதாக தடை வலுவிழந்துசெல்ல வாய்ப்பை ஏற்படுத்தும்.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக நட்டஈடு இதுவரை கிடைக்காத நிலையில் அவ்வமைப்பு மீதான தடை நீக்கப்பட்டால் அவ்வியக்கம் சாதாரண ஓர் அமைப்பாகவே கருதப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பிரித்தானியா புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த மீள்பரிசீலனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம் – பற்றி நீவ்ஸ்.கொம்
Democracy
சிலரை (Nediyavan, Vinayagam??) அழுத்திக்கொண்டுவந்து சின்னமா புலிப்படையாக்கத் (karunas?) திட்டம்???
இந்தியாவின் இப்போதிருக்கும் நிலையில் தேவையில்லாததைப் பேசி, “ஆணிப் பதித்த கட்டைகளால்” மண்டையில் கொத்து வாங்காதீர்கள்!
தமிழ் மொழியில் எந்தவித அறிவியல் உண்மைகளும் இல்லை!
பழமையான மொழிகள் காலப்போக்கில் பலவித கலப்பு, அடுக்குகள், காரணமாக, “சிக்கலான” பல MEANING ங் உடையனவாக ஆகிவிடுகின்றன!
ஆனால், கீழ் அடுக்கில் (அகழ்வாராய்ச்சிப் போன்று), “எளிமை” இருக்கும்!
இந்த எளிமையை சீனமொழியில் கொண்டுவருவதைத்தான், “மாசே துங்” அவர்கள், இரத்த ஆறு ஓடிய “கலாச்சாரப் புரட்சி” என்றார்!
இந்த “எளிமை”, தொழில்நுட்பங்களை அறிவியலிலிருந்து புரிந்துக்கொள்ள தேவை. இதைத்தான் இந்திய “உந்துசக்தி விஞ்ஞானி” ஐயா நம்பி நாராயணன் அவர்கள் KNOW WHY என்கிறார்.
தமிழும், சம்ஸ்கிருதமும் இந்திய மொழிகள்தான்!
ஆனால், கலப்பு அதிகம் வடபகுதியிலிருந்து வந்துள்ளது. தமிழ் கொஞ்ச்ம BETTER ர். அதனால், முழுவதுவும் “இந்தி மயப்படுத்துதல்” மூலம் எதையும் சாதிக்கமுடியாது என்கிறோம்! அப்படியே விடவேண்டியதுதானே! முரண்டுப்பிடிப்பானேன்?
இது இந்திய CONTEXT க்கே பொருந்தும்.
இதேபோல்தான் ஒப்பீட்டளவில் கடற்கரை ஓர ஐரோப்பிய நாட்டு மொழிகள் (தமிழ்நாடு போலல்லாமல், ஐரோப்பிய கடற்கரை நாடுகளுக்கு பக்கத்தில் பலமொழி நாடுகள் உள்ளன) …
அதிகம் சிக்கலானவை!
ஆனால், LAND-LOCKED ட் ஜெர்மன் மொழி எளிமையானது ஆகையால் தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்தது!